“பாலியல் கல்வி – பெற்றோருக்கு” – 7
“பாலியல் கல்வி – பெற்றோருக்கு” – 7
"பருவமே..... புதிய பாடல் பாடு!"
“வர வர உன் போக்கே சரியில்லை! வீட்டில யாரோடையும் பேச மாட்டேங்கற! ஸ்கூல் விட்டு வந்ததும் போட்ட டிஃபனை சாப்பிட்டுட்டு, ஒரு புக்கை எடுத்துகிட்டு மொட்டை மாடிக்கு போயிடற!ஏதனாச்சும் கேட்டா, பட்டுன்னு கதவை சாத்திட்டு, என்னை கொஞ்சம் படிக்க விடறியான்னு எரிஞ்சு விழற!
எப்பப்பாரு, அந்த ஃபோன்ல மணிக்கணக்கா ஃப்ரெண்ட்ஸுங்களோட அரட்டை அடிக்க மட்டும் நல்லா தெரியுது! என்னமோ போ! இதெல்லாம் நல்லத்துக்கில்லை, சொல்லிட்டேன். வந்தோமா, கூடமாட அம்மாவுக்கு ஏதாவது ஒத்தாசை பண்னினோமா, நாலு பேரோட கலகலப்பா பேசினோமான்னு இல்லாம இது என்னடிம்மா அதிசயமா இருக்கு”
இதுவே ஆண்பையனாக இருந்தால் அப்பா இப்படி பேசுவார்!
“நானும் கெவனிச்சுகிட்டுதான் இருக்கேன்! நீ பாட்டுக்கு வர்றதும், அந்த உதவாக்கரை மூஞ்சியை சோப்பு போட்டு, போட்டு அப்படி கழுவறதும், வாரு, வாருன்னு அந்த தலையை எப்ப பாரு ஒரு சீப்பை வெச்சு வாரிக்கிட்டே இருக்கறதும், பெரிய தொரைன்னு நெனப்பு மனசுல!
இன்னும் மீசை கூட முளைக்கலை! அதுக்குள்ளே எல்லாரையும் எதுத்துப் பேசறது, இல்லேனா, ஃப்ரெண்ட்ஸுங்களோட தெருக்கோடில நின்னுகிட்டு அரட்டை அடிக்கறது, இதே வழக்கமாப் போச்சு ஒனக்கு!
என்ன நெனைச்சுக்கிட்டு இருக்கே நீன்னு தெரியலை.ஒழுங்கா படிச்சு முன்னுக்கு வர்ற வழியைப் பாக்காம, கண்ட கண்ட காலிப் பசங்களோட சகவாசம்!செருப்பு பிஞ்சிரும், சொல்லிட்டேன்!”
ஏன்ன! பழகின, எங்கேயோ கேட்ட டயலாக் மாதிரி இருக்குல்ல!
அனேகமாக நாம் ஒவ்வொருவரும், கேட்ட அல்லது சொல்லிய வசனங்கள்தான் இவை!
மனிதர்களுக்கு கிடைத்திருக்கிற பெரிய வரம் – மறதி!
வெகு வசதியாக, நாம் கடந்து வந்த பாதையை மறந்துவிட்டு, ஏதோ இப்போதுதான் முதன்முதலாய்ப் பார்ப்பது போல எல்லா பெற்றோரும், தன் பிள்ளைகளிடம் மட்டுமே இது நிகழ்வது போல கரித்துக் கொட்டும் வழக்கமான பல்லவிதான் இது!
பருவம் அடைவதற்கு முன்னர், உடலில் ஹார்மோன்களின் மாற்றத்தால், நம் பிள்ளைகளிடம் ஏற்படுகின்ற இந்த நிகழ்வுகளை நாம் பெரும்பாலும் புரிந்து கொள்ளத் தவறுகிறோம் என்பதே உண்மை.
அப்படி என்னதான் ஆகிறது இந்த 12 முதல் 14 வயதுக்குள்?
பலவிதமான மாற்றங்கள் இந்த காலத்தில் ஏற்பட்டாலும், பாலியல் சம்பந்தமானவைகளைப் பற்றி மட்டுமே இங்கு பார்க்கலாம்.
திடீரென வளர்ச்சி அதிகமாகிறது.
முகத்தில் எண்ணைப்பசை அதிகமாகி, பருக்கள் தோன்ற ஆரம்பிக்கிறது.
மறைவிடங்களில் [அக்குள், பிறப்பு உறுப்பு பகுதிகள்] பெண்களுக்கும், இவை தவிர, முகம், மார்பு ஆகிய இடங்களிலும், முடி அரும்ப ஆரம்பிக்கிறது.
குரல் மாறி, சற்று கரகரப்பாகிறது.
பெண்களுக்கு மார்பகங்களும், ஆண்களுக்கு பிறப்பு உறுப்பும் பெரிதாகத் தொடங்கும்.
இதையெல்லாம் நீங்களே கவனித்தால்தான் உண்டு. உங்களிடம் வந்து அவர்கள் சொல்ல மாட்டார்கள் இப்போது!
தானே உணரும் இந்த மாற்றங்களினால், சற்று குழம்பிப் போய், வீட்டில் கேட்பதற்கு வெட்கப்பட்டு, நண்பர்களை நாடுவார்காள், இதைப் பற்றி இன்னும் அதிகம் தெரிந்து கொள்ள!
இதனால என்னா நடக்கும் வீட்டில!
பெற்றோரிடமிருந்து சற்று விலக ஆரம்பித்து, சுதந்திரமாக இருக்க, தன் தேவைகளை தானே செய்து கொள்ள தொடங்குவார்கள்.
தனக்கு பொறுப்பு வந்த மாதிரி காட்டிக் கொள்ள, தன்னையும் பெரியவங்க கூட்டத்துல சேத்துக்க ஆசைப்படுவாங்க!
முந்திரிக்கொட்டை மாதிரி, எல்லா விஷயத்திலியும், தன் கருத்தை சொல்றதுக்கு ஆசைப்பட்டு, சமயத்துல திட்டு வாங்கறதும் சகஜமா நடக்கும்!
“போயி ஒன் வேலையைப் பாரு! வந்துட்டான் பெரிய மனுஷனாட்டம். வயசுக்கு தகுந்த பேச்சா பேசற நீ” போன்ற திட்டெல்லம் சர்வ சாதாரணமா விழும் இப்போ!
பக்கத்து வீட்டு இளம் தம்பதிகள், எதுத்த வீட்டு அக்கா, கோடிவீட்டு ஃப்ரெண்டு, நேத்து வரைக்கும் ஒண்ணா ஓடிப்பிடிச்சு விளையாடின, கல்பனா, இவங்க எல்லாரும் இப்போ ஒரு புதுவிதமாத் தெரிய ஆரம்பிப்பாங்க!
அவங்க எப்பவும் போலவே இவன்கிட்ட காட்டற அன்பும், ஆசையும் இப்போ இவனுக்கு அல்லது இவளுக்கு புதுமாதிரியா அர்த்தமாகும்.
“இவனைக் கொஞ்சம் என்னான்னு கேளுங்க டாக்டர்! பக்கத்து வீட்டு அம்மா குளிக்கும் போது, இவன் எட்டிப் பாத்தான்னு வந்து புகார் பண்றங்க! எனக்கு ஒரே அவமானமாக இருக்கு. இவன் இது மாதிரியெல்லாம் பண்றவன் இல்லே. நாங்க ரொம்ப தன்மையாத்தான் வளத்தோம் இவனை” என்று என்னிடம் வந்தவர்கள் உண்டு!
‘றாஜு என்னையே ஏன் பாத்துக்கிட்டு இருக்கான்?’
‘ஸுஜாகிட்ட எப்படியாவது இன்னிக்கு பேசிறணும்!’
இது போன்ற ஆசைகள் காரணமில்லாமல் வரத் துவங்கும்.
இன்னும் கொஞ்சம் முக்கியமானதும் இருக்கு!
தான் யாரு, தன்னோட தனித்துவம்லாம்[speciality] என்ன எப்படி அதை வளக்கறது போன்ற விஷயங்களைப் பத்தி ரொம்பவே ஆராய்ச்சி பண்ண ஆரம்பிப்பாங்க.
பாலியல்[sex] ஜோக்குல்லாம் இப்ப நல்லாவே புரிய ஆரம்பிச்சு, அதை நண்பர்களோட பகிர்ந்துக்க தொடங்குவாங்க.
இது மாதிரி ஜோக்கோ, இல்லை படமோ பாக்கும் போது, தங்களோட பிறப்பு உறுப்பிலும் [இதோட பேரு அவங்களுக்கு நல்லாவே தெரியும் இப்ப,.... நான் தான் இங்கு சொல்லவில்லை!] உடம்பிலும் சில விரைப்புகள் ஏற்படறதை உணருவாங்க.
‘சுய இன்பம்’ அப்படீன்னா என்ன என்பது யாரும் சொல்லிக் கொடுக்காமலே தெரியவரும்.
சில சமயம் ராத்திரியில படுக்கை ஈரமாகும். எதனாலன்னு சீக்கிரமே புரியும்.
அந்த உணர்வு கொடுக்கற ஆனந்தத்தை மறுபடியும் அனுபவிக்க கை பரபரக்கும்.
உடனே ஒரு குற்ற உணர்வும், செய்யறது தப்போன்னு ஒரு தாழ்வு மனப்பான்மையும் வரும்.
இதைத் தவிர்க்க, தனிமையை நாடுவாங்க .
சும்மா இல்லாம நம்மளை விட இன்னும் நல்லா தெரிஞ்ச மாதிரி காட்டி பீலா விடற நண்பன் சொல்றதெல்லாம் உண்மையோன்னு மனசு கிடந்து தவிக்கும்.
“டேய், ஒவ்வொரு தடவையும் விந்து வெளியேறும் போது ஒன் ஒடம்புலேர்ந்து 60 சொட்டு ரத்தம் வீணாப் போகுது, தெரியுமாடா?”
“மெதுவா அப்பப்ப கையால கொஞ்சம் பிசைஞ்சு விட்டுக்கிட்டு இருந்தீன்னா, ஒன் மார்பு பெருசா, நல்லா வளரும்னு ஒரு புக்குல படிச்சேன்டீ!”
இது போன்ற இலவச ஆலோசனைகள் ஆயிரம் கிடைக்கும்.
நம்ம கிட்டயும் பேச மாட்டாங்க!
நாமளும் இதெல்லாம் பருவ மாற்றங்கள்தான்னு புரிஞ்சுக்காம குடும்ப மானம், அது இதுன்னு போட்டு அடிச்சிப்போம்.
இந்த வயதுக் குழந்தைகளின் பெற்றோர் செய்ய வேண்டியது , தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
அடுத்த பதிவில் பார்ப்போம்!
27 Comments:
//அனேகமாக நாம் ஒவ்வொருவரும், கேட்ட அல்லது சொல்லிய வசனங்கள்தான் இவை!//
எஸ்கே ஐயா..!
ஆமாம் ஐயா மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.
மீண்டும் முதல் வருகை!
என்னே நான் செய்த புண்ணியம்!
நன்றி, கோவியாரே!
சீக்கிரமா முழுசும் படிச்சிட்டு சொல்லுங்க!
என்ன இப்படி ஒரு முக்கியமான இடத்துல சஸ்பென்ஸ் வச்சுட்டீங்கா..
சீக்கிரமே அடுத்த பதிவ போடுங்க ..
செவ்வாய் - வெள்ளிதானே நம்ம கணக்கு!
இருங்க, இதைப் படிச்சு பின்னூட்டம் போடற அந்த மீதி 6 பேரும் வந்துறட்டும்!
:))))
அருமையா வந்துகிட்டுருக்கு உங்க தொடர்!! பெற்றோருக்கு மட்டும்தான்னு நினைச்சி விடறது இல்ல. நானும் படிச்சிடுறது!!
நீங்களும் கொஞ்ச காலத்துல அப்பா ஆகப் போறவர் தானே!
தாராளமாப் படிங்க!
நல்ல தந்தையாக வர வாழ்த்துகள்!, தம்பி!
நல்லதொரு தொடர் எஸ்கே சார். நானும் தொடர்ந்து படித்து வருகிறேன். என்னிக்காச்சும் நமக்கும் யூஸ் ஆகும்னு ஒரு நம்பிக்கையில தான்.
:)
அதென்ன! என்னிக்காச்சும்!?
சீக்கிரமே யூஸ் ஆக முருகனை வேண்டுகிறேன்!!
நானும் வாழ்த்துகிறேன்!!
//பாலியல்[sex] ஜோக்குல்லாம் இப்ப நல்லாவே புரிய ஆரம்பிச்சு, அதை நண்பர்களோட பகிர்ந்துக்க தொடங்குவாங்க//
SK அப்படியே புட்டு புட்டு வச்சிருக்கீங்க!
//நம்மளை விட இன்னும் நல்லா தெரிஞ்ச மாதிரி காட்டி பீலா விடற நண்பன்//
ஆகா...உண்மை உண்மை.
பேசாம உங்க பதிவை pdf ஆக்கி, கண்ணுல படறா மாதிரி வச்சிடலாமா?
பசங்களும் வெக்கப்படாம படிப்பாங்க!
பதிவு பெற்றோருக்குத் தான் என்றாலும், பசங்களும் படிக்கிறாப் போலத் தான் எழுதறீங்க. படங்கள் போட்டால் புரிதல் மேலும் அதிகமாகும்.
:-)
உங்களுக்குப் பிடித்திருக்கிறது என அறிந்து மகிழ்ச்சி, திரு. ரவி.
நீங்க சொன்ன மாதிரியே pdf பண்ணினாப் போச்சு!
கணினியில் நான் ஒரு கத்துக்குட்டிதான் இன்னமும்!
படங்கள் போட ஆசை!
ஆனால், தெரியவில்லை!
இதுதான் உண்மை!
மிக்க நன்றி.
//பருவமே..... புதிய பாடல் பாடு!"//
சரியாக சொன்னீர்கள்..
வளர்இளம் பருவ மாற்றங்களை வெகு அழகாக சொல்லி வருகீறீர்கள்..
இந்த பருவத்தில் பெரும்பாலான ஆண்/பெண் இருபாலாரும் சுய இன்பம் புரிய தொடங்குகின்றனர்.
இதை பற்றிய சில misconceptions
குறிப்பாக
* பெண்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவதில்லை
*ஆண்மைக்குறைவு ஏற்படலாம்.
* உடல் தளர்ச்சி/ பலவீனம் ஏற்படலாம்.
இந்த தவறான கருத்துகளினால் இவர்களுக்கு தாழ்வுமனப்பான்மை ஏற்படுகிறது..
உடல் மாற்றத்தினாலும், ஹார்மோன்களின் மாற்றத்தினாலுமே இது ஏற்படுகிறது என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்
நன்றி
மங்கை
//‘சுய இன்பம்’ அப்படீன்னா என்ன என்பது யாரும் சொல்லிக் கொடுக்காமலே தெரியவரும்.
சில சமயம் ராத்திரியில படுக்கை ஈரமாகும். எதனாலன்னு சீக்கிரமே புரியும்.
அந்த உணர்வு கொடுக்கற ஆனந்தத்தை மறுபடியும் அனுபவிக்க கை பரபரக்கும்.
உடனே ஒரு குற்ற உணர்வும், செய்யறது தப்போன்னு ஒரு தாழ்வு மனப்பான்மையும் வரும்.
இதைத் தவிர்க்க, தனிமையை நாடுவாங்க .//
இருபாலருக்கும் பொதுவாகத்தான் இவ்வரிகளை எழுதினேன்.
சரியாக வரவில்லயோ?
விளக்கத்திற்கு நன்றி, மங்கை.
மிக்க நன்றி, மௌல்ஸ்!
//இருங்க, இதைப் படிச்சு பின்னூட்டம் போடற அந்த மீதி 6 பேரும் வந்துறட்டும்!//
உள்ளேன் ஐயா..... :-)
வருகையை பதித்தாச்சு, ராம்!
நோட்ஸ் எல்லாம் எடுத்துக்கறீங்க தானே!
பின்னால உதவும்!!
:)))
//நோட்ஸ் எல்லாம் எடுத்துக்கறீங்க தானே!//
கண்டிப்பாக எடுப்பேன்
//பின்னால உதவும்!!//
நீங்க இது முழுவதையும் E-book'க கன்வர்ட் செய்திடுங்களேன்.
This comment has been removed by a blog administrator.
நீங்கள்லாம் தான் உதவி பண்ணனும் அதுக்கு!
நான் ஒரு கணினிக் கத்துக்குட்டி!!
:-) வீட்டுக்கு வீடு வாசப்படி....அது சரி...நம்மூர்ல வீட்டுல எல்லாரும் கண்ணுல படுற மாதிரி நெருக்கமா இருக்கிறோம். வெளிநாடுகளில் எப்படியோ?
அடடே! நோட்ஸ் எல்லாம் வேற வெச்சிருக்கீங்களா?!
நமக்கும் கொஞ்சம் அனுப்புங்க!
வசதியா இருக்கும்.
இல்லேன்னா, நான் சொல்லாம விட்டதையாவது நீங்க சொல்லுங்க. சரியா?!
நன்றி, வைசா!
நல்ல தொடர் நண்பரே! எல்லா பதிவுகளையும் அச்சு எடுத்து படித்துவிட்டு வருகிறேன்.
படித்து முடித்து வரும்வரை காத்திருப்பேன், நண்பரே!
நன்றி!
"விந்து விட்டவன் நொந்து கெட்டான்" என்று சொல்வார்கள்.
சுய இன்பம்/ஸ்கலிதம்.. பிரச்சனையா அணுகவும் ... சித்த வைத்திய சாலை என்று தினமும் எல்லா நாளிதழ்களில் விளம்பரம் வரும் போது சுய இன்பம் தவறு என்று எண்ணத்தானே தோன்றும்.
அதுவும் இல்லாமல் சுய இன்பத்தினால் கை கால் மூட்டு வலியும் உண்டாகும் இதுவும் பயம் வருவதற்கு காரணம்.
PDF கோப்பாக மாற்றுவதற்கு கருவிப்பட்டையில் உள்ள "PDF Icon" ஐ அழுத்தவும் உங்கள் பதிவு PDFல்.
அடுத்த பதிவில் சொல்லிறலாம் மீதியை!
அதென்னங்க குறும்பன் சார், திடீர்னு கை, கால், மூட்டு வலி வரும்னு ஒண்ணு பட்டுன்னு சொல்லிட்டுப் போயிட்டிங்க!
இதுவும் ஒரு பிரமைதாங்க!
ஆனா, நம்பறாங்க, இல்லேங்கலே!
யோசனைக்கு நன்றி.
ட்ரை பண்றேன்!
எஸ்கே ஐயா...!
இந்த வயசிலதான் அதாவது தான் பெரிய ஆளா ஆகிவிட்டோம் என்ற நினைப்பில் தான் திருட்டு தம் / அந்த மாதிரி படம் இவற்றையெல்லாம் தேடி ஓடுவார்கள்.
இவற்றை படுபாதக செயலாக நினைத்து பெற்றோர்கள் அடிக்க முயன்றால் அதை மீறி செய்யத்தான் செய்வார்கள்.
நான் +2 படிக்கும் போது மதிய உணவு இடைவேளையிலோ, அல்லது விளையாட்டு பகுதி நேரத்திலோ பசங்க ஒன்னு கூடி பாலியல் பற்றிய கருத்துக்களை பரிமாறிக் கொள்வார்கள். அதில் கருத்தடை பற்றிய கருத்துக்களை அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். கொஞ்சம் சின்னப் பசங்களாக (என்னை போல் ) இருந்தவர்களை அவர்கள் முதலில் துறத்தியது கூட நினைவு வருகிறது.
எஸ்கே சார்,
பழனி டாக்டர் லயன் எஸ்.காளிமுத்து, மற்றும், ஏழு தலைமுறைகளாக சொப்பனஸ்கலிதம், ஆண்மைக்குறைவுக்கு சேலம் சிவராஜ் மாதிரியானவர்களுக்கு இந்தத் தொடர் சிம்ம சொப்பனமாகப்போகிறது.
செக்ஸ் பற்றிய சரியான தகவல் கிடைக்காத கன்ஸர்வேடிவ் சமூகமாக நாம் இருப்பதை மாற்றி அது சம்பந்தமான அறிவினை பெற உங்களது தொடர் உதவிகரமாயிருக்கும்.
அன்புடன்,
ஹரிஹரன்
மிகச் சரியக சொல்லியிருக்கிறீர்கள், திரு. ஹரிஹரன்.
மறைத்து வைத்தே, தானே தெரிந்து கொள்ளட்டும் என்றே விட்டு விட்டார்கள்.
இப்போதும் அந்த மனநிலை தொடர்வதுதான் வருந்தத் தக்கது.
நன்றி.
Post a Comment
<< Home