"கசடற"

அறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன். முழுக்க முழுக்க இவை என் கருத்துகள் மட்டுமே! முருகனருள் முன்னிற்கும்!

Saturday, March 31, 2007

"லப்-டப்" -18 " கவிதை வாங்கி வந்தேன்"

"லப்-டப்" -18 " கவிதை வாங்கி வந்தேன்! "

{இதற்கு முந்தைய பதிவை[17] பக்கத்தில் திறந்து வைத்துக் கொள்ளவும். இது இன்னும் சற்று நன்கு புரியலாம்!}

வீட்டுக்குள் நுழைந்ததும் முதல் வேலையாக தெய்வநாயகி அம்மாள் தன் தம்பி செந்தில்நாதனுக்கு ஒரு ஃபோன் போட்டார்.

"தம்பி! மாமாவுக்கு உடம்பு சரியில்லை. டாக்டர் என்னமோ டெஸ்டுல்லாம்[test] எடுத்துக்கணும்னு சொல்றாரு. நீ உடனே வள்ளியம்மையைக் கூட்டிகிட்டு உடனே புறப்ப்பட்டு வா. நீ கூடமாட இருந்தா எங்களுக்கும் ஒரு தெம்பா இருக்கும்"

சரிக்கா! மாமாவை தெகிரியமா இருக்கச் சொல்லு. நாங்க ஒடனே புறப்படறோம்" என்றார் செந்தில்நாதன்.

சொன்னபடியே மறுநாள் வள்ளியம்மையுடன் வந்து சேர்ந்தார் செந்தில்நாதன்.

"நான் டாக்டருகிட்ட பேசிட்டேன். ஒண்ணும் பயமில்லைன்னு சொல்றாரு. நாளைக்கு போய் பார்ப்போம். எல்லாம் சரியாயிடும். அதான் நான் வந்துட்டேன்ல" என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.

மறுநாள் இருவருமாக [க.சா+செ.நா] டாக்டரைப் போய்ப் பார்த்தனர்.

எடுக்கப்பட வேண்டிய எல்லா டெஸ்டுகளும் எடுக்கப்பட்டன.

எல்லாவற்றையும் கவனமாகப் பார்த்துவிட்டு டாக்டர் சொல்ல ஆரம்பித்தார்.

"இந்த இதய பலவீனம் [Heart Failure] என்பது ஒரு தலைவலி, ஜுரம் மாதிரி டக்குன்னு வர்றதில்லை.
படிப்படியாத்தான் வரும்.
நான் அன்னிக்கு சொன்ன மாதிரி, மூச்சு வாங்குதல்ல ஆரம்பிச்சு, கொஞ்சம் கொஞ்சமா அதிகரிக்கும்.
சில பேரு தள்ளிப் போட்டுருவாங்க சில பேரு, உங்களைப் போல, உடனே டாக்டர்கிட்ட வந்திருவாங்க.
இதுல நாலு நிலை இருக்கு, மருத்துவ ரீதியா.

முதல் நிலை[Stage I]:
இதய பலஹீனம்[Heart Failure] வர்றதுக்கான காரணங்கள்[Risk Factors] அதிகமா இருக்கறவங்களை இதுல வைப்போம்.


ரத்தக்கொதிப்பு[Blood Pressure], நீரிழிவு[Diabetes], கரோனரி நாள நோய்[CAD], மது அதிகமாய் அருந்துபவர்கள், இதற்கு முன், முடக்கு ஜுரம்[Rheumatic Fever] வந்தவர்கள், குடும்பத்தில் எவருக்கேனும் இதய பலவீனம் வந்திருப்பவர்கள் இருந்தால்[Family history of Hear failure] இவர்களுக்கெல்லாம் இந்த நோய் வர அதிகம் சான்ஸ்[chance] இருக்கு.

இவங்க உங்களைப் போல மூச்சு வாங்குது டாக்டர்னு வந்தா, அவங்களை "முதல் நிலை" எனச் சொல்லுவோம்.

இரண்டாம் நிலை[Stage II]:
ஸிஸ்டாலிக் ஹார்ட் ஃபெயிலியர்[Systolic Heart Failure] சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு, ஆனால், இதய பலவீனத்தீற்கான அறிகுறிகள் இதுவரை வராதவர்கள்[ no symptoms] இதில் அடங்குவர்.

ஈ.எஃப்[EF] 40%க்கு கீழ் இருப்பவர்கள் இவர்கள்.

மூன்றாம் நிலை[Stage III]:
அறிகுறிகள் வெளிப்படையாக[நிர்தர்ஸனமாக] தெரிய வரும் போது அவர்களை இந்த நிலையில் சேர்க்கலாம்.

அதிகமாக மூச்சு வாங்குதல்[Shortness of breath], அசதி[Fatigue] , வேலை செய்ய முடியாமல் போதல்[Excercise intolerance] இதெல்லாம் நன்றாகவே புலப்படும்.

நான்காம் நிலை[Stage IV]:
முறைப்படி கண்டுபிடிக்கப்பட்டு, சிகிச்சையும் தொடங்கப்பட்டு, அது பலனளிக்காமல் போனவர்கள் இருக்கும் நிலை இது!

"அதெல்லாம் சரி டாக்டர்! இப்ப எங்க மாமாவுக்கு எந்த ஸ்டேஜ்? அதைச் சொல்லுங்க. அத்தோட அந்தந்த ஸ்டேஜுக்கு என்ன ட்ரீட்மெண்ட் கொடுப்பீங்க. அதையும் சேர்த்தே சொல்லுங்க" என்றார் செந்தில்நாதன்.

மருத்துவர் தொடர்ந்தார்.

முதல் நிலைல இருக்கறவங்களைப் பத்தி அதிகமா கவலைப்பட வேண்டாம். ஒழுங்கா ரெகுலரா எக்ஸெர்ஸைஸ் பண்ணிகிட்டு, புகை பிடிக்கறதை விட்டுட்டு, மது, மாத்திரை இது மாதிரி பழக்கம் இருந்தா, அதுக்கெல்லாம் ஒரு டாட்டா பெர்மெனன்டா சொல்லிட்டு, ரத்தக்கொதிப்பு, நீரிழிவு நோயை முறையா கட்டுப்படுத்தினா போதும். இவங்க நார்மலுக்கு வந்திடுவாங்க.

இரண்டாம் நிலைக்காரங்களுக்கு, மேலே சொன்ன எல்லாத்துடன் கூட, ஏஸ்-1, பீட்டா ப்ளாக்கர் என்கிற மாத்திரை[ACE-1, Beta Blockers] கூட சேர்த்துக்கணும்.
தேவைப்பட்டா, அறுவைச் சிகிச்சையும் [Caronary artery revascularization, valve repair/ replacement] நடக்கலாம்.

மூன்றாம் நிலை: முதல் இரண்டு நிலைகளில் சொன்னதுடன் கூட, வேறு சில உபரி மாத்திரைகளும் சேர்க்கப்படும்.

அறுவை சிகிச்சையும் நிகழலாம்.
உணவு, எடை இவற்றில் கடுமையாகக் கவனம் செலுத்த வேண்டும்.

நான்காம் நிலையில் இருப்பவர்கள் பாடுதான் கொஞ்சம் கடினம்.

இதய மாற்ற அறுவை சிகிச்சை[Heart transplantation],
வெண்ட்ரிகிளை இயங்க வைக்கும் உபகரணங்கள் பொருத்துதல்[Ventricle assist devices],
வேறு சில அறுவை சிகிச்சைகள்[other surgical options],
ஆய்வுக்காக வந்திருக்கும் புது மாத்திரைகளைப் பரிசோதனைக்காக ஒரு 'கினி பிக்'[Guinea Pig] போல சோதனைக்கு உட்படுதல்[Research Therapirs], இவையெல்லாமும் பலனளிக்காத போது, இருக்கும் கொஞ்ச நாட்களையாவது அதிக கஷ்டம் இல்லாமல் செய்யும் வழிமுறைகள்[End of Life care] இதற்கு ஆளாக வேண்டியிருக்கும்."

"என்னங்க பயமுறுத்தறீங்க, மாமாவுக்கு இப்ப ...." என பதட்டமாகக் கேட்டார் மைத்துனர்!

"எல்லா டெஸ்டும் பண்ணியாச்சு. கந்தசாமி சாருக்கு வந்திருப்பது இப்ப இரண்டாம் நிலைன்னு சொல்லலாம். கொஞ்சம் சர்க்கரை நோய் இருக்கு. பி.பி.யும்[] கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கு.
இதையெல்லாம் கட்டுப்படுத்தணும்.
உப்பு, எண்னை இதையெல்லாம் குறைக்கணும்.
நேரத்துக்கு சாப்பிடணும்.
இந்த நொறுக்குத்தீனியெல்லாம் விட்டுறணும்.
சும்மா டேஸ்டுக்கு வேணுமின்னா சாப்பிடலாம்.
கூடவே மருந்து மாத்திரை சிலது எழுதித் தரேன்.
அதை வேளை தவறாம எடுத்துக்கணும்.
வாக்கிங் ரெகுலரா போயிட்டு வாங்க.
ரொம்ப தூரம் போக வேணாம்.
லேஸா மூச்சு வாங்க ஆர்மிச்சதுன்னா, பக்கத்துல நிழலல ஒரு இடத்துல ரெஸ்டு எடுத்துக்கங்க.
வெயில் வேளையில் நடக்க வேண்டாம்.
3 மாசத்துக்கு ஒரு தடவை செக்-அப்புக்கு வரணும்.

நடுவில் ஏதேனும் நோயின் அறிகுறிகள் அதிகமாகிற மாதிரி இருந்தா, உடனே எனக்கு ஒரு ஃபோன் போடுங்க.
இதெல்லாம் ஒழுங்கா செஞ்சுகிட்டு வந்தா, இதைப் பெருமளவில் கட்டுப்படுத்தலாம்.
பயப்பட வேண்டாம்" என்று சிரித்துக் கொண்டே சொன்னார் மருத்துவர்.

"என்கிட்ட சொல்லிட்டீங்கள்ல! கவலையை விடுங்க! நான் பார்த்துக்கறேன்." என்று சொல்லி செந்தில்நாதன் கந்தசாமியைக் கூட்டிக்கொண்டு வீடு திரும்பினார்.

நுழைந்ததுமே, கையில் ஒரு தட்டு நிறைய முறுக்கு, மசால் வடை, மைசூர்பாக்கு ஐட்டங்களோடு வள்ளியம்மை வரவேற்றார்!

"இதையெல்லாம் உள்ளே கொண்டு போயிடு. இதெல்லாம் மாமா கண்ணுல இனிமே காட்டவே கூடாது! இதெல்லாம் அவருக்கு ஆவாதாம் இனிமே!" என்று கண்டிப்புடன் சொன்னார் செந்தில்நாதன்.

"ஏங்க! என்ன சொன்னாரு டாக்டரு? மாமாவுக்கு ஒண்ணும் இல்லேத்தானே? "எனக் கவலையுடன் கேட்டார் வள்ளியம்மை.

டாக்டர் சொன்ன விஷயங்களை எல்லாம் ஆதியோடு அந்தமாகச் சொல்லி முடித்தார் செந்தில்.

"நாம ஒரு ஒரு மாசம் இங்கே தங்கி எல்லாத்தையும் சரியா ஒழுங்கு பண்ணிட்டுதான் ஊருக்கு போவப் போறோம். மாமாவுக்கு ஒண்ணும் பெருசா வந்துறலை. கவனமா இருந்தா எல்லாம் சரியாயிடும்" எனச் சொன்னதும் பெண்கள் இருவரும் சற்று மன நிம்மதி அடைந்தனர்.

இது தொடர்பான சில மேல்விவரங்களை அடுத்த பதிவில் காணலாம்.


[இங்கு சொல்லப்பட்டவை உங்கள் தகவலுக்காகவே!
மருத்துவரைக் கலந்து ஆலோசிக்கத் தவறாதீர்கள்!]

22 Comments:

At 6:13 AM, Blogger கோவி.கண்ணன் said...

Test பின்னூட்டம்... மருத்துவ பதிவுக்காக !
:))

 
At 6:15 AM, Blogger VSK said...

நன்றி, கோவியாரே!
:))

 
At 6:59 AM, Blogger SP.VR. SUBBIAH said...

///உப்பு, எண்னை இதையெல்லாம் குறைக்கணும்.
நேரத்துக்கு சாப்பிடணும்.
இந்த நொறுக்குத்தீனியெல்லாம் விட்டுறணும்.
சும்மா டேஸ்டுக்கு வேணுமின்னா சாப்பிடலாம். ////

உண்மை எஸ்.கே சார்
உணவுக்கட்டுப்பாடு அவசியம்!
ஆனால் எங்கே முடிகிறது?
இதெல்லாம் தெரிவதற்குள் நிலமை
கட்டுக்குள் இல்லாமல் போய்விடுகிறதே!

வைரமுத்து அவர்கள் சொன்னதுதான்
நினைவிற்கு வருகிறது!

"நாற்பது வயதுவரை அவர்கள் சாப்பிட உணவு!
நாற்பதற்குமேல் அவர்களையே சாப்பிடும் அந்த உணவு!"

 
At 7:42 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

காற்று வாங்கப் போகாமலேயே கவிதை நல்லாப் புரிஞ்சுதுங்க. என் வாழ்க்கையில் முதல் முறையாக கவிதை புரிந்தது. அதுக்கு நன்றி டாக்டர்.... :)))

//எல்லாம் சரியாயிடும். அதான் நான் வந்துட்டேன்ல//

செந்தில்நாதனே வந்தாச்சு,அதுவும் வள்ளியம்மையோட அப்புறம் என்ன கவலை!!

 
At 7:50 PM, Blogger VSK said...

ஆமாம் ஆசானே!

நாட்களை நீட்டிக்க, நாவைக் கட்டுப்படுத்துதல் மிகவும் அவசியம்.

தாமதமாக மறுமொழி இடுவதற்கு மன்னிக்கவும்.

 
At 7:52 PM, Blogger VSK said...

வெண்பா வேந்தரிடமிருந்து இப்படி ஒரு பாராட்டா?

என்னால் நம்பவே முடியவில்லை!

இதைக் கேட்டு வாங்கிப் போக மாட்டீர்களே?

:)))

 
At 6:18 AM, Blogger ஷைலஜா said...

காற்று வாக்கில் எதோ சொல்வதுபோல இல்லாமல் கவிதையைபோல் ஆழ்ந்து அழகாய் விவரமாய் நீங்க சொல்லும்போது அதைகேட்டுக் காதில் வாங்கிக்காம இருப்போமா எஸ்கே? ஸாரி..விஎஸ்கே?:0
அப்படி விட்டா இந்த கணினி என்ன
ஆகும்?:)

 
At 7:14 AM, Blogger நாமக்கல் சிபி said...

//நாற்பது வயதுவரை அவர்கள் சாப்பிட உணவு!
நாற்பதற்குமேல் அவர்களையே சாப்பிடும் அந்த உணவு!"//

வாத்தியாரய்யா எங்கே போனாலும் கலக்குறாரே!

 
At 7:17 AM, Blogger நாமக்கல் சிபி said...

//நாட்களை நீட்டிக்க, நாவைக் கட்டுப்படுத்துதல் மிகவும் அவசியம்.
//

உண்மைதான் வீ.எஸ்.கே அவர்களே!

இனிப்பு, உப்பு, புளிப்பு, காரம், எண்ணெய் இவையெல்லாமே பின்நாளில் உடலுக்கு ஊறுக்கு விளைவிப்பன தானே?

இளவயது முதலே குறைத்துக்

 
At 7:29 AM, Blogger VSK said...

மாஞ்சு மாஞ்சு தலைப்பு வைக்கிறேன்.
யாருமே சொல்ல மாட்டேங்கறாங்களே அதைப் பத்தின்னு நினைத்தேன்.
நீங்க வந்து அழகா ஒரு கவிதை பாடிட்டீங்க!
நன்றி ஷைலஜா!

 
At 7:29 AM, Blogger VSK said...

தெளிய வைப்பவரைக் "கலக்குபவர்" எனச் சொன்னதைக் கண்டிக்கிறேன், சிபியாரே!
:)

உணவில் கட்டுப்பாடுடன் இருப்பது மிகவும் முக்கியம்!
:))

 
At 7:31 AM, Blogger VSK said...

அனானிகளும் இனி என் வலைப்பக்கம் வரலாம்!!
கதவுகள் திறக்கப்பட்டன!!

:)))

 
At 7:31 AM, Blogger நாமக்கல் சிபி said...

//இளவயது முதலே குறைத்துக்//

மன்னிக்கவும். சொல்ல வந்த கருத்தையும் சேர்த்துக் குறைச்சிட்டேன் போல!

இளவயது முதலே குறைத்துக் கொண்டால் பின்வரும் நாட்களில் இரத்த அழுத்தம், அஜீரணம், மாரடைப்பு, முழங்கால் வீக்கம் போன்ற எண்ணற்ற மூப்புகளின் பாதிப்புக்களை பாதியாக்கலாம் அல்லவா!

 
At 7:32 AM, Blogger நாமக்கல் சிபி said...

//அப்படி விட்டா இந்த கணினி என்ன
ஆகும்?:) //

அதானே!

 
At 7:34 AM, Anonymous Anonymous said...

//அனானிகளும் இனி என் வலைப்பக்கம் வரலாம்!!
கதவுகள் திறக்கப்பட்டன!!//

மிக்க நன்றி வி.எஸ்.கே அவர்களே!
தங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவோம் என்று உறுதி கூறுகின்றேன்!

 
At 7:41 AM, Anonymous Anonymous said...

//அனானிகளும் இனி என் வலைப்பக்கம் வரலாம்!!
கதவுகள் திறக்கப்பட்டன!!
//

எங்களை வெச்சி ஏதும் காமெடி கீமெடி பண்ணலையே?

 
At 7:47 AM, Anonymous Anonymous said...

//அனானிகளும் இனி என் வலைப்பக்கம் வரலாம்!!
கதவுகள் திறக்கப்பட்டன!!//

மெல்லத் திறந்தது கதவு?

திறக்கப்பட்டவை உங்கள் இதயத்தின் கதவுகளோ?

லப் டப்
லப் டப்
லப் டப்

 
At 8:15 AM, Blogger VSK said...

உண்மையைச் சொல்லப்போனால், எப்படி மாற்றுவது எனக்கூடத் தெரியாமல் இருந்து வந்தேன், நேற்று வரை!
நண்பர் ஒருவர் உதவினார்.
நல்லா செங்கல் அடுக்குவார் அவர்!
:))

//திறக்கப்பட்டவை உங்கள் இதயத்தின் கதவுகளோ?//

என் இதயக் கதவுகள் எப்போதுமே திறந்துதான் இருக்கின்றன, திரு. மோகன்!

//எங்களை வெச்சி ஏதும் காமெடி கீமெடி பண்ணலையே?//

யாரை வெச்சும் எந்தக் காமெடியும் பண்ணலீங்க அனானியாரே!

//தங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவோம் என்று உறுதி கூறுகின்றேன்! //

வருகைக்கும், வாக்குறுதிக்கும் மனமார்ந்த நன்றி!

 
At 4:08 AM, Blogger dubukudisciple said...

hi vsk
First time in your blog..
romba nalla ezhuthi irukeenga..
kaatru vaanga ponen appadinu thalaipu romba pramatham.. idayathodu sambandam ullathal

 
At 8:48 AM, Blogger VSK said...

வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி "டுபுக்குசீடரே"!

 
At 4:59 PM, Blogger சேதுக்கரசி said...

மருத்துவத் துறையில் End of Life care-னு வேற பேசிக்குவீங்க போலிருக்கு.. அந்த நாலு வார்த்தையக் கேட்டாலே நடுங்குதே!

 
At 9:00 PM, Blogger VSK said...

நடுங்க வேண்டாம், சேதுக்கரசி!

இதுவும் வாழ்வின் ஒரு அங்கம்தானே!

:))

 

Post a Comment

<< Home