"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" 11
"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" 11
"பருவமே! புதிய பாடல் பாடு"
இதுவரை சிறு குழந்தையில் இருந்து 12 வயது வரையான குழந்தைகளின் நிலைகளில் பெற்றோர் செய்ய வேண்டியது என்ன என்று பார்த்தோம்.
இதிலேயே மலைத்துப் போய் பாதிப்பேர் காணாமல் போய்விட்டார்கள்!
எடுத்த காரியத்தை முடிக்காமல் விடக் கூடாது என்பதால் மிகுதியையும் சொல்லாமல் போகப்போவதில்லை நான்!
இதுவரை படித்ததே அதிகம் என நீங்கள் நினைத்தால்...... இனிமேல்தான் முக்கியமான சவாலே வருகிறது என்பதை உணர்ந்தால் என்ன செய்வீர்களோ?
ஆம்!
இதுவரை நம் பேச்சைக் கேட்டு, நமக்கு ஆசையான குழந்தையாய், நம் கனவுகளின் அஸ்திவாரமாய் இருந்த உங்கள் குழந்தை இப்போது தான் யார், தன்னால் என்ன செய்ய முடியும் என்று தானே உணரும் அந்த இனிய நிகழ்வு நடைபெறப்போகும் நல்ல நேரம் வருவதை உணரும், ஒரு மானுடமாய் மாறப்போகும் அதிசயத் தருணம் இப்போது நடக்கப் போகிறது!
மனித வளர்ச்சி என்பது படிப்படியாய் நிகழ்வதல்ல.அது ஒரு தொடர்ச்சியான நிகழ்வு.
ஆனால், அதிலும் ஒரு மூன்று நிலைகளை பொதுவாகப் பிரிக்கலாம்.
குழந்தை,
வளர் சிதைப் பருவம்,
வயது வந்தவர் என.
இதுவரை நாம் முதல் இரண்டு நிலைகளைப் பார்த்தோம்.
இப்போதுதான் அந்த முக்கியமான தருணம், ........ நம் வாழ்வை நிர்ணயிக்கப் போகும், நமக்கு ஏற்படப்போகிற அத்துணை மாற்றங்களுக்கும் அடித்தளமாய் அமையப் போகிற அந்த 'பருவம் அடைதல்' என்னும் மாற்றம் இக்குழந்தைகளுக்கு நிகழ்கிறது.
இந்நிலைக்குப் பிறகு இவர்களுக்கு இரண்டே இரண்டு வழிகள்தான் இனிமேல்.
தன்னை உணர்ந்து, தன் நிலை அறிந்து, தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் மதித்து தரணியில் ஒரு நல்ல இடத்தை அடைவது ஒன்று.
தனக்கு நேர்ந்த இம்மாற்றத்தை தவறாகப் புரிந்து கொண்டு, தறுதலையாகி, தான், தன் சுகம் என தனக்கு ஒரு வழியமைத்து, அதற்கென தன்னையே பறிகொடுத்து, தறி கெட்டுப் போவது இன்னொன்று.
அதனால்தான் நம் முன்னோர்கள் மிக அழகாக, இதை 'வயதுக்கு வருதல்' என்று சொல்லி வைத்தனர்.
இதுவரை வாழ்ந்த வருடங்கள் ஒரு வயதல்ல.
இனிமேல் வாழப்போகும் வருடங்களும் ஒரு வயதல்ல.
இன்று, இது நிகழ்வதுதான் ஒரு திருப்புமுனை எனத் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள்.
இப்போது என்ன நிகழ்கிறது?
உடல் ரீதியாகவும், பழகுமுறை ரீதியாகவும், வளர்ச்சி ரீதியாகவும் உணர்வு பூர்வமாகவும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன இப்பருவத்தில்.
இவையெல்லாம் விரித்துக் கூறுதல் இப்பதிவின் நோக்கமில்லையெனினும், பாலியல் வழியில் இவை ஒவ்வொன்றும் எப்படி இவர்களை பாதிக்கின்றது அதற்கு பெற்றோர்கள் எந்த வகையில் தயாராக இருக்க வேண்டும் என்பதை மட்டும் இங்கு சொல்ல விரும்புகிறேன்.
இதுவரை பார்த்த உங்கள் மகனோ அல்லது மகளோ வேறு, இனிமேல் பார்க்கப்போகும் பிள்ளை வேறு என்பதை உணர முடியாத பெற்றோர்களே அதிக அள்வில் இந்நேரம் தொடங்கி அவதிப்படுகிறார்கள்.
"நான் பாத்து வளந்த புள்ளை; எனக்குத் தெரியாதா அதை பத்தி?" என்னும் மனோநிலையையே பெரும்பாலான பெற்றோர்கள் கைக்கொள்ளுகின்றனர்..... நடப்பதை அறியாமல்.
அப்படி என்னதான் ஆகிறது இந்தக் குழந்தைகளுக்கு?
உடல் ரீதியாக,
குழந்தைப் பருவம் கழிந்து மனித நிலையை அடைவதும்,
இதுவரை காணாத உடல் வளர்ச்சியைக் காணுவதும்,
வளர்ச்சி ரீதியாக,
தனித்து முடிவெடுக்கும், நல்லது, கெட்டது எனத் தானே ஒரு முடிவு எடுக்கும் திறமை தனக்கு வந்து விட்டதாக நினைக்கும் மன நிலையும்,
இதற்கு உதவி புரிய இதுவரை நம்பியிருந்த பெற்றோரைப் புறந்தள்ளி, நண்பரை நாடும் மன நிலையும்,
இதுகாறும் பெற்றோரை எதிர்பார்த்து செய்து வந்த சில செயல்களை, [உணவில் தொடங்கி உடை அலங்காரம் வரை,] தானே செய்து கொள்ள முடியும் என்ற மனத்திடமும்,
தன்னிச்சைப் போக்கும், நாட்டமும்,
உணர்வு பூர்வமாக,
நீடித்து நிற்கக்கூடிய நட்பு, உறவு இவைகளை தானே அமைத்துக் கொள்ளும் திறனும்,
தன் உணர்வை எந்த வகையிலேனும் தனித்து காட்டக் கூடிய மன உறுதியும்,
எப்படி தன்னை யார் எனக் காட்டிக் கொள்ள முடியும் என்ற வீராப்பும்,
ஒரு சில ஹார்மோன்கள் சுரக்க ஆரம்பிப்பதன் மூலம் தன்னை அறியாமலேயே இவர்களை வந்தடைகின்றன!
இவை அனைத்தும் வெளிப்படும் ஒரே நிலை பாலியல் மூலம் என்று நான் சொன்னால் நம்ப மாட்டீர்கள்;
ஆனால் இதுதான் உண்மை என ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்திச் சொல்லுகின்றனர்!
தனது அத்தனை மாற்றங்களையும் பாலியல் வழியாகவே நிலை நிறுத்தி, தன் தனித்துவத்தை பறை சாற்றிக் கொள்ளுகின்றனர் இவர்கள்.
இது புரிந்த பெற்றோர்கள் குறைவு!புரியாமல் குழம்பி, தன்னையும் வருத்தி, பிள்ளையையும் வருத்தி சங்கடப்படுபவர்களே மிக அதிகம்!
"அப்படி என்னதான் பாலியல் மூலம் வெளிப்படுத்துகிறார்கள், கொஞ்சம் சொல்லுங்களேன் பார்ப்போம்" என நீங்கள் சவால் விடுவது எனக்குக் கேட்கிறது.
மனதை திடப் படுத்திக் கொண்டு படியுங்கள்.
நான் சொல்லுவது அனைத்தும் உண்மை; உண்மையைத்தவிர வேறில்லை எனச் சொல்லி தொடங்குகிறேன்!
அடைப்புக் குறிகளில் பெரும்பாலான, [இதுவரை குழந்தைகளை சரியாக வளர்க்காத] பெற்றோர்களின் மன நிலையைச் சொல்லியிருக்கிறேன்.
இது பொதுவான ஒரு கருத்து தான்!
என் பிள்ளை அப்படி இல்லை என்பவர்களுக்கு என் வந்தனம்!
இவர்களுக்கு தன்னுடைய பாலியல் மாற்றத்தால், பருவ மறுதலால் தன்னுள் ஏற்பட்ட மாற்றம் என்ன என்பது நன்றாகத் தெரியும்!
[அது சின்னப் புள்ளைங்க! அதுக்கு ஒண்ணும் தெரியாது. பச்சைப் புள்ளைங்க அது!]
உடல் உறவு தவிர்த்து என்னென்ன வகையில் தன் பாலியல் மாற்றத்தை வெளிப்படுத்த முடியும் என்பது இவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
[வெகுளியா சிரிச்சுத்தாங்க அது பேசும். விகல்பம் இல்லாம எல்லோரோடேயும் சகஜமாப் பழகும்]
நல்ல உறவு எது, தீய உறவு எது என்பது தெரியும்.
தனக்குப் பிடித்த அம்சங்கள் இருப்பின் எந்த உறவும் அசைக்க முடியாத நல்ல உறவே!
[ஒண்ணும் தெரியாத புள்ளைங்க அது! வெளுத்ததெல்லாம் பாலுன்னு நம்பிடும்.]
கர்ப்பம் அடைய தன்னால் முடியும் எனத் தெரியும். அதைத் தடுக்க வழிகள் உண்டெனவும் தெரியும்.
[கள்ளம் கபடு இல்லாத பொண்ணுங்க அது. இப்படியெல்லாம் நடக்குமின்னு அதுக்கு தெரியாதுங்க. எந்த பாவி மகனோ கெடுத்துட்டான்]
[என் பையன் நான் கிழிச்ச கோட்டைத் தாண்ட மாட்டான். அவன் உண்டு அவன் படிப்பு உண்டுன்னு தான் இருப்பான். அவன் இப்ப்டி பண்ணினதுக்கு எந்த சிறுக்கி மகளோதான் காரணம். வலை விரிச்சு வசியம் பண்ணிட்டா!]
தனது பாலியல் கவர்ச்சியை எப்படி வெளிக்காட்டுவது எனத் தெரியும்.
[அந்த மேனாமினுக்கி அசைஞ்சு, ஒடிஞ்சு நடந்து வரும் போதே தெரியும். இப்படி ஏதாவது எம் புள்ளை மேல அபாண்டமா பழி போடுவான்னு!]
[கண்ணாடி முன்னாடி என்னடி அவ்வளவு நேரமா நின்னுண்டு இருக்கே! எவனுக்காக இந்த சிங்காரம்?]
"அவ/அவன் இல்லேன்னா நான் உயிரோட இருப்பேன்னு கனவு கூட காணாதே" என்று வீர வசனம் பேசத் தெரியும்.
[ஐயோ, ஐயோ எவளோ எம் புள்ளைக்கு மை வெச்சுட்டாளே! நான் என்ன பண்ணுவேன்!]
[ஏண்டி! நீ இப்படில்லாம் பேசறவ இல்லையேடி. யார்றீ சொல்லிக் கொடுத்தா இதெல்லாம்?]
என்ன? நினைவுலதான் இருக்கீங்கல்ல! இல்லை மயங்கி விழுந்துட்டீங்களா?
நான் சொன்னது எதுலியாவது தப்பு இருந்தா சொல்லுங்க.
சரி, இது நிகழாமல் இருக்கணும்னா பெற்றோர்களாகிய நாம் என்ன பண்ணனும்?
அடுத்த பதிவில் பார்க்கலாம்!
மறக்காம படிச்சவங்க எல்லோரும் வந்து ஒரு வரி பின்னூட்டம் போடுங்க.
எனக்காக!
நன்றி!
32 Comments:
எஸ்கே ஐயா...!
இந்த பதிவில் பாலியல் மாற்றம் குறித்த பருவமடைந்தவர்களின் மனநிலையின் உளவியல் பற்றி புரியும்படி நன்றாக சுவையுடன் சொல்லியிருக்கிறீர்கள்.
நீண்ட பதிவு... இன்னும் கொஞ்சம் பொறுமையாக படித்து மறுபடியும் பின்னூட்டமிடுவேன்.
இப்படித்தான் போன பதிவில் சொல்லி அப்புறம் வரவே இல்லை.
இந்த முறையாவது சொன்ன வாக்கைக் காப்பாற்றுங்கள்!
மிக்க நன்றி முதலில் வந்து பதிவிட்டதற்கு, கோவியாரே!
//இப்படித்தான் போன பதிவில் சொல்லி அப்புறம் வரவே இல்லை.
//
எஸ்கே ஐயா !
அப்படியா எந்த பதிவில் என்று சொன்னால் பதிவுக்கு ஏற்றபடி தக்க பின்னூட்டம் வழங்கப்படும் !
:)
எஸ்.கே
பருவம் அடைந்தும் ஒன்றும் தெரியாமல் இருக்கும் பெண்களோ, ஆண்களோ இல்லையா?அதாவது மாற்றுப்பாலினத்தை கண்டு ஈர்ப்பு வந்தாலும் சுத்தமாக விவரமே தெரியாமல் இருப்பவர்கள் உண்டு அல்லவா?செக்ஸ் பற்றிய விவரத்தை எந்த வயதில், யார் மூலம் பெறுகிறார்கள் என்பதும் முக்கியம் என நினைக்கிறேன்
Dear Sk,
I ve been reading all your posts especially the ones which you'r writing for the parents. They are very informative and you make it very intersting by adding those typical dialogues!!.I feel you missed something here it is the inert feeling of a parent who always want their son or daughter to be a child...they never want their baby ot be a grown- up. I feel it is not that they dont understand the changes thats happening to their son or daughter but just they dont want to accept it....dont you think so??
by the way i love yr writing style and waiting for more....
radha
(mom with a teenage son!!)
SK ஸார்,
/மறக்காம படிச்சவங்க எல்லோரும் வந்து ஒரு வரி பின்னூட்டம் போடுங்க.
எனக்காக!/
மாற்றுக்கருத்து இல்லையே என்பதற்காக நான் இதுவரை உங்கள் பதிவுகளில் பின்னூட்டம் இட்டதில்லை..
ஆனால் இப்படி படித்துவிட்டு அமைதியாகப் போவது, உங்கள் முயற்சியை தளர வைத்துவிடுமோ, என்ற பயம்வர இந்த பின்னூட்டம்..(நீங்கள் 'எடுத்த காரியம் முடிப்பீர்கள்' என்பதை உணர்ந்தேன்.. இருந்தாலும்..)
நீங்கள் எழுதும் எல்லாவற்றையும் உண்மையான புரிதலுடன் வாசித்து, மனதில் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம்.. தயவு செய்து இதே உற்சாகத்துடன் தொடருங்கள்..
உங்கள் எழுத்தின் நீண்ட கால ரசிகன் நான்.
-கடல்கணேசன்
எஸ்கே சார்,
குழந்தைகள் டீன் ஏஜில் எதற்கெடுத்தாலும் எதிர்த்துப்பேசுவது, தவறான முடிவுகள், உறவுகளை தன்னிச்சையாக எடுப்பது என்பதெல்லாம் அவர்களுக்குள்ளாக நடக்கும் ஹார்மோன்களின் ஹார்மோனிய வாசிப்பின் சுரம் பிசகுவதாலேயே என்பதை அறிவுறுத்தும் பதிவு இது!
அன்புடன்,
ஹரிஹரன்
இதைப் படிக்கும் போது நமக்கு (அடைப்புக்குறிக்கு வெளியேயுள்ள) இப்படித்தான் ஏற்பட்டது என நினைக்கத் தோன்றுகிறது.
அதற்கு பெற்றோர்கள் என்ன செய்யனும் என்பதற்கு அடுத்த உங்கள் பதிவுக்கு காத்திருக்கிறேன்.
மருத்துவரே!,
மிக அழகாக சொல்லி வந்திருக்கிறீர்கள்....
நன்றி.
ஐயா,
முழுவதும் படித்து விட்டேன். நன்றாக வந்துள்ளது இப்பதிவு.
நன்றி
//இவை அனைத்தும் வெளிப்படும் ஒரே நிலை பாலியல் மூலம் என்று நான் சொன்னால் நம்ப மாட்டீர்கள்;
ஆனால் இதுதான் உண்மை என ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்திச் சொல்லுகின்றனர்//
இதை பெற்றொர்களால் ஒத்துக்கொள்ள முடிவதில்லை... ஆனால் நீங்கள் சொன்னது போல் இது தான் உண்மை..
அவர்கள் ஏதாவது தப்பு செயதால் 'இத்தன வயசாச்சு, இன்னும் இப்பிடி நடந்துக்கிற' என்று குறை கூறுவதும், ஏதாவது கேள்வி கேட்டால்
'இந்த வயசில உணக்கு எதுக்கு இது எல்லாம்..இன்னும் நீ சின்ன பெண்'.. என்று கூறி அடக்குவதும் எல்லார் வீட்டிலும் சாதாரணமாக நடக்கும் அன்றாட நடக்கும் நிகழ்வு... இதன் காரணமாக தான் பெற்றோர்களிடம் குழந்தைகள் எதையும் பகிர்ந்து கொள்வதில்லை
//இதிலேயே மலைத்துப் போய் பாதிப்பேர் காணாமல் போய்விட்டார்கள்!எடுத்த காரியத்தை முடிக்காமல் விடக் கூடாது என்பதால் மிகுதியையும் சொல்லாமல் போகப்போவதில்லை நான்!//
கண்டிப்பா செய்யுங்க.. நாலு பேர் படிச்சாலும் அது உங்களுக்கு வெற்றி தான்.
மங்கை
//
மாற்றுக்கருத்து இல்லையே என்பதற்காக நான் இதுவரை உங்கள் பதிவுகளில் பின்னூட்டம் இட்டதில்லை..
ஆனால் இப்படி படித்துவிட்டு அமைதியாகப் போவது, உங்கள் முயற்சியை தளர வைத்துவிடுமோ, என்ற பயம்வர இந்த பின்னூட்டம்..(நீங்கள் 'எடுத்த காரியம் முடிப்பீர்கள்' என்பதை உணர்ந்தேன்.. இருந்தாலும்..)
நீங்கள் எழுதும் எல்லாவற்றையும் உண்மையான புரிதலுடன் வாசித்து, மனதில் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம்.. தயவு செய்து இதே உற்சாகத்துடன் தொடருங்கள்..
உங்கள் எழுத்தின் நீண்ட கால ரசிகன் நான்.
-கடல்கணேசன்
//
நான் சொல்ல நினைத்ததுவும் அதுவே. தொடருங்கள்
இந்த ஹார்மோன்களால் பெற்றோர்கள் எதிரிகளாய்த் தெரிவதும், அவர்களின் மீது மரியாதை குறைவதும் பற்றியும் பேசுவீர்களா?
//மாற்றுக்கருத்து இல்லையே என்பதற்காக நான் இதுவரை உங்கள் பதிவுகளில் பின்னூட்டம் இட்டதில்லை..//
இப்படி இல்லாமல் ஒரு உள்ளேன் ஐயா எனச் சொல்லலாமே. எழுதுபவர்களுக்கு யார் யார் வந்து படிக்கிறார்கள் எனத் தெரியும் அல்லவா?
(இது இவர் பதிவுக்கு மட்டும் இல்லை. எனக்கும் தான்!)
நீங்கள் சொல்லியிருக்கும் அனைத்தையும் ஒத்துக் கொள்ளதான் வேண்டியிருக்கிறது. அந்த வயதைத் தாண்டித்தானே வந்திருக்கிறோம். "சொல்லித் தோன்றுமோ மன்மதக் கலை" என்றாரே கவியரசர். ரொம்பச் சரிதான் அது.
அதற்குத்தான் இப்பாலியல் கல்வியை 3 வயதிலிருந்து ஆரம்பித்தேன், செல்வன்.
இப்படி வளர்ந்த குழந்தைகள் ஒரு அளவு புரிதலோடு இருக்கும்.
அவர்களில் தான் இரண்டு விதமாய்ப் பிரிவு ஏற்படும் எனச் சொல்லியிருக்கிறேன்.
அப்பாவிகளாய், அல்லது அதிக செல்லம் கொடுத்து, பணத்திமிரினால் சிறு வயதிலேயே திமிர் பிடித்தவர்களாய், சற்று மந்தமாய் என்று வேறு சிலர் உண்டு.
அவர்களைக் குறித்தல்ல இப்பதிவு.
பெரும்பாலான பெற்றோர்களும், குழந்தைகளும் அறிய வேன்டிய, அறிவிக்கப் பட வேண்டிய நிகழ்வுகளைத்தான் சொல்ல நினைக்கிறேன்.
யார் மூலம் என்ற கேள்வி வரும்போது, பெற்றோர் மூலம் வருவதே சிறந்தது என்பது என் கருத்து.
அதற்கு அவர்களைத் தயார் செய்யவே இப்பதிவுகள்.
நன்றி.
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி தான் ராத ச்ரீராம்.
அப்படி இருப்பவர்களின் கவனத்தைக் கவரவே இப்பதிவுகள்.
டில்லிக்கு ராஜான்னாலும், தாய்க்குப் பிள்ளைதான் என்பது உண்மையே.
அதே சமயம் அவன் டில்லிக்கும் ராஜா என்பதை மறந்து விடக் கூடாது என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.
கருத்துக்கும், வருகைக்கும் நன்றி.
பதிவிட்டும், தனிமடைட்டும் என்னை நெகிழ வைத்து விட்டீர்கள், திரு. கடல் கணெசன்.
உங்கள் வார்த்தைகள் படிக்க உற்சாகமாயிருந்தது.
படிக்க வருபவர்களைத் தெரிந்து கொள்ளலாமே என்ற ஆர்வத்தில் அப்படி எழுதினேன்.
கனிவான சொற்களுக்கு மிக்க நன்றி.
னானும் தங்களது விறுவிறுப்பான "கற்றது கடலளவு" ரசிகன் தான்!
:))
மிகவும் ரசித்த வரி, 'ஹார்மோன்களின் ஹார்மோனிய வாசிப்பின் சுரம் பிசகுவதாலேயே'!
மிக அருமையாச் சொல்லியிருக்கிறீர்கள்.
நன்றி.
உங்கள் 'காத்திருப்பு' வீண் போகா வண்ணம் எழுத முயல்கிறேன், திரு. சுல்தான்.
மிக்க நன்றி.
மிக்க நன்றி, திரு. மௌல்ஸ்.
வாங்க ராம்.
"கல்யாணக்களை"யில் இருந்து தப்பித்து அடுத்த பதிவுக்கு போயாச்சா?
ஒண்ணு சொன்னா உடனே உன் அனுபவமான்னு கேட்டுர்றாங்க இல்லை!
நன்றி.
ஒவ்வொரு பதிவு எழுதியதும் நான் எதிர்பார்ப்பது உங்களது ஆக்க பூர்வமான கருத்துகளைத்தான்! மன்க்க்கை.
இம்முறையும் ஏமாற்றாமல், மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
ராதா ஸ்ரீராம் சொன்னது போல, இந்த கட்டை உடைக்க பெற்றோர் முன் வர வேண்டும்.
நன்றி.
வழக்கம் போல் ரத்தினச் சுருக்கமாய் ஒருவரியில் கடல் கணேசனைப் படியுங்கள் என்று சொல்லி இரட்டிப்பு ஊக்கத்தைக் கொடுத்ததற்கு நன்றி,ஜெயஸ்ரீ!
[c&p only!]
உற்சாகபடுத்தும் வழியே சந்தடி சாக்கில் சுய விளம்பரம் செய்து கொண்டதற்கும் நன்றி, இ.கொ.!
அப்படியே அதை மறந்து விடாமல், உங்கள் பிள்ளைகள் காலத்தில், அதை கொஞ்சம் மாறுதலாய்ச் செய்யுங்கள், ஜி.ரா.!
நன்றி.
//I feel it is not that they dont understand the changes thats happening to their son or daughter but just they dont want to accept it....dont you think so??//
இப்படி ராதா. எஸ் தனது அனுபவப் பூர்வமான, ஒரு பெற்றொரின் நிலையிலிருந்து அருமையாக தனது உணர்வினை இங்கு தைத்து வைத்திருக்கிறார்...
//'இந்த வயசில உணக்கு எதுக்கு இது எல்லாம்..இன்னும் நீ சின்ன பெண்'.. என்று கூறி அடக்குவதும் எல்லார் வீட்டிலும் சாதாரணமாக நடக்கும் அன்றாட நடக்கும் நிகழ்வு... இதன் காரணமாக தான் பெற்றோர்களிடம் குழந்தைகள் எதையும் பகிர்ந்து கொள்வதில்லை//
இப்படி மங்கை அவர்கள் கூறியிருப்பதின் மூலமும், இந்த இரு பொற்றொர்களும் எப்படி தனது குழந்தைகளிடத்தே எஸ்.கே கூறிவரும் புரிதல்களுடன் அணுகும் பொருட்டு அக் குழந்தைகளின் வளர்ச்சியினுடே இவர்களும் திளைத்து அனுபவித்து வாழ்ந்து வரக்கூடும் என்பது எனக்குத் தெளிவாகிறது.
இவர்களைப் போன்றவர்கள் இந்த பதிவின் மூலம் தாங்களுடை அணுகு முறையை இன்னும் கொஞ்சம் விளக்கமாக முன் வந்து பகிர்ந்து கொண்டால் இன்னும் இங்கு படிக்கும் பலருக்கும் பிரயோசனமாக இருக்கும்.
நன்றி எஸ். கே :-)
தெகா.
அனைவரையும் அழைத்ததன் காரணத்தை மிகத் தெளிவாக சொல்லி விட்டிர்கள், தெ.கா.
பதிவின் மூலம் பலர் இங்கு தங்கள் அனுபவச் சிதறல்களைப் பகிர்ந்து கொண்டு மற்றவர்க்கும் பயனுறுமாறு செய்ய முடியும்.
மிக்க நன்றி.
மிக்க நன்றி, வைசா.
செவ்வாயன்று வரும் அடுத்த பதிவு.
Thanks for your comments Mr.'KP'.
I hope you will like that too. Please share your experiences if possible.
Thanks.
Dear Sk,
since you ve asked the readers to share about their experiences i thought i will share my experience with you.
Iam a harry potter fan...infact i went to barnes and nobles at the middle of the night to get my first copy of the last book of the harry potter series. The same way i also love to watch the harry potter movies also.I never get tired watching those movies. But what happend was i always complained that i did not enjoy the recent ones as well as i did the first 2 ones...(it has got nothing to do with direction or for that matter any cinematic techiniques!!)it was just that i could not accept that those charming actors have grown up!! isnt that funny??i kept on complaining to my son oh see how cute they use to be and now they all grown up and on and on.....one fine day my son just put a stop to this by saying you say the same thing to me....and why do you always say that i was so cute when i was little..why dont you never appreciate what iam right now???....That put a full stop to my nagging. So finally what i want to say is as you have very well written in yr post that it is important for a parent to watch them grow, give them space, guide them through their turbulent teenage years and just not be ignorant or try to to escape what is happening to their body and mind.
Thanks
Radha
That's the main point Ms. Radha.
We need to be aware of their growth and the fact that growth occurs both physically and emotionally.
They need guidance, not control, understanding, not abuse and sincere love not blind doting.
If the parents become aware of this and treat them well they will not only err but will come to us with faith.
Thanks for your input.
//வாங்க ராம்.
"கல்யாணக்களை"யில் இருந்து தப்பித்து அடுத்த பதிவுக்கு போயாச்சா?//
ஹி ஹி ஆமாம் ஐயா...
//ஒண்ணு சொன்னா உடனே உன் அனுபவமான்னு கேட்டுர்றாங்க இல்லை!//
அப்பாடி நீங்களாவது எனக்கு ஆதரவு கொடுத்திங்களே அதுப் போதும் எனக்கு.... :-))))
Post a Comment
<< Home