"பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்" - 5
"பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்" - 5
"நான் ஒரு பெண். பிறப்புறுப்பில் சில நாட்களாக அரிப்பு இருந்து வந்தது. டாக்டரிடம் சென்று ஆலோசனை பெற்றதில் விரைவில் சரியாகிவிடும் என்று சொல்லி ஒரு க்ரீமை தடவச் சொன்னார். ஆனால் தற்போது அரிப்பும் வெள்ளையாக திரவம் போன்ற ஒன்று வடிகிறது வாடையுடன் கடந்த 3 நாட்களாக. இதுவரை உடலுறவு கொண்டதில்லை. அந்த இடத்தில் சிறு புள்ளியாய் கிள்ளியெடுத்தது போன்று இரு இடங்களில் இருக்கிறது. என்னவெண்று தெரியவில்லை. வலி ஏதும் இல்லை ஆனால் அரிப்பு உள்ளது. இதற்கு தீர்வு என்ன? ஆலோசனைகள் சொல்வீர்களா? மருந்துகள் ஏதேனும்??
இதனால் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளேன். வேலையிலும் ஈடுபாடின்றி இருக்கிறேன். கூடிய விரைவில் தங்களிடமிருந்து இதற்கான பதிலை பதிவின் மூலம் எதிர்நோக்கியுள்ளேன். நன்றிகள் பல"
அன்பு சகோதரி!
நீங்கள் கூறியுள்ள குறைந்த பட்சத் தகவல்களை வைத்துப் பார்க்கும் போது, இது ஒன்றும் பயப்படத்தக்க விஷயம் இல்லை எனவே கருதுகிறேன்.
உடலுறவு ஏதும் இல்லை எனச் சொல்வதால், இது ஒரு பால்வினை நோயாக இருக்க வாய்ப்பில்லை.
அரிப்பு, வாடை கலந்த வெள்ளை நிறத் திரவம் என்கையில் இது ஒரு நோய்தான் எனத் தெரிகிறது!
சாதாரணமாக, பெண்களுக்கு பிறப்புறுப்பில் ஒரு வெள்ளை நிறத் திரவம் வரும்
ஆனால், அதில் வாடை இருக்காது.
பாக்டீரியல் வஜைனோஸிஸ் [Bacterial vaginosis], அல்லது க்ளாமைடியா[Chlamydia] கிருமிகளின் தொந்தரவால் பால்வினை[sexullay transmitted diseases] அல்லாத இது போன்ற விளைவுகள் வரலாம்.
அப்போது வாடையுடன் கலந்த வெள்ளை [அ] பழுப்பு நிறத் திரவம் வரலாம்.
அரிப்பும் இருக்கக் கூடும்.
இதற்கு ஃப்லாஜைல்[Flagyl] என்கிற மெட்ரோநிடஸால்[Metronidazole] மாத்திரை மிகுந்த பயனளிக்கும்.
இது க்ரீம் [flagyl cream] வடிவிலும் கிடைக்கும் என்றாலும், ரத்தத்தில் கலந்த கிருமிகளை[bacteria] அழிக்க, மாத்திரை உட்கொள்வதே சிறந்தது.
500 [அ] 750 மில்லிகிராம் மாத்திரைகளை தினம் ஒன்றாக 7 நாட்களுக்கு எடுக்கவும்.
பலனளிக்கும் என நம்புகிறேன்.... நீங்கள் சொன்ன தகவல் அனைத்தும் உண்மையெனில்!
உபயோகித்தபின் தெரிவியுங்கள்!
Labels: kasadara, Q and A on sexology, VSK
22 Comments:
பயனுள்ள சேவை டாக்டர்.
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கு நன்றி நண்பரே!
ஐயா,
தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. தாங்கள் குறிப்பிட்டுள்ள மருந்துகளை எப்போது எடுத்துக் கொள்ள வேண்டும். காலையிலா? அல்லது இரவிலா? தெரியப்படுத்தினால் மகிழ்வேன். நன்றி
இதை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட நேரம், பொதுவாக இரவு படுக்கச் செல்ல ஒரு அரை மணி நேரத்துக்கு முன் எடுக்கவும்.
சாப்பிட்ட உடனேயே எடுத்துக் கொண்டால், சிலருக்கு, தலை சுற்றல், வாந்தி போன்றவை வரக்கூடும். எனவே, உணவு உட்கொண்ட 1 மணி நேரத்திற்குப் பிறகே இதை எடுத்தல் நல்லது.
ஒரே ஒரு மாத்திரை தான் 750 மி.கி.
அப்படி கிடைக்காவிட்டால், மூன்று 250 மி.கி. மாத்திரைகளாக ஒன்றன்பின் ஒன்றாக எடுக்கவும்.
மிக்க நன்றி ஐயா. உபயோகித்தபின் தெரிவிக்கிறேன்
பயனுள்ள சேவை வி.எஸ்.கே சார்!
வாழ்த்துக்கள்.
நன்றி ஆசானே! எங்கும் வந்து எம்மைக் காக்கும் ஆசானுக்கு நன்றி!:))
/////நன்றி ஆசானே! எங்கும் வந்து எம்மைக் காக்கும் ஆசானுக்கு நன்றி!:))////
வேலுடன் எங்கும் வந்து உங்களைக் காப்பவன் அந்த சேவற்கொடியோன்!
நான் அவன் அடியவன்; அதனால் உடன் வருவேன்:-))))
//வேலுடன் எங்கும் வந்து உங்களைக் காப்பவன் அந்த சேவற்கொடியோன்!
நான் அவன் அடியவன்; அதனால் உடன் வருவேன்:-))))//
அப்பனுக்குப் பாடம் சொன்ன அந்தச் சுப்பையனைத் தானே சொல்கிறீர்கள், ஆசானே!
எப்போதும் முன்னிற்பவராச்சே!:))
//வேலுடன் எங்கும் வந்து உங்களைக் காப்பவன் அந்த சேவற்கொடியோன்!
நான் அவன் அடியவன்; அதனால் உடன் வருவேன்:-))))//
என்ன கொடுமை இது, பாலியல் பதிவில் வேல் மயில் என்று இருவரும் ஒருவரை ஒருவர் புகழ்ந்து 'கொள்கிறீர்கள்' ஐயா சாமிகளா இது பக்தி சமாச்சாரம் இல்லை, பாலியல் சமாச்சாரம்
அட! தெரியும் கோவியாரே!
அப்படியாவது இது மாதிரி பின்னூட்டங்களால் இது முகப்புக்கு வந்து இன்னும் சிலர் படித்துப் பயன் பெறலாமே என்னும் நல்லெண்ணத்தில் ஆசான் செய்வதைப் போய் கொடுமை எனச் சொல்லுறீங்களே!
இப்பக்கூட, அதனால்தானே இங்கு வந்தீங்க!
:))
மருத்துவர் ஐயா,
தங்கள் ஆலோசனையினால் நலம் பெற்றேன். உதவிக்கும், மருந்துகள் பரிந்துரைக்கும் மிக்க நன்றி.
மிக்க மகிழ்ச்சி!
வாழ்க! வளமுடன்!
நல்ல முயற்சி, சிறந்த சேவை !!! வாழ்க நீ எம்மான்.,.
வி.எஸ்.கே அய்யா,
இதே போல், ஆண்களின் பாலியல் உறுப்புகளில் STD அல்லாத கிருமித் தொற்றால் ஏற்படும் நோய்கள் எதுவும் இருக்கிறதா?
அதாவது, உடலுறவு எதுவும் கொள்ளாத ஒரு ஆணின் பாலியல் உறுப்பு அல்லது அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏதேனும் நோய்/பிரச்சனை வர வாய்ப்பு இருக்கிறதா? அப்படி இருப்பின் அவற்றைப் பற்றி விளக்கமுடியுமா?
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !
இதைப் பாருங்கள் :)
http://blogintamil.blogspot.com/2009/01/2009.html
தொடருங்கள் !
payanulla paguthi. How can we avoid premature ejaculation?. Ungal karthukkalai thayavu koornthu pathiyu seiyavum....
//payanulla paguthi. How can we avoid premature ejaculation?. Ungal karthukkalai thayavu koornthu pathiyu seiyavum....//
விரைவில் தனி பதிவாக இதர்கு பதில் சொல்கிறேன். நன்றி.
இங்கே கேட்கலாம் என்று எண்ணுவதால் கேட்கிறேன். பிடிக்கவில்லையெனின் பதிலளிக்க வேண்டாம்.
சுய இன்பம் செய்யும்போது விந்து வெளியேற அதிக நேரம் ஆகிறது. ஆனால், உடலுறவு செய்ய முயலும்போது, எப்போதும் 1 அல்லது 2 வினாடிகளிலேயே வெளியேறிவிடுகிறது.
1- 1 அல்லது 2 நொடிகளில் வெளியேறிவிடுவது இயல்பானதுதானா?
2 - இதைச் சரி செய்ய என்ன செய்ய வேண்டும்?
//இங்கே கேட்கலாம் என்று எண்ணுவதால் கேட்கிறேன். பிடிக்கவில்லையெனின் பதிலளிக்க வேண்டாம்.
சுய இன்பம் செய்யும்போது விந்து வெளியேற அதிக நேரம் ஆகிறது. ஆனால், உடலுறவு செய்ய முயலும்போது, எப்போதும் 1 அல்லது 2 வினாடிகளிலேயே வெளியேறிவிடுகிறது.
1- 1 அல்லது 2 நொடிகளில் வெளியேறிவிடுவது இயல்பானதுதானா?
2 - இதைச் சரி செய்ய என்ன செய்ய வேண்டும்?//
கேள்விக்கு நன்றி. தயக்கமில்லாமல் கேட்கலாம் ஐயா.
இவை இரண்டுமே இரு வேறு செயல்பாடுகள் எனப் புரிந்து கொண்டால் இந்தக் குழப்பம் வர வாய்ப்பில்லை.
சுய இன்பம் கொள்ளும் போது உங்கள் ஒருவரின் உணர்ச்சிகளின் வெளிப்பாடே செயல்படுகிறது.
உடலின்பம் கொள்ளுகையில் இருவேறு உடல்களின் சங்கமத்தால் சுரக்கும் ஒரு சில திரவங்களும் இதில் துணையாவதால், செயல் எளிதாகிப் போகிறது. உணர்ச்சிகளின் வேகமும் இதற்கு ஒரு காரணம்.
1 அல்லது 2 நொடிகள் என்பது சற்று மிகையாகச் சொல்லப்பட்டிருக்கிறது என எண்ணுகிறேன்.
முறையான முன் விளையாட்டுகளின் மூலமும், ஒரு சில உடற் பயிற்சிகளின் மூலமும், இப்படி விந்து உடனே வெளியாவதைத் தடுக்க முடியும்.
காய்ஞ்ச மாடு கம்மங்கொல்லையில் விழுவதுபோல் விழாமல், சற்று ரசனையுடன் அணுகினால், இதுவும் நீடித்த இன்பம் தரச் செய்ய முடியும்.
மேல் விவரங்களை உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.
வாழ்த்துகள்.
Greetings VSK,
Can you please group all the பெற்றோருக்கு பாலியல் கல்வி with one tag?
This will help us to see all in one page .
Thank you
I will do so, Mr. BM. Thanks.
Post a Comment
<< Home