"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" -- 17
"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" -- 17"
அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்"
" நீ செஞ்ச காரியத்தோட தீவிரம் என்னான்னு தெரியுதா ஒனக்கு?
ஒன்வயசுல ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுத்துட்டு இப்ப நீ வந்து நிக்கற!
ஒன்னோட அவசரத்துல, நாளையப்பத்தி நெனைக்காததுனால, அவளை கெர்ப்பமாக்கிட்டு, ஒனக்கென்ன போச்சுன்னு ஹாய்யா வந்துட்ட.
நீ செஞ்ச காரியம் எப்படிப் பட்டதுன்னு ஒரு உதாரணம் சொல்றேன் கேளு.
சின்ன வயசுலேந்து ஒன்னை எம்மடியில ஒக்கார வெச்சுகிட்டு ஸ்டியரிங்கைப் பிடிச்சு ஒன்னைக் காரோட்ட வெச்சேன்.
ஆனா, இன்னி வரைக்கும் ஒனக்கு லைஸென்ஸ் எடுக்கலை.
ஏன்?
ஒனக்கு அதுக்கான வயசு இன்னும் வரலை.
ஒனக்கு கார் ஓட்டத் தெரியும்.
ஆனா, ஒரு ஆக்ஸிடெண்ட் ஆச்சுன்னா என்ன பண்ணணும்னு தெரியாது.
யாரைக் கூப்புடணும்; எங்கே கூட்டிக்கிட்டு போவணும்னு தெரியாது.
அது மட்டுமில்லை.
இதுக்கப்புறம் நீ கார் ஓட்டவே முடியாது..... இன்னும் கொஞ்ச நாளைக்கு.
அது மாதிரிதான் வாழ்க்கையும்!
வயசுக் கோளறுல, ஒரு ஆர்வத்துல நீ செஞ்சுட்டேன்னு எனக்கு புரியுது.
ஆனா,ஊர் ஒலகத்த்துக்கு இது புரியுமா?
புரியாது.
அந்த பொண்ணுக்கு நீ வாழ்வு கொடுக்கணும்.
இப்படி சொல்றதே எனக்கு அவமானமா இருக்கு.
ஆனா, இதுதான் இப்ப நம்ம ஒலகம்.
இதுக்கான முழுப் பொறுப்பும் நீதான் சொமக்கணும்.
அதான் முறையுங்கூட.
இத நீ செய்வேன்னு எதிர் பாக்கறேன்."
இதுதான் முறையான பிள்ளையைப் பார்த்து சொல்லக் கூடியது.
இந்த கார் உதாரணம் ஒரு பெண்ணுக்கும் பொருந்துவதே!
பெண் பறவை கர்ப்பமானால், ஆண் பறவை கூடு கட்டும்.
தன் துணை இறந்தால், வயிற்றில் கல் சுமந்து ஆண் பறவை கீழே விழுந்து உயிர் மாய்க்குமாம்!
இவற்றை விடவா கேவலமானவர்கள் நாம்!
பறவைகளைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்!
இதுவரை நாம் பார்த்தது, ஒரு மாதிரி நம் கட்டுப்பாட்டில் இருந்த நம் பிள்ளைகளைப் பற்றி!
இத்தோடு நம் பொறுப்பு முடிந்தததா?
மணமாகி, மணம் முடித்து, அவர்களை அனுப்பியபின், நமக்கு ஏதாவது பொறுப்பு உண்டா?
அடுத்த, கடைசி பதிவில், பார்க்கலாம்.
6 Comments:
Sivabalan said...
SK அய்யா
நல்ல தொடர்.
அதற்குள் கடைசி பதிவு வந்துவிட்டதா?! தொடர் போனதே தெரியவில்லை.
பதிவுக்கு நன்றி
3:12 PM
இலவசக்கொத்தனார் said...
எஸ்.கே.
ஒரு நிமிட நேரம் (சரி அதைவிட கொஞ்சம் ஜாஸ்தி நேரம்) உணர்ச்சிகளை கட்டுக்குள் வைக்காத இருவருக்கும், தமிழ் சினிமாவில் சொல்வது போல், மணம் புரிவது ஒன்றுதான் வழியா?
அவர்கள் இருவரும் அதற்குத் தயாரான நிலையில்தான் இருக்கிறார்களா எனப் பார்க்க வேண்டாமா? பதின்ம வயதில் இருக்கும் பையனை தன் ஆளுமைக்குக் கீழ் கொண்டு வந்து அவன் மூலம் கருவை சுமக்கும் ஆசிரியையோ அல்லது பக்கத்து வீட்டு ஆண்ட்டியையோ அந்தப் பையன் மணந்து கொள்ள வேண்டுமா? அவர்களுக்கு ஏற்கனவே மணமாயிருந்தால்?
இரு வீட்டாரும் கலந்து பேசி அடுத்து ஆக வேண்டிய வழிகளை ஆலோசிக்காமல், கல் சுமந்து கீழே விழும் பறவைன்னு உதாரணம் குடுக்கறது அவ்வளவு உசிதமா படலையே....
3:13 PM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
SK சார்,
என்னது தொடர் முடியப் போகிறதா?...அது சரி நல்லன் முடிந்தாலும் சிந்தனை முடிவதில்லை! அதனால் வேறு சில் அனுபவங்களுடன் மீண்டும் வரலாம் தானே?
அப்பா பையனுக்குச் சொல்லும் கார் உவமை அருமை. காரை ஓட்டிச் செய்யும் தவறால், கார் ஓட்ட வேண்டிய இன்றியமையாத வயதில், லைசன்ஸ் பறிக்கப்பட்டு, ஏன் வாழ்வில் ஒரு அருமையான கட்டத்தைத் தொலைக்க வேண்டும்?
நன்றாகச் சொல்லி உள்ளீர்கள்; தொடர் முடிந்தவுடன், E-book க்காக மாற்றி நிரந்தரச் சுட்டி தர மறவாதீர்கள்!
5:52 PM
கோவி.கண்ணன் [GK] said...
எஸ்கே ஐயா !
காரும், பெண்ணும் சரியான உதாரணம். அபூர்வ சகோதர்கள் படத்தில் கமல்ஹாசன் 'ராஜ கைய வச்சா ராங்கா போவதில்லை' ன்னு காரையும் பெண்ணையும் ஒப்பிட்டு ஒரு பாட்டு பாடுவார்.
சரியான வயது வருமுன் பாலியல் அனுபவம் ஆகிஸ்சிடெண்ட் மட்டுமா ஆகும் ! பெண்ணின் பெற்றோர்கள் சம்பந்த பட்ட பையனுக்கு மைனர் பெண்ணை கெடுத்தற்காக கடுங்காவல் தண்டனையும் வாங்கி கொடுத்துவிடுவார்கள்.
கல்யாணத்துக்கு முன்பே மாமியார் வீடுதான்.
பசங்க அவசரமே படக்கூடாது.
8:51 PM
ஆரம்பிக்க தூண்டுகோலாய் இருந்தவரே நீங்க்ள்தான், சிபா!
இப்பதிவு ஏதேனும் விதத்தில் ஒருசிலருக்கேனும் பயன்பட்டிருந்தால் அதில் உங்களுக்கும் முழுப் பங்கு உண்டு!
நன்றி!
என்ன சொல்கிறீர்கள் இ.கொ.?
பையனுக்கு பொறுப்பு இல்லை என்று எப்படி சொல்ல முடியும்?
அந்த பெண்ணைப் பற்றி நினைத்தீர்களா நீங்கள்?
இன்னும் ஒரு பெண்ணைப் பெறாததினால் இப்படி பேசுகிறீர்கள் என நினைக்கிறேன்.
நான் சொன்னது நம் கலாச்சாரத்தை ஒட்டி.
இரு குடும்பத்தாரும் சேர்ந்து பேசி இது சரியில்லை என ஒருமனதாய் ஒப்புக் கொண்டால் நீங்கள் சொல்லும் அடுத்த வழியை யோசிக்கலாம்.
இது ஒரு தந்தை தன் மகனுக்கு கூறும் அறிவுரை மட்டுமே.
கருத்துக்கு நன்றி.
//நல்லன் முடிந்தாலும் சிந்தனை முடிவதில்லை!//
சரியாகச் சொன்னீர்கள் ஷண்மதச் செம்மலே!!
இது பற்றி மேலும் சிந்திக்க வேண்டும் ஒவ்வொரு பெற்றோரும் என்ன்பதே என் அவா.
நான் கூறியது ஒரு பொதுவான நிலைப்பாடு மட்டுமே!
வீட்டுக்கு வீடு இது வேறுபடலாம்.
அதற்கு சிந்தனை மிகவும் இன்றியமையாதது.
மிக்க நன்றி.
//பசங்க அவசரமே படக்கூடாது.//
நீங்க பசங்க என்று குறிப்பட்டது இருவரையும் சேர்த்தே என நம்புகிறேன் கோவியாரே!
இருவருமே பொறுமை காத்தல் அவசியம்.
இல்லாவிடின், விளைவுகளை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.
நன்றி.
//மணம் புரிவது ஒன்றுதான் வழியா?//
அப்படி நான் பதிவில் குறிப்பிடவில்லையே, இ.கொ.
பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் எனத்தான் சொல்லி இருக்கிறேன்.
அது எப்படி வேண்டுமானாலும் அமையலாம்.
மணமும் ஒரு வழியே!
மீண்டும் நன்றி!!
:)
Post a Comment
<< Home