"கசடற"

அறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன். முழுக்க முழுக்க இவை என் கருத்துகள் மட்டுமே! முருகனருள் முன்னிற்கும்!

Tuesday, October 31, 2006

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" -- 18 "எல்லாம் இன்ப மயம்'

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" 18

"எல்லாம் இன்ப மயம்"


ஆசை மனையாளைக் கைப்பிடித்து,
அவளோடு இயல்பாய் இல்லறம் நடத்தி,
அன்பாய்ப் பிள்ளைகள் பெற்று,
அருமையாய் அதை வளர்த்து,

நல்லன யாவும் சொல்லிக் கொடுத்து,
அல்லனவற்றை அகற்ற புத்தி சொல்லி,
இன்பகணங்களும், துன்ப உணர்வுகளும்,
மாறி மாறி இருவரும் அனுபவித்து,

அன்புப் பிள்ளை அதன் வழியே வளர்வதை
அணுஅணுவாய் ரசித்து வந்து
துள்ளி வரும் போது கட்டியணைத்து,
பாதை தவறும் போது பாதுகாத்து,

துளித்துளியாய் வளர்ந்த பிள்ளை
களித்திருக்கும் வண்ணமாக அதற்கு
நல்லதொரு துணையினை தேடித்தந்து
இல்லறத்தில் இணைத்த பின்னர்,

உங்க கடமை முடிஞ்சுதுன்னு ஓயலாமா நீங்க?
இல்லை, இன்னும் ஏதாவது பாக்கி இருக்கான்னு கேக்கறது காதுல விழுது!

இருக்குங்க!
இன்னும் கொஞ்சம் இருக்கு!
இவ்வளவு தூரம் தம் கட்டி வந்திட்டீங்க!
இதையும் கேட்டுட்டு போங்க!

உங்களோட செல்லப் பிள்ளையா இது நாள் வரைக்கும் வாழ்ந்த பிள்ளை வேற!
இனிமே இருக்கப்போற, அவங்க வாழப்போற வாழ்க்கையில நிறைய வித்தியாசம் இருக்கப் போவுது.
அதை அவங்களுக்கு புரிய வைக்க வேண்டியது உங்க பொறுப்பு!

கல்யாணம்னா என்ன, இல்லறம்னா என்ன,
பொண்டாட்டியை, புருஷனை சந்தோஷமா வெச்சுக்க என்ன செய்யணும், இதுல என்னெல்லாம் பிரச்சினை வரும், வரலாம்,
அதை எப்படி சமாளிக்கறது,

இதையெல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டியது உங்களோட முக்கிய கடமை!

உடலுறவுன்னா என்ன, அது என்ன மாதிரி அனுபவம் இதெல்லாம் துளிக்கூட தெரியாமக் கூட கைப்பிடிக்கிற மகனும், மகளும் இன்னும் இந்த உலகத்துல இருக்காங்க, தெரிஞ்சுக்கங்க!

அந்த பெற்றோருக்கு இந்த அடுத்த வரிகள்!!

இதுவரை தொடாத இடங்கள் தொடப்படும், புரியாத சுகங்கள் புலப்படும், என்பது இவர்களுக்கு சொல்லித் தரப்பட வேண்டும்.

இது ஒண்ணும் தப்பான விஷயம் இல்லை.
உலகத்தின் தத்துவமே இதுதான், வம்ச வளர்ச்சிதான் ஒரு ஆணும், பெண்ணும் படைக்கப்பட்டதன் பொருள் என்பதை இவர்கள் தெரிந்து கொள்ளணும்.

இதெல்லாம் முடிஞ்சதும், இதை எப்படி அனுபவிச்சாங்க என்பதையும் புரிந்து கொண்டு, அதில் ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் அதை சரி செய்யும்
வழி கூட உங்களுக்கு இன்னும் இருக்கு.

அவ்வளவுதாங்க!

இதுக்கு அப்புறம் அவங்க முதல் பதிவு படிக்கவும் சொல்லிக் கொடுத்துருங்க!

அவங்களும் இந்த பிரபஞ்ச தத்துவத்தை ஆரம்பிக்கப் போறாங்க இல்லியா!
அவங்க குழந்தையும், தொடக்கத்துல இருந்தே ஒரு தெளிவோட வளர இதுவும் உதவும்.

அன்பு, கடமை, கட்டுப்பாடு, கண்டிப்பு, இதெல்லாம் கலந்த ஒரு உணர்வோடு,
ஒரு நண்பனாக இருந்து இவர்களை வளர்த்து ஆளாக்க உங்களை வாழ்த்துகிறேன்.

எல்லாம் இன்பமயமே!!

இதுவரை தொடர்ந்து படித்து, பின்னூட்டமிட்டு வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி.

இப்பதிவை எழுத எனக்கு தூண்டுகோலாய் இருந்த அனைவருக்கும் நன்றி சொல்லி, இது ஒரு இனிமையான அனுபவமாக இருக்க எனக்கு உதவியவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்து,

மீண்டும் ஒரு மருத்துவத் தொடர் வழியே உங்களை மீண்டும் சந்திக்க வருவேன் எனச் சொல்லி விடை பெறுகிறேன்.

வணக்கம்.

28 Comments:

At 6:55 PM, Blogger கோவி.கண்ணன் [GK] said...

//அவ்வளவுதாங்க!

இதுக்கு அப்புறம் அவங்க முதல் பதிவு படிக்கவும் சொல்லிக் கொடுத்துருங்க!//

எஸ்கே ஐயா !

முடித்ததில் தொடங்கச் சொல்லி முடித்திருக்கிறீர்கள் ! பதிவுகளும், தொடரில் தொட்ட விசயங்களும் மிக பயனுள்ளவை என்று ஒரிரு வார்த்தையில் சொல்ல முடியாது !

//டும் ஒரு மருத்துவத் தொடர் வழியே உங்களை மீண்டும் சந்திக்க வருவேன் எனச் சொல்லி விடை பெறுகிறேன்.//

அடுத்த தொடரை குறிப்பிட்டு ஆவலை அதிகப் படுத்தி இருக்கிறீர்கள் !

ஐயாவும், தமிழ் தொண்டும் என்றென்றும் வாழ வாழ்த்துகிறேன் !

அன்புடன்
கோவியார்

 
At 7:05 PM, Blogger VSK said...

ஒரு வார்த்தையில் சொல்ல முடியாதுன்னு ஒரே வார்த்தையில் சொல்லும் வல்லமை உங்களுக்கு மட்டுமே உண்டு, கோவியாரே!

ஆரம்பமுதல் தொடர்ந்து ஒரு பதிவு விடாமல் பின்னூட்டமிட்டு இதையும், என்னையும் ஊக்குவித்ததை, அந்த நல்ல உள்ளத்தை என்னால் மறக்கவே முடியாது.

மிக்க நன்றி, கோவியாரே!

இதைப் பற்றிய உங்களது நீண்ட பின்னூட்டத்தை அல்லது ஒரு தனிப் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
:))

 
At 7:20 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

அழகா முடிச்சிட்டீங்க. நன்றி இந்த நல்ல தொடரைத் தந்ததுக்காக!

 
At 7:44 PM, Blogger VSK said...

நீங்களுமா கொத்தனார்!

[ஷேக்ஸ்பியர் மாதிரி படிக்கவும்!}

ஒரே ஒரு வரி?????

ஏமாத்தறீங்களே!

பெருசா வாங்க!

 
At 7:50 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

//பெருசா வாங்க!//

ஐயா, பெரு(சு) வேற ஆள், நான் வேற ஆள். நான் எப்படி அவரை மாதிரி? நான் நானாகவே இருந்துட்டுப் போறேனே. :)

 
At 7:52 PM, Blogger VSK said...

உங்க இஷ்டம்!!
நல்லா இருங்க சாமி!
நல்லா இருங்க!

 
At 8:51 PM, Blogger மங்கை said...

அய்யோ அவ்வளோதானா...

//அன்பு, கடமை, கட்டுப்பாடு, கண்டிப்பு, இதெல்லாம் கலந்த ஒரு உணர்வோடு,ஒரு நண்பனாக இருந்து இவர்களை வளர்த்து ஆளாக்க உங்களை வாழ்த்துகிறேன்.//

ஊருக்கெல்லாம் எடுத்து சொல்லுகிற போதும், என் பெண் என்று வரும்போது, தானாக ஒரு தயக்கம் வரத்தான் செய்கிறது...

ஆனால் அந்த தயக்கத்தையும் எப்படி சாமாளிப்பது என்பதை எளிதாக, அனைவருக்கும் புரியும்படியாக, முக்கியமாக ஆர்வமுடன் படிக்க ஏற்ற விதமாக எடுத்து சொல்லியிருந்தீர்கள்..

நன்றி SK அவர்களே...

நான் ஏற்கனவே சொன்னது போல், இந்த முயற்சி இத்துடன் நின்று விடாமல்
உண்மையாக சேரவேண்டியவர்களுக்கு சேரும்படி செய்தால், இந்த முயற்சி முழுமை அடையும் என்று நினைக்கிறேன்...

மீண்டும் இது போல ஒரு மருத்துவ தொடரை எதிர்பார்க்கிறேன்

வாழ்த்துக்கள்

மங்கை

 
At 5:57 AM, Blogger VSK said...

தொடக்க முதலே இத்தொடரைப் பாராட்டி நல்ல பல கருத்துகளையும் அளித்து, இத்தொடருக்கு பெருமை சேர்த்தீர்கள், மங்கை!

நடுவில் காணாமற் போனாலும்,[:))] மறக்காமல் முடிவில் வந்து பாராட்டியதற்கு மிக்க நன்றி.

நீங்கள் சொன்ன கருத்தை கண்டிப்பாகச் செயலாக்க முனைவேன்.

நன்றி.

 
At 6:01 AM, Blogger VSK said...

விடாமல் பாராட்டி வந்து, உற்சாகப் படுத்தி, ஊக்குவித்ததற்கு, மிகவும் கடமைப் பட்டுள்ளேன், வைசா!

குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு துயரச் சம்பவம் காரணமாக அவசரமாக சென்னை செல்கிறேன்.

வந்ததும் அடுத்த தொடரை ஆரம்பித்து விடலாம்!

உங்கள் அனைவரின் ஆலோசனைகளும் வரவேற்க்கப்படும்!!

நன்றி.

 
At 6:58 AM, Blogger Sivabalan said...

SK அய்யா,

நல்லதொரு தொடரை கொடுத்த உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.

நல்ல அலோசனைகள் கருத்துக்கள் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி.

மீன்டும் ஒரு மருத்துவ தொடர் தொடங்க எனது வாழ்த்துக்கள்.

நன்றி

 
At 7:06 AM, Blogger VSK said...

எப்படியும் வருவீங்கன்னு தெரியும், சிபா!

இப்பதிவை எழுத தூண்டுகோலாய் இருந்தது உங்களது ஒரு பதிவுதான் என்னும் முறையில் உங்களுக்கு எனது தனிப்பட்ட நன்றி.

அதை என் கவனத்துக்குக் கொண்டு வந்த கோவியாருக்கும் இச்சமயத்தில் நன்றி கூறிக் கொள்கிறேன்.

மறுபடியும் ஏதாவது ஆலோசனைகள் சொல்வீர்களென எதிர்பார்க்கிறேன்!!
:))

 
At 7:24 AM, Blogger ஜெயஸ்ரீ said...

நல்லதொரு தொடரைத் தந்ததற்கு நன்றி SK அவர்களே.

மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

 
At 8:53 AM, Blogger VSK said...

நீங்க காட்டிய ஆதரவை மறக்க முடியாது, ஜெயஸ்ரீ !

மிக்க நன்றி.

 
At 9:06 AM, Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

பெற்றவர்க்கு ஞான உபதேசம் செய்த முருகன் புகழ் பாடும் SK ஐயா,
அந்த வழி ஒற்றி, பெற்றவர்க்கு எல்லாம் ஞானம் (புரிதலறிவு) கொடுக்க முனைந்த....
தொடர் இது;
தொடரட்டும் இது!

 
At 9:16 AM, Blogger VSK said...

இலக்கிய ரசம் உள்ளவர் எழுதுவதைப் படிப்பதே ஒரு தனிச் சுவைதான், ரவி!

உங்கள் கருத்தாழம் கண்டு வியக்கிறேன்.

பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி.

 
At 9:21 AM, Blogger நாமக்கல் சிபி said...

அருமையானதொரு தொடரின் மூலம் பெற்றோர்களுக்கு ஒரு எளிய வழிகாட்டியை கொடுத்த எஸ்.கே அவர்களுக்கு பாராட்டுக்கள்.

இன்னும் இதுபோல பல்வேறு மருத்துவ/உளவியல் தொடர்களை எதிர்பார்க்கிறோம்.

இப்போதைக்கு இத்தொடருக்கு

மங்களம். சுப மங்களம்.

 
At 9:31 AM, Blogger VSK said...

அப்பாடா!

மங்களம் பாடவாவது வந்தீங்களே!

இதுவும் இலவசம்தான், சிபியாரே!

மிக்க நன்றி!!

 
At 9:35 AM, Blogger G.Ragavan said...

மிகவும் நல்லதொரு பதிவு. தேவையானதாய்...கருத்து மிகுந்ததாய்....சீர்மை பொருந்தியதாய்...ஒரு மருத்துவத்தாய்(தந்தை) தந்த பதிவுத் தொடர் இது. கண்டிபாக அனைவர்க்கும் இது பயனுள்ளதாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. தொடரைத் தந்த திருப்புகழ்த் திரு எஸ்.கே-யிற்கு எனது வாழ்த்துகள்.

இதுபோன்ற மருத்துவமும் உளவியலும் சந்திக்கும் நல்ல தகவல்களை இன்னமும் தரவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

 
At 9:35 AM, Blogger நாமக்கல் சிபி said...

மங்களம் பாடும்போது சரியான நேரத்திற்கு வந்தால்தான் சுண்டல் கிடைக்கும். நம்ம நோக்கம் அதுதானே!

 
At 9:40 AM, Blogger VSK said...

முருகனருளால், சீக்கிரமே மணக்கும் "சுண்டல்" கிடைக்க வேண்டுகிறேன், சிபியாரே!

முமு!!

 
At 9:51 AM, Blogger VSK said...

ரவியிடம் சொல்லியது போல் இன்னுமொரு தமிழ்[த்தாய்] வாழ்த்து!

மிகவும் அருமை!

நன்றி, ஜி.ரா.!

அவ்வப்போது நீங்கள் சொன்ன கருத்துகளுக்கும் நன்றி!

 
At 11:26 PM, Blogger பொன்ஸ்~~Poorna said...

நல்ல தொடர் எஸ்கே.. நல்லா போச்சு.. 18 பாகமும்..

உதாரண சம்பவங்களும், சூழ்நிலைகளும் நம்மையே அந்தந்த இடத்தில் வைத்துப் பார்க்க, புரிந்து கொள்ள ரொம்பவே உதவியது.

கொத்ஸ் போலவே, 17வது பகுதி, இதற்கு இது ஒன்று தான் தீர்வா என்ற கேள்வியும் எனக்குள் எழுப்பிவிட்டது..

பரிந்துரை
ஒவ்வொரு பதிவுக்கும் வெவ்வேறு தலைப்புகள் கொடுக்கலாம்.. இந்தப் பதிவுக்கு - எல்லாம் இன்பமயம்- என்று சொன்னது போல். படிப்பவருக்கும் உள்ளே என்ன இருக்கிறது என்று அறிந்து கொள்ள ஏதுவாகும்

அடுத்தத் தொடரையும் சீக்கிரமே தொடங்குங்க..

 
At 10:24 AM, Blogger VSK said...

முழுதும் படித்து கருத்து சொல்லி பாராட்டியதற்கு மிக்க நன்றி, பொன்ஸ்!

கூடுமான வரையில் எல்லா பதிவுகளுக்கு தலைப்பு கொடுத்துதான் வந்திருக்கிறேன்.

கொத்ஸிடம் சொல்லியது போல, அது ஒன்றுதான் தீர்வு என நான் குறிப்பிடவில்லை.

ஆனால், அதுவே ஒரு சிறந்த தீர்வாக இருக்கும் என மட்டுமே சொல்லியிருக்கிறேன்.

அவசரமாக சென்னை செல்ல இருப்பதால், அடுத்த தொடர் ஆரம்பிக்க எப்படியும் இன்னும் ஒரு மாதம் ஆகும்.

ஏதாவது நல்ல தலைப்பு சொல்லுங்களேன்!

மீண்டும் நன்றி.

 
At 9:47 AM, Blogger கைப்புள்ள said...

//அன்பு, கடமை, கட்டுப்பாடு, கண்டிப்பு, இதெல்லாம் கலந்த ஒரு உணர்வோடு,
ஒரு நண்பனாக இருந்து இவர்களை வளர்த்து ஆளாக்க உங்களை வாழ்த்துகிறேன்.

எல்லாம் இன்பமயமே!!//

ஐயா!
நல்ல தொடர். அடிக்கடி பின்னூட்டம் இடாவிட்டாலும் நான் இத்தொடரினைத் தொடர்ந்து படித்து கொண்டிருந்தேன். கேஸ் ஸ்டடி பாணியில் இது நடந்தால் இது செய்ய வேண்டும் என்று தாங்கள் வழங்கிய அனுபவ ஆலோசனைகள் பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி.

 
At 12:25 PM, Blogger VSK said...

ஆரம்பத்துல வந்தவரை அப்புறமா காணுமேன்னு பார்த்தேன்.

ரொம்ப நன்றிங்க, கைப்புள்ள!

அப்படியே, இந்த பாபா, சிறில், மதி, தேன்துளி, தம்பி, வெட்டிப்பயல், ரவி, ம-ஹி, நாகைசிவா, தெ.கா.,தமிழச்சி, இன்னும் அந்த கோவை டாக்டர் இவங்களை எல்லாரையும் வரச் சொல்லுங்களேன்!!
:))

ராஜா சார்கிட்ட எதனாச்சும் சொல்லணுமா? கேக்கணுமா?

 
At 6:31 PM, Blogger ஜோ/Joe said...

SK ஐயா!
இப்படி ஒரு தொடர் வருவதை அறியாமல் இருந்தமைக்கும் ,ஊக்கம் அளிக்க தவறியமைக்கும் மன்னிக்க வேண்டுகிறேன் .நேற்று தான் நண்பர் சிறில் பதிவு வழியாக இங்கு வந்தேன் .உடனே தொடர் முழுவதையும் தரவிறக்கம் செய்து ஒரே மூச்சில் படித்தேன் .நிச்சயமாக இந்த தொடர் ஒரு படித் 'தேன்'.ஒரு வயதாகப்போகும் மகன் கொண்ட தகப்பனான எனக்கு முகவும் பயனுள்ள தொடர் .உங்கள் சேவைக்கு மிக்க நன்றி!

 
At 5:50 AM, Blogger இராம்/Raam said...

//அப்படியே, இந்த பாபா, சிறில், மதி, தேன்துளி, தம்பி, வெட்டிப்பயல், ரவி, ம-ஹி, நாகைசிவா, தெ.கா.,தமிழச்சி, இன்னும் அந்த கோவை டாக்டர் இவங்களை எல்லாரையும் வரச் சொல்லுங்களேன்!!//

இதில் என் பேர் இல்லை என்று நினைத்து மிகவும் வருத்தம் கொள்கிறேன்..... :(

 
At 5:40 AM, Blogger Muthu said...

சார்,

நல்ல தொடர்..முழுதாக படிக்கவில்லை.முடிந்தால் ஒரு பிடிஎஃப் கோப்பாக எடுத்து செய்யலாமே...

 

Post a Comment

<< Home