"கசடற"

அறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன். முழுக்க முழுக்க இவை என் கருத்துகள் மட்டுமே! முருகனருள் முன்னிற்கும்!

Sunday, February 04, 2007

"லப்-டப்" -- 10 "நடை தளர்ந்தது நாளமல்லவா"

"லப்-டப்" -- 10 "நடை தளர்ந்தது நாளமல்லவா!"

ரத்தம் பற்றிய சில தகவல்களை இதுவரை பார்த்தோம். விரைவில் இதயத்தை நோக்கி நம் பயணம் சென்றடைய வேண்டும் என்பதால், இந்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளங்களைத் தாக்கும் சில நோய்களை [Vascular diseases] இன்று பார்க்கலாம்!






1. புற நாள நோய் [Peripheral vascular Disease,[aka] Peripheral Arterial & Venous Diseases [aka] PAD & PVD]

சுத்த ரத்தத்தையும், அசுத்த ரத்தத்தையும் எடுத்துச் செல்லும் பணியை இந்த நாளங்கள் செய்கின்றன.

இதற்கு இதன் உட்பகுதி ஒரே சீராக, வழுவழுப்பாக [smooth] இருக்க வேண்டும்.
அப்போதுதான் ரத்தம் தங்கு தடையின்றி ஓடும்.

அதிகப்படியான கொழுப்பு [fat], கொழுப்புச் சத்து [cholestrol], இன்னும் சில பொருள்கள் [Inflammatory cells, proteins, and calcium] ரத்தத்தில் மிதந்து செல்லுகையில், நாளங்களின் உட்பகுதி இவற்றால் பாதிக்கப்பட்டு,குறுகலாகிறது.
சில சமயங்களில் அங்கங்கே அடைப்பும் ஏற்படுகிறது.

இவ்வாறு நிகழும் போது, இந்த நாளங்களால் பயன்பெறும் உடல் பாகங்கள் சரியான சத்தை [O2& nutrients] பெறமுடியாமலோ, [அ] கழிவுப்பொருட்களை உடனடியாக அகற்ற முடியாமலோ வலு இழக்கின்றன; நசித்துப் போகின்றன.

இவ்வாறு நிகழ்வதற்கு 'PAD/PVD' எனப் பெயர்.

இதனால், இதயத் தாக்குதல்[Heart attack]. சிறு அளவிலான [அ] பெருமளவிலான மூளைத் தாக்குதல்[Transient Ischemic Attack or Stroke], நடைவலி [Claudication], தோலின் நிறம் மாறுதல் [Skin color changes], புண்கள் [sores & ulcers], போன்றவைகள் ஏற்பட்டு, காலையே இழக்கும் அபாயம் ஏற்படலாம்.

அதிகமாகப் புகை பிடித்தல் [smoking], நீரிழிவு நோய் [Diabetes], முதிர்ந்த வயது[Advanced age], இனம்[Race], பரம்பரை வரலாறு[Family history], மிகுதியான ரத்த அழுத்தம்[High Blood Pressure] போன்றவை இந்த 'PAD/PVD'க்கு முக்கிய காரணங்கள் எனச் சொல்லலாம்.

இதன் அறிகுறிகள்:


கால்,கால்விரல்களில் ஒரு எரிச்சல், வலி
கால் மற்ற உடற்பாகங்களை விட சில்லிட்டுப் போதல்
முதலில் சிவப்பாகி, பின்னர் கருத்துப் போதல்
நோய்கள் விரைவாகத் தாக்கும் அபாயம்
காயங்கள் சீக்கிரம் ஆறாமல் போதல்

இவற்றில் ஏதேனும் தோன்றும் போது, உடனே உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிப்பது மிகவும் முக்கியம்!

ஒரு சில பரிசோதனைகள் மூலம் [Arterial Dopplers, Pulse Volume Recording, Vascular ultrasound,CT scan, MRI] இதனை விரைவில் கண்டுபிடித்து, சிகிச்சை தொடங்க முடியும்.
முழுதுமாகக் குணப்படுத்த முடியாவிடினும், கட்டுப்படுத்த முடியும், எவ்வளவுக்கெவ்வளவு விரைவாகச் சிகிச்சையை ஆரம்பிக்கிறோம் என்பதைப் பொருத்து.

புகை பிடித்தலை விட்டு, சரியான உணவு முறைகளைக் கையாண்டு, உடல்பயிற்சிகள் மூலம் உடலைச் சீராக வைத்து, இதனைத் தடுக்க முடியும்.


2. நாளப் புடைப்பு [Aneurysm]
ரத்த நாளத்தின் உட்பகுதி ஏதேனும் ஓரிடத்தில் வலுவிழந்து, சிறிதாக புடைத்துக் கொள்ளும். எங்கு வேண்டுமானாலும் இது நிகழுமென்றாலும், அயோர்ட்டாவிலேயே[] இது பெரும்பாலும் நிகழ்கிறது.
இந்தப் புடைப்பில்[bulging] முட்டி மோதி ஓடும் ரத்தம் ஒரு சிறிய சுழலில் மாட்டிக் கொள்வது போல் ஆகி, துகள்கள்[plaques], கட்டிகள்[clots] ரத்தத்தில் உருவாகி அங்கிருந்து கிளம்பி வேறு சில சிறிய நாளத்தில் போய் அடைத்துக் கொள்ளும் போது விபரீத நிகழ்வுகள் ஏற்படலாம்.

சில நேரங்களில் இந்த புடைப்பு அதிகமாகி, ரத்த நாளம் வெடித்து, உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை இருக்கிறது.

'CT ஸ்கேன்', 'MRI', Ultrasound, டாப்ளர்[doppler] மூலம் இதனைக் கண்டுபிடித்து, தேவையான சிகிச்சையை உங்கள் மருத்துவர் கூறுவார்.

3. சிறுநீரக நாள நோய் [Renal Artery Disease]
வாலிப வயதில் தாக்கும் நோய் இது. இதன் விளைவு நம் உடலின் முக்கிய பாகமான சிறுநீரகத்தைப் பாதிக்கும் என்பதால் இது உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

4. 'ரேனால்ட்'ஸ் நோய் [Reynauld's Phenomenon/disease]
கை, கால் விரல்களில் இருக்கும் சிறு நாளங்களைத் 'துடிக்கச்'[spasms] செய்யும் நோய் இது! அதிகக் குளிர்[Extreme cold], ஆர்வம்[Excitement] இவற்றால் இது உண்டாகிறது.
ல்யூபஸ்[Lupus] முடக்கு நோய்[Rheumatoid Arthritis] ஸ்க்ளீரோடெர்மா[Scleroderma] என்னும் தோல் சுருக்க நோய் இவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது நிகழும்.

5. பர்ஜெர்'ஸ் நோய்[Burger's disease]
மேலே சொன்ன நோயே சற்று பருமனான நாளங்களைத் தாக்குகையில் இந்த நோய் ஏற்படுகிறது. குளிரும், புகை பிடித்தலும் இதற்கான முக்கியக் காரணங்களாக அமைகின்றன.
பாதிக்கப்பட்ட உறுப்பையே இழக்கும் அபாயம் இதில் அதிகம்.

6. நரம்புச் சிலந்தி எனப் பொதுவாக[தவறாக!] அழைக்கப்படும் வெரிகோஸ் வெயின்கள் [varicose veins]
ஒரு இடத்தில் மட்டும் புடைப்பு[bulging] இல்லாமல், மொத்த நாளமும் வீங்கும் நிலை இது. பொதுவாக அசுத்த ரத்த நாளங்களையே, அதுவும் கால் நாளங்களையே இது பாதிக்கும்.
ஆண்களை விட பெண்களே இதனால் அதிகம் பாதிக்கப் படுகின்றனர். இதுவும் பரம்பரையாக குடும்பங்களில் வரும்.
ரத்த ஓட்டம் தடைப்பட்டு, கட்டிகள்[clots] உருவாகும் ஆபத்து இதில் அதிகம்.
தகுந்த சிகிச்சை முறைகளால் இதனைக் கட்டுப்படுத்த முடியும்.


இவை தவிர, Venous blood clots, Deep Vein Thrombosis, Pulmonary Embolism, Chronic Venous Insufficiency, clotting disorders,யானைக்கால் எனும் Lymphedema என இன்னும் சில நாள சம்பந்தமான நோய்கள் இருக்கின்றன.
பதிவின் நீளம் கருதி அதிகம் சொல்லாமல் விடுக்கிறேன்.
குறிப்பாக எதைப் பற்றியேனும் தெரிந்து கொள்ள வேண்டுமெனில், பின்னூட்டத்தில் கேட்கவும்.
எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்.


முக்கியமான சில செய்திகள்:
இதன் அறிகுறிகள் தெரிந்தவுடனேயே, மருத்துவரைப் பார்ப்பதை, மறந்து விடாதீர்கள்!
புகை பிடிப்பவர்கள் அதனை விட்டு விடுங்கள் [அ] புகை பிடிப்பதைக் குறையுங்கள்.

உணவுக் கட்டுப்பாட்டின் மூலம், கொழுப்புச் சத்தை அளவோடு வைக்க வேண்டும். [இது பற்றி அடுத்த பதிவில் விரிவாக வரும்!]
தகுந்த உடற்பயிற்சிகள்,[regular walking is a must!] செய்ய வேண்டும்.

இதய நோய்களை நோக்கி இனி பயணிக்கலாம்!






[இது ஒரு சிறிய விளக்கம் மட்டுமே!




This is for informational purposes only!]










26 Comments:

At 8:51 AM, Blogger கோவி.கண்ணன் said...

எஸ்கே ஐயா,
தேவையன தகவல்கள்..பயனுள்ள பதிவு. தொடர்ந்து இதுபோல் எழுதுங்கள்.

 
At 10:31 AM, Blogger VSK said...

இது போலவும் எழுதுவேன் கோவியாரே!

முதல் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

 
At 12:51 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

//கால்,கால்விரல்களில் ஒரு எரிச்சல், வலி
கால் மற்ற உடற்பாகங்களை விட சில்லிட்டுப் போதல்
முதலில் சிவப்பாகி, பின்னர் கருத்துப் போதல்
நோய்கள் விரைவாகத் தாக்கும் அபாயம்
காயங்கள் சீக்கிரம் ஆறாமல் போதல்//

நீங்கள் சொன்ன பல விதமான நோய்களுக்கெல்லாமே இவைதான் அறிகுறிக்களா?

படிக்கும் பொழுது இவை நீரிழிவுக்கான அறிகுறிகள் போலவேத் தெரிகிறதே!

 
At 5:08 PM, Blogger VSK said...

நீரிழிவுக்கான அறிகுறிள் இவையல்ல, கொத்ஸ்!

இதில் சிலவே!

நான் சொல்லியிருக்கும் எல்லாமே ரத்த நாளங்களில் ஏற்படும் குறைபாடுகளால் உண்டாகுவதே!

இது நீரிழிவு நோய்க்காரர்களை அதிகம் தாக்கும் என்பதால் உங்களுக்கு ஏற்பட்ட குழப்பம் இது!

 
At 5:31 PM, Blogger வெற்றி said...

SK,
இது சும்மா உள்ளேன் ஐயா [பின்னூட்டக் கயமை] பின்னூட்டம். இன்னும் பதிவைப் படிக்கவில்லை. பதிவைப் படித்துவிட்டு பின்னர் வருகிறேன்.

 
At 5:48 PM, Blogger வடுவூர் குமார் said...

படிக்க படிக்க வியப்பாகவும்,பயமாகவும் இருக்கு.
உடம்புக்குள் இன்னும் என்னென்ன காத்துக்கொண்டிருக்கோ!!

 
At 7:47 PM, Blogger VSK said...

//உடம்புக்குள் இன்னும் என்னென்ன காத்துக்கொண்டிருக்கோ!!//

இதயத்துக்குள் எனக் கேளுங்கள் குமார்!

இன்னும் வரும்!

 
At 6:22 AM, Blogger கப்பி | Kappi said...

பயனுள்ள தகவல்கள் எஸ்கே ஐயா!!

படிக்காமல் விட்ட நான்கு பதிவுகளை இன்று தான் ஒரே மூச்சில் படித்தேன். மூளையில் புது ரத்தம் பாய்கிறது :))

 
At 8:02 AM, Blogger VSK said...

சீக்கிரம் நல்ல பதிலுடன் வரவும்!
இல்லை... ஆசானிடம் உதவி கோரவும், thiru.வெற்றி !

:))

 
At 8:05 AM, Blogger VSK said...

ரொம்ப நாளைக்குப் பிறகு இந்தப் பக்கம் வந்திருக்கீங்க, 'க.ப'!

ஊரெல்லாம் எப்படி இருக்கு!
:))

 
At 1:44 PM, Blogger சேதுக்கரசி said...

கருத்தடை மாத்திரை மற்றும் ஹார்மோன் கருத்தடை முறைகள் உபயோகிக்கும் பெண்களுக்கு ரத்த நாளங்களில் கட்டி (thrombosis?) உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பார்கள் (உள்ளேன் ஐயா :-))

 
At 7:59 PM, Blogger VSK said...

நேரடியாகக் கிடையாது சேதுக்கரசி!

கருத்தடை மாத்திரைகள் ஈஸ்ட்ரஜென் மற்றும் ப்ரொஜெஸ்ட்ரொஜென்[ப்ரொஜெஸ்டின்] இரண்டும் கலந்தது!

இதில் முன்னது ரத்தக் கட்டிகளைத் தடுக்கும். ப்ரொஜெஸ்டின் அதை வளர்க்கும்.

மாதவிலக்கு முடிவடைந்த வயதினர் சாப்பிடும் ஈஸ்ட்ரொஜென் மாத்திரைகளால் இது வருவதில்லை என்பதையும் இங்கு பதிகிறேன்.

 
At 6:51 AM, Blogger மங்கை said...

ஐயா

விரிவான, தெளிவான பதிவுக்கு நன்றி

 
At 10:27 AM, Blogger குமரன் (Kumaran) said...

தொடர்ந்து படித்து வருகிறேன் எஸ்.கே. நிறைய தெரிந்து கொள்கிறேன். மிக்க நன்றி.

 
At 11:42 AM, Blogger சிவபாலன் said...

SK அய்யா

மிக நல்ல பதிவு!!

தொடருங்கள்!

 
At 12:23 PM, Blogger VSK said...

நன்றி, மங்கை & குமரன்.

கல்யாண் மறைவினால் அடுத்த பதிவு வர ஓரிருநாள் தாமதமானது.

இன்றோ அல்லது நாளையோ வரும்.

இதைச் சொல்ல வாய்ய்பளித்த இந்தப் பின்னூட்டத்திற்கு மீண்டும் நன்றி!!

:))

 
At 12:38 PM, Blogger கால்கரி சிவா said...

எஸ் கே சார், மிக நல்ல பதிவு.

 
At 1:20 PM, Blogger ஷைலஜா said...

அன்புள்ள எஸ்கே அவர்களே
ஆர்வமுடன் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உங்கள் பதிவிற்குப் பின்னூட்டம்..

நடை தளர்ந்தது நாளமல்லவா என்ற உங்க பதிவின் தலைப்பு 'அன்புள்ளமான்விழியே'பாட்டு நினைவிற்குவரசசெய்யவும் சும்மா நானும் அப்படி ஆரம்பித்தேன்:)
சாதாரணமா டாக்டருக்கெல்லாம் கையெழுத்தே கிறுக்கலாய் இருக்கும்.எஸ்கேவிற்கோ எழுதும் எழுத்தெல்லாமே (கா)ஓவியமா இருக்கு.. பயனுள்ள தகவல்களை இப்படி அள்ளி அள்ளித்தரும்
தங்களை எத்தனை பாராட்டினாலும்தகும்.
ஷைலஜா

 
At 5:28 AM, Blogger VSK said...

மிக்க நன்றி, திரு.சிபா & திரு. கா.சி!

அடிக்கடி வாங்க!

பழகினவங்க அடிக்கடி வந்து சொல்வது மனதுக்கு இதமளிக்கும்!

:))

 
At 5:36 AM, Blogger VSK said...

"நலம் நலம்தானா குறள் மகளே!
சுகம் சுகம்தானா கவிக்குயிலே
குரலினிமையை நேற்று கேட்டேனே
இம்மடலதனையும் அப்படிப் படித்தேனே
வந்து சொன்னது மகிழ்வு அல்லவா
மீண்டும் வருவதும் இன்பமல்லவா"

ஒண்ணுமில்லீங்க! நீங்க அந்த பாடல் வரிகளில் ஆரம்பித்ததை நான் தொடர முயற்சித்தேன், ஷைலஜா!
பாடிப் பாருங்க! ட்யூன் சரியா வருதான்னு சொல்லுங்க! :))

'பாட்டுக்குப் பாட்டு' பதிவுல உங்க குரலைக் கேட்டேன். அதே குரலில் நீங்க இப்ப எழுதினதையும் அப்படியே படித்துப் பார்த்தேன்.
நல்லா பாடறீங்க!

அன்பான பாராட்டுக்கு நன்றி.

 
At 2:21 PM, Blogger ஷைலஜா said...

"நலம் நலம்தானே மருத்துவரே
சுகம்சுகம்தானே சங்கர்குமாரரே
குரல் இனிமையும் இயற்கையல்லவா
குறள்கதைவடித்ததும் பிறர் ஊக்கத்தில் அல்லவா?:)''

இப்படியே போனால் நல்ல மருத்துவ தகவல்கள் தரும் உங்களின் இந்த இழை, இன்னொரு பாட்டுக்குப்பாட்டு இழையாகிவிடபோகிறது:)
ட்யூன் போட்டு பாடிப்பார்த்தேன் உங்க பாட்டு பிரம்மாதம்...கைவசம் எத்தனை தொழில் ?:)

just kidding!
ஷைலஜா

 
At 3:38 PM, Blogger VSK said...

//குரல் இனிமையும் இயற்கையல்லவா//

பாட்டு பாடுவது போலவே எழுத்தும் நன்கு வருகிறதே.

சரி, நீங்க சொல்றதுனால இத்தோட இதை விட்டுடறேன்!

:)

 
At 8:49 AM, Blogger SKM said...

//கால்,கால்விரல்களில் ஒரு எரிச்சல், வலி
கால் மற்ற உடற்பாகங்களை விட சில்லிட்டுப் போதல்
முதலில் சிவப்பாகி, பின்னர் கருத்துப் போதல்//
along with these symptoms there is a slight swelling occurs often in my foot.Even if I bump very lightly on anything that place goes blue later.But here doctors say it is all normal with the age.Have to adjust and live.They didn't prescribe any medicine.If pain becomes more I manage with Brufen.I get muscle catch or simple sprains very often.I do yoga.I walk.Nothing helps so far.do I have to take it easy?Is it Normal as the age advances? I always love to read all your posts.Came to read this to know about it well.You are too good in explaing things.Iam sorry for not writing in tamil.My e-kalappai is also on strike sometimes just like me.Thank you doc.

 
At 11:09 AM, Blogger VSK said...

நீங்கள் சொல்லுவதைப் பார்க்கையில் உங்களுக்கு வந்திருப்பது Atherosclerotic vascular disease என நினைக்கிறேன்.

வயதாகும் போது நாளங்கள் வலு குன்றி, சற்று இறுகிப் போய், தனது சுருங்கி விரியும் தன்மையைக்[elasticity] கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பிக்கிறது.

அப்போது அதனால் முழு அளவிலான பளுவைத் தாங்க முடியாமல் போகிறது.

இதனால் ஏற்படும் அறிகுறிகளே நீங்கள் குறிப்பிட்டிருக்கும், நீல நிறமாகிப் போதல்.

சிறிய குழாய்களில் இருந்து தாற்காலிகமாக ரத்தம் கசிவதால், சுற்றியிருக்கும் பகுதி நீல நிறமகிப் போகும்.

சிறிது நேரத்தில், அல்லது நாட்களில் திரும்பவும் பழைய நிறம் வந்து விடும்.

பதிவில் சொல்லிய புகை பிடித்தல் போன்றவை ஏதேனும் இருப்பின் அதைக் கைவிடவும்!

நிறைய நடப்பதால் பிரயோஜனம் அதிகம் இருப்பதாகத் தெரியவில்லை.

சிறிய தூரம் மட்டுமே வாக்கிங் போவது நலம்.

Compression stockings போட்டுப் பார்க்கலாம் கால்களுக்கு.

இரவில் ஒத்தடம் கொடுங்கள்.

கொழுப்புச்சத்தைக் குறைக்கவும்.

இரவில் படுக்கையில் கால்களுக்கு ஒரு அதிகத் தலையணை[!!] வைத்துக் கொள்ளவும்.

உட்கார்ந்திருக்கும் நேரங்களில் காலைத் தொங்கப் போடாமல், நீட்டியபடி உட்காரவும்.

விரைவில் நலமாக வேண்டுகிறேன்.

 
At 3:51 PM, Blogger SKM said...

Thanks a lot for the suggestions.
I will sure take enough precautions.Though I don't smoke or eat meat,and also not at all over weight,probably have to control the intake of sweets. Thanks again.

 
At 9:27 PM, Blogger VSK said...

நன்றி, திரு. எஸ். கே. எம்.

 

Post a Comment

<< Home