"எய்ட்ஸுக்கே உதவியா!! " -- [6]
"எய்ட்ஸுக்கே உதவியா!! " -- [6]

"சரி! வெளியே வந்தது தப்புன்னு நினைக்கிறேன்! வா! திரும்பி நடப்போம்!" எனச் சொல்லித் திரும்பினான் சுகுமார்.
"இன்னும் எதுனாச்சும் கேக்கணும்னா கேளு!' எனத் தூண்டினேன்!
"ஒரே ஒரு கேள்விதான்! ரத்தம் மூலமா, விந்து மூலமா இது பரவுதுன்னு சொன்னே!"
'ஆமாம்!'
"எவ்ளோ ரத்தம் அல்லது விந்து இன்னொருத்தர் உடல்ல கலக்கணும், இந்த நோய் வர்றதுக்கு? அப்படிக் கலந்தது எவ்ளோ நேரம் இது உயிரோட இருக்கும் ஒரு நோயா ஆகறதுக்கு! இதான் என் கேள்வி!"
'இந்த ஹெச்-ஐ.வி. நுண்கிருமி ஒரு துளி ரத்தத்தில் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன! இவை ரத்தத்தில் கலக்க ஒரு சில நொடிகளே போதும்! அப்படிக் கலந்த இந்தக் கிருமி ஒரு எதிர்ப்புகளைத் தடுக்கும் 'செல்'லை உடனே சென்றடையுது! அந்த நொடியில் இருந்தே இது தன்னைப் பல மடங்காக்கும் ஒரு தொழிற்சாலையாக இந்த 'செல்'லை மாற்ற ஆரம்பிக்கிறது. இதைத்தவிர, இன்னொரு பயமுறுத்தும் செய்தையையும் சொல்லிடறேன்! இந்தக் நுண்கிருமி 20 நிமிடங்களுக்கு மட்டுமே உயிரோடிருக்கும்! அதறகுள், இது அடுத்தவர் ரத்தத்துடன் கலக்க வேண்டும்! 20 நிமிடம் என்பது அதிக நேரம்... அதே சமயம் குறைந்த நேரமும் கூட!'
"என்னடா! கதி கலங்க வைக்கறே! அதே சமயம் ஒரு நல்ல சேதியும் சொல்றே! இன்னும் கொஞ்சம் விளக்கமாச் சொல்லேன்" எனக் கெஞ்சினான் சுகுமார்!
" பயப்பட ஒண்ணும் தேவையே இல்லை, உன் உடம்புல ஒரு கீறலும் இல்லேன்னா! ஒரு நோயாலியின் ரத்தம் உன் உடம்பில் பட்டுவிட்டதென்றால், உன் உடலில் ஒரு கீறலோடும் அது சம்பந்தப் படவில்லை என்றால், உடனே கழுவி விட்டால்.... ஒரு 20 நிமிடத்துக்குள் ... உனக்கு இந்த நோய் வரவே வராது! ஆனால், இதையே விந்து பற்றிச் சொல்ல முடியாது..... பாதுகாப்புச் சாதனக்கள் உபயோகிக்க வில்லைன்னா! அதனால, முறையான தடுப்பு சாதனங்கள் உபயோகிக்கலைன்னா, இதைத் த்டுப்பது ரொம்பவே கஷ்டம்னு மீண்டும் சொல்லிக்கறேன்! இதைப் புரிஞ்சு நடந்துகிட்டா எல்லாருக்கும் நல்லது! சரி வா! வீட்டுக்குப் போகலாம்' என்றேன்.
நடந்துகொண்டே பேசிக்கொண்டேயும் போனோம்!
"பச்சை குத்திக்கறதால கூட ஹெச்.ஐ.வி. வருமாடா" ?
'ஊசி மருந்துக்குச் சொன்ன அதே பதில்தான் இதுக்கும்! சரியாக சுத்திகரிக்கப்படாத, அல்லது முந்தைய ரத்தத்தில் தோய்க்கப்பட்ட உச்சிமுனைகளால் பச்சை குத்திக் கொண்டால், அப்படிப்பட்ட ஊசி இந்த நோய் இருந்த எவருக்காவது உபயோகப்படப்பட்டிருந்தால், ஹெச்.ஐ.வி. பரவ வாய்ப்பு இருக்கிறது. இதில் கவனமாயிருந்தால், பயப்படத் தேவையில்லை!'
"அப்படீன்னா, இது போன்ற எந்த தீய பழக்கங்களும் இல்லாமலே, மருத்துவத்துறையில் வேலை செய்யற சிலருக்கு இந்த நோய் வருகிறதே! என்ன காரணம்?"
'கவனக்குறைவுதான்! இங்கு அடிக்கடி வலியுறுத்தி வரும் ஒரே கருத்து இதுதான்! ஹெச்.ஐ.வி கிருமி பாதிக்கப்பட்டவரிடமிருந்து, ரத்தம், ஊசி, உடலில் சுரக்கும் நீர் இவற்றின் வழியாக மட்டுமே பரவும்..... எவராயிருந்தாலும்! சுத்திகரிக்கப்படாத இந்த முறைகளை ஒரு சிலர் அஜாக்கிரதையாக மருத்துவ மனைகளிலும் பயன்படுத்தும் போது, இவர்களுக்கு வரும் ஆபத்து இருக்கிறது. ஆனால், மற்றவர்களை விட, இவர்களுக்கு இது பற்றிய அறிவும், தடுப்பு முறைகளும் அதிகமாகவே இருப்பதால், இப்படி வரும் வாய்ப்பு மிகவும் அரிதே!'
"ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு விளையாடும் கபடி, கூடைப்பந்து போன்ற விளையாட்டில் ஈடுபடுபவர்களுக்கு?"
'பொதுவாக இதன் மூலம் ஹெச்-ஐ.வி- வர வாய்ப்பே இல்லை! எவருக்கவது அடிபட்டு, ரத்தம் வெளியாகும் நிலை இருந்தால், அவர் உடனடியாக அகற்றப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு, ரத்தப்போக்கு நின்றவுடன் மீண்டும் விளையாட்டில் கலந்து கொள்ளலாம். அவருக்கு ரத்தம் வருவதோடு கூட, கூட விளையாடுபவருக்கும் ஏதெனும் வெளிக்காயங்கள் இருந்து, அந்த ரத்தம் இதன் வழியே கலந்தால் மட்டுமே இது பரவலாம்! அப்படி இல்லேன்னா பயப்படத் தேவையில்லை!'
[தொடரும்]
3 Comments:
படிக்க படிக்க உண்மையிலே கதி கலங்குது.
ஒரு கிருமி 20 நிமிடம் வாழமுடியுமா!!! ஆ ஆ...
எஸ்.கே.
வைரஸ் என்றால் சாதாரணமாக எந்தப் பொருளின் மேலும் இருந்து தொற்றாது; நேரடியாக திரவத்தின் மூலமாகத் தொற்றினால் தான் உண்டு என்று படித்த நினைவு. ஹெச்.ஐ.வியும் வைரஸ் தானே. அப்படியிருக்க 20 நிமிடம் வரை வீரியத்தோடு இருக்குமா?
வைரஸ் உயிரோடு இருக்கும் என்று சொல்வதும் சரியா? பாக்டீரியா என்பது தான் உயிரி; வைரஸ் உயிரி இல்லை என்று படித்ததாக நினைவு.
நீங்கள் சொல்வது பாதி உண்மை. உயிருள்ள வைரஸ்களும்[living organisms] இருக்கின்றன உயிரில்லாது வெறும் என்சைம்கள் [coplex proteins with enzymes] மட்டுமே உள்ள வைரஸ்களும் இருக்கின்றன.
Post a Comment
<< Home