"கசடற"

அறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன். முழுக்க முழுக்க இவை என் கருத்துகள் மட்டுமே! முருகனருள் முன்னிற்கும்!

Monday, April 21, 2008

"எய்ட்ஸுக்கே உதவியா?!!" -- [9]

"எய்ட்ஸுக்கே உதவியா?!!" -- [9]




8-ம் பதிவு இங்கே

"இந்த தடுப்பு சாதனம், தடுப்பு சாதனம்னு சொல்றியே! அதெல்லாம் என்ன? எப்படி உபயோகிப்பது?ன்னு கொஞ்சம் சொல்றியா?" என்றான் மூர்த்தி.

'உடலுறவு கொள்ளும் போது, ஆணுறுப்பு விரைத்தவுடன், உடனே ஒரு ஆணுறை அணிவது அவசியம். இதை 'லேடெக்ஸ் காண்டம்'னு [Latex Condom] சொல்லுவாங்க.



பெண்ணுறுப்பு, ஆசனவாய், அல்லது வாய்வழி எந்த வழியில் உறவு கொள்ளுவதுன்னாலும் இதை அணிய வேண்டியது மிகவும் அவசியம், இந்த கிருமி பரவாமல் இருக்க வேண்டுமானால்......... அதாவது இது இருக்குமோ என சந்தேகிக்கும் ஒருவரிடம் மட்டுமே!

இந்தக் காண்டம் [ஆணுறை] கிழிந்துவிட்டது எனத் தெரிந்தால் உடனே உடலுறவைத் தொடராமல், புது ஆணுறை [காண்டம்] அணிந்த பின்னரே மீண்டும் இதில் ஈடுபட வேண்டும். இதைக் கவனத்தில் கொள்ளவும்.

விந்து வெளியேறியதும், மேற்கொண்டு தொடராமல், உடனே வெளியில் எடுத்து, சுத்தம் செய்து கொள்ளவும்..... இருவரும்!

ஒரு முறை உபயோகித்த உறையை மீண்டும் உபயோகிக்க வேண்டாம்! '

"ஓரினச் சேர்க்கையாளர்கள்தான்[Homosexuals] இந்த நோயை அதிகம் பெறுகிறார்கள் என்ற கருத்து ரொம்பவே அதிகமா இருக்கே... ... அது பத்தி என்ன சொல்றே நீ?' என்றான் சுகுமார்.

'நானும் படிச்சேன்! அதனாலத்தான் இதைப் பத்தி எழுதணும்னே தோணிச்சு. இப்ப சொல்றதை நல்லாக் கேட்டுக்க!


ஹெச்.ஐ.வி. கிருமி [HIV virus] நீ யாரு என்னன்னு பிரிச்சுப் பார்க்கிறதே இல்லை!

நீ பொண்ணுங்களோட மட்டும்தான் உறவு வைச்சிருக்கியா, இல்லை... ஆண், பெண் இப்படி ரெண்டு பேரோடயும் உறவு வைச்சிருக்கியா, இல்லை நீ ஓரினச் சேர்க்கை மட்டுமே வைச்சிருக்கியான்னு பேதம் பாக்கறதில்லை.

நீ என்ன பண்றேங்கறதை மட்டுமே பாக்குது!

தகாத முறையில் உறவு கொண்டால் இது வந்தே தீரும்.

ஓரினச் சேர்க்கையாளர்கள் இந்த முறையில் சற்று கவனக்குறைவாக இருப்பதால், [ஆசனவழி, வாய்வழி உறவே ஆண்களிடம் அதிகம்; பெண்கள் தவறான சாதனங்களைப் பயன்படுத்துவதால்] இது அவர்களிடம் அதிகமாகக் காணப் படுகிறது என்பது மட்டுமே உண்மை!

ஆனா, இப்பல்லாம் அவங்க கூட இதுல ரொம்ப விழிப்பா இருக்காங்க!

இது வரணும்னு யார் விரும்புவாங்க சொல்லு!

அதனால, இவங்களை மட்டுமே இதுக்கு காரணம்னு குறை சொல்றதை இத்தோட விடு! சரியா?'

"எல்லாம் சரிதாம்ப்பா! எல்லாம் விளக்கமா சொல்லிட்டே! இப்ப சில சந்தேகம் கேக்கப் போறேன்! அதுக்கும் பதில் சொல்லிடு! நான் ஒரு தெளிவோட போயிருவேன்" என்று வெள்ளந்தியாகச் சிரித்தான் சுகுமார்!

'சரி கேளு!' என்றேன்!

"ஒரு ஆளைப் பார்த்தவுடனேயே இவருக்கு எய்ட்ஸ் வந்திருக்குன்னு சொல்ல முடியுமா?"

முடியாது! இந்தக் கிருமியால் தாக்கப்பட்டபின், சோதனை செய்து உறுதிப்படுத்திக்கொள்ளாத, சிகிச்சை எடுக்காத ஒருவருக்குக் கூட இது சில ஆண்டுகள் கழித்தே தெரியவரும். சிகிச்சையை உடனேயே தொடங்கியவர்கள் பல ஆண்டுகளுக்கு இதைத் தள்ளிப் போட முடியும்!

"போதை மருந்து ஊசிகள் மூலம் இது வரும்னு சொல்ல முடியுமா?"

'இல்லை. ஆனால், போதை அளிக்கக் கூடிய எந்த ஒரு விஷயமுமே ஒருவருடைய முடிவெடுக்கும் தன்மையை பாதிப்பதால், இதற்கு அடிமையானவர்கள் பெரும்பாலும் தவறான செயலில் ஈடுபட அதிக வாய்ப்பிருப்பதால், இது அவர்களைத் தாக்கவும் செய்கிறது எனச் சொல்லலாம்!

"இதுக்குத் தடுப்பு ஊசில்லாம் வந்திருக்காமே?"

'இதுக்கான ஆராய்ச்சி எல்லாம் நடந்துகிட்டு இருக்கு. ஆனல், இது வரைக்கும் இதைத் தடுக்க எந்தவொரு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பு சாதனங்களை உபயோகிப்பது ஒன்றே இதைத் தடுக்கும் வழி. இதைத் தவிர இன்னும் பல வழிகளிலும் பரிசோதனைகளும், ஆராய்ச்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இவை எதுவும் முழுமையான பலன் அளிக்குதுன்னு இன்னும் உறுதியாச் சொல்ல முடியலை என்பதே உண்மை!'


"அப்போ இந்த மருந்து, மாத்திரையெல்லாம் ...... எதுக்காக சாப்பிடணும்? எப்படியும் வரத்தான் போகுதுன்ற! இதைச் சாப்பிடாட்டித்தான் என்ன ஆயிரும்?' கொஞ்சம் விரக்தியாகக் கேட்டான் மூர்த்தி

"இவ்ளோ நேரம் உங்கிட்ட சொன்னது எதுவுமே ஏறலியா உனக்கு! ஓ! நீ இப்பத்தான் வந்தே இல்ல? ஆரம்ப நிலையில் இந்த நோயைக் கண்டுபிடிச்சா, இந்த மருந்து மாத்திரைங்க மூலமா இதைக் கொஞ்சம் தள்ளிப் போட முடியும்னு சங்கர் சொன்னான். சரிதானேடா நான் சொல்றது!' என ஆர்வமாகக் கேட்டான் சுகுமார்!

'ரொம்பச் சரி! இன்னும் என்னல்லாம் தெரிஞ்சுகிட்டே சொல்லு பார்ப்போம்! ' என அவனைத் தூண்டினேன்!

"ரொம்பவே விளக்கமா சொல்லிட்டேப்பா! இனிமே யார் கேட்டாலும் இதைப் பத்தி நானும் உன்னைப் போலவே சொல்ல முடியும்!


முறையில்லாத உறவால இது வருது.

தடுப்பு சாதனங்களை உபயோகிச்சு இதைத் தடுக்க முடியும்.

வந்துருக்கான்னு தெரிஞ்சுக்க, ஒரு ரெண்டு மூணு தடவை சோதனை பண்ணிக்கணும்.

வந்திருச்சுன்னா, முறையா மருந்து மாத்திரை சாப்பிடணும்.

போதை மருந்தால இது வர்றதுக்கான வாய்ப்பு அதிகம்.

ஓரினச் சேர்க்கையாளர்கள்தான் இதுக்குக் காரணங்கிறது ரொம்பத் தப்பு!

ஒன்றுக்கும் மேற்பட்ட உறவு வைச்சுக்கிறதுல கவனமா இருக்கணும்! சரிதானா! இல்லை, எதுனாச்சும் விட்டுட்டேனா? " எனச் சொல்லிவிட்டு, என்னைப் பெருமையாகப் பார்த்தான் சுகுமார்!

'அவ்ளோதான்! இது தெரிஞ்சாலே போதும்!' என அவனைப் பாராட்டினேன்!

'சரி, வீட்டுல இன்னிக்கு என்ன சமையல்? ரொம்பப் பசிக்குது!" என்றான் சுகுமார்!

"சந்திரா! சாப்பாடு ரெடியா! கேள்வியெல்லாம் முடிச்சாச்சு!! என்றேன்!

"எல்லாம் எப்பவோ ரெடி! உபயோகமா பேசிக்கிட்டு இருக்கீங்களேன்னுதான் தொந்தரவு பண்ணலை! வந்து உட்காருங்க மூணு பேரும்." என உள்ளிருந்து குரல் வந்தது!

***********************************
[முற்றும்!]



Labels: , ,

11 Comments:

At 8:46 PM, Blogger கோவி.கண்ணன் said...

எய்ட்ஸ் என்பது ஒரு உயிர்கொல்லி நோய், உடலுறவின் மூலம் இது எளிதாக பரவும், இரத்த தொடர்பினாலும் இது பரவும்.

மற்றபடி எய்ட்சுக்கும் உடலுறவுக்கும் எதோதும் தொடர்பு இல்லை தானே ?

 
At 9:10 PM, Blogger VSK said...

//எய்ட்ஸ் உடலுறவின் மூலம் இது எளிதாக பரவும்,
மற்றபடி எய்ட்சுக்கும் உடலுறவுக்கும் எதோதும் தொடர்பு இல்லை தானே ?//

முரணாக இருக்கே, கோவியாரே!

இந்த நோய் இருப்பவருடன் பழகினால் இது வராது!
ஆனால், தடுப்பில்லாத உறவு கொண்டால் வந்தே தீரும்.

எனவே, உடலுறவுக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்கு!

எப்படி என்பதை மீண்டும் ஒருமுறை படிச்சுத் தெரிஞ்சுக்கங்க!:)

 
At 9:20 PM, Blogger கோவி.கண்ணன் said...

//இந்த நோய் இருப்பவருடன் பழகினால் இது வராது!
ஆனால், தடுப்பில்லாத உறவு கொண்டால் வந்தே தீரும்.//

அது தெரியும் :)

முறையான, முறையற்ற உடலுறவு என்ற சொல்லாடல்களுக்கும் எய்ட்ஸுக்கும் தொடர்பில்லை.

எய்ட்ஸ் நோயாளிகளிடம் உடல் உறவு கொண்டாலும், தடுப்பு இல்லாமாமல், பாதுகாப்பு இல்லாமல் உடல்உறவு கொள்பவர்களுக்குத்தான் இவை வரும் என்பது சரிதானே ?

 
At 9:33 PM, Blogger VSK said...

//முறையான, முறையற்ற உடலுறவு என்ற சொல்லாடல்களுக்கும் எய்ட்ஸுக்கும் தொடர்பில்லை.

எய்ட்ஸ் நோயாளிகளிடம் உடல் உறவு கொண்டாலும், தடுப்பு இல்லாமாமல், பாதுகாப்பு இல்லாமல் உடல்உறவு கொள்பவர்களுக்குத்தான் இவை வரும் என்பது சரிதானே ?//

இதை முதலிலேயே முறையாக் கேட்ட்டிருக்கலாமே கோவியாரே!

நான் எனது வலைப்பூவின் தலைப்பிலேயே சொல்லி இருக்கிறேன்.

"அறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன்" என!!

நீங்கள் சமூகவியல் பார்வையில் இதைப் புரிந்துகொண்டு ஒரு கேள்வி கேட்டால் அதற்கான பதிலை நீங்கள் வேறு எங்காவதுதான் தேட வேண்டும்.

ஒரு மருத்துவன் என்கிற முறையில், 'முறையான' 'முறையற்ற' உறவு என்பது தகுந்த பாதுகாப்பு சாதனங்களை உபயோகிக்காமல் கொள்ளும் உறவு மட்டுமே!

அது எவருடன் நீங்கள் கொள்கிறீர்கள் என்பதைப் பற்றி மருத்துவம் கவலைப் படுவதே இல்லை!

மருத்துவத்தைப் பொருத்த வரையில், தடுப்புசாதனங்கள் இல்லாமல் கொள்வதெல்லாமே முறையற்ற உறவுதான்!

அதையும், இந்நோயால் தாக்கப்பட்டவரிடம் கொள்ளும் போது..... விளைவுகளை அனுபவிக்கவும் தயாராய் இருங்கள்!

புரிதலுக்கும், வருகைக்கும் நன்றி! :))

 
At 9:42 PM, Blogger கோவி.கண்ணன் said...

//அது எவருடன் நீங்கள் கொள்கிறீர்கள் என்பதைப் பற்றி மருத்துவம் கவலைப் படுவதே இல்லை!

அதையும், இந்நோயால் தாக்கப்பட்டவரிடம் கொள்ளும் போது..... விளைவுகளை அனுபவிக்கவும் தயாராய் இருங்கள்!//

நான் 'தன்மை', 'முன்னிலையில்' கேள்வி கேட்கவில்லை, நீங்கள் ஏன் 'தன்மையின்றி' 'முன்னிலையை' வைத்து பதில் சொல்லி இருக்கிறீர்கள் ?

யார் அங்கெல்லாம் 'போவதாக' சொன்னது ?
:)

 
At 9:56 PM, Blogger VSK said...

நீங்க 'அங்கெ'ல்லாம் போவதாக யார் சொன்னது?

ஏன் தன்மையை முன்னிலையா எடுத்துகிட்டு அவஸ்தை படறீங்க!

நீங்க போகலைன்னா, அது உங்களுக்கு இல்லை!

லூஸ்ல விடுங்க கோவியாரே!

இந்தப் பதிவில் என் நண்பர்கள் சுகுமார், மூர்த்தி கிட்டயே 'நீ' எனப் பலமுறை சொல்லி இருக்கேன்!

அவர்கள் கோவிக்கவே இல்லை!

உண்மை நண்பன் கோவிக்க மாட்டான்!

பெர்சனலாகவும் எடுத்துக்க மாட்டான்!

:))

 
At 4:18 AM, Blogger கோவி.கண்ணன் said...

//அவர்கள் கோவிக்கவே இல்லை!

உண்மை நண்பன் கோவிக்க மாட்டான்!//

ம்கும்...அவர்கள் தான் சங்கர் குமார் எங்கே எய்ட்ஸ் பற்றி எழுதி இருக்காருன்னு வந்து பார்த்துட்டுப் போறாங்களாக்கும்

 
At 8:10 AM, Blogger Unknown said...

//ஒன்றுக்கும் மேற்பட்ட உறவு வைச்சுக்கிறதுல கவனமா இருக்கணும்! சரிதானா!//
ஒன்றுக்கு மேற்பட்ட உறவு வைத்திருந்தாலும், உறவு கொள்ளும் அந்த இருவரில் யாராவது ஒருவருக்கு எய்ட்ஸ் இருந்தாலே பிரச்னை. எய்ட்ஸே இருந்தாலும் அவரிடமும் ஆணுறைகள் பயன்படுத்தி உடலுறவு கொண்டால் பிரச்னையில்லை. சரிதானா?
//போதை அளிக்கக் கூடிய எந்த ஒரு விஷயமுமே ஒருவருடைய முடிவெடுக்கும் தன்மையை பாதிப்பதால்//
போதையிருந்தால் எய்ட்ஸ் வர வாய்ப்பு அதிகம். சரிதானா?

டாக்டர் அவ்வளவுதானா? அதுக்குள்ள வணக்கம் போட்டீங்களே.

 
At 5:43 PM, Blogger குமரன் (Kumaran) said...

நல்ல பயனுள்ள தொடர் மருத்துவரே. கடைசியில் கோவி.கண்ணனுக்குத் தந்த விளக்கமும் நன்று. எனக்கும் அந்த வேறுபாடு அது வரைக்கும் புரியவில்லை. :-)

 
At 6:09 AM, Blogger VSK said...

விடாமல் படித்துப் பாராட்டியமைக்கு நன்றி குமரன். மீண்டும் முகப்பில் வர உதவியதர்கும் சேர்த்தே! :))

 
At 7:00 AM, Anonymous Anonymous said...

wonderful job explaining AIDS. parattukkal!!

do write about AIDS in pregnancy and infants.
thanks

 

Post a Comment

<< Home