"கசடற"

அறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன். முழுக்க முழுக்க இவை என் கருத்துகள் மட்டுமே! முருகனருள் முன்னிற்கும்!

Thursday, September 14, 2006

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" -- 8

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" -- 8


இந்த 12- 14 வயசு பிள்ளைங்களுக்கு என்னெல்லாம் தெரியும், தெரிஞ்சுக்க ஆசைன்னு இதுவரை பார்த்தோம்.

மேலும் சில அதிகத் தகவல்களை நம்ம மங்கையம்மா பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
அதையும் பார்க்கவும்.

பாலியலைப் பத்தி தனக்கு எல்லாம் தெரிஞ்ச மாதிரியும், கேள்வி கேக்கறது கேவலம்னும் ஒரு நினைப்பு இருக்கும் இவங்க மனசுல.

அதனால கேக்கவே மாட்டாங்களான்னு கேக்காதீங்க!!

கேட்பாங்க!

உங்க கிட்ட இல்லை!

அவங்க நண்பர்கள்கிட்ட!

இப்ப நாமளே ஊக்குவிக்கறோமே, அந்த இணையதளத்துகிட்ட!

பெரும்பாலும் தவறான, அல்லது வயதுக்கு மீறிய தகவல்களே இதனால் கிடைக்கும்.

இதுல பெற்றோரின் பங்கு என்ன?

எப்படி அவர்களுக்கு இதைப் புரியவைப்பது?

இது ஒரு பெரிய சாலேஞ்சுன்னுதான்[Challenge]] சொல்லணும்.

போன பதிவில் என்னிடம் வந்த அந்த தாய்க்கு நான் சொன்ன பதில் இதுதான்.[அந்தப் பையனை வெளியில் உட்காரச் சொல்லிவிட்டு!],

[இதைப் பற்றி யாராவது கேட்பார்கள் என எதிர்பார்த்தேன்!:(]

"நீங்க சொல்றீங்கன்னு நான் இப்ப அவன்கிட்ட எதுவும் கேட்க மாட்டேன். இங்கே அவனைக் கூப்பிட்டுக்கொண்டு நீங்க வந்ததே தப்பு! எவ்வளவு பெரிய தாழ்வு மனப்பன்மையை அவனிடம் உண்டுபண்ணி இருக்கீங்கன்னு ஒங்களுக்கு தெரியலை! இப்ப அவனைக் கூட்டிக்கிட்டு வீட்டுக்கு போங்க! நாளைக்கு நீங்க மட்டும் அவன் ஸ்கூலுக்கு போனதுக்கு அப்புறம் வாங்க! நான் உங்ககிட்ட சிலது சொல்லணும்."

மறுநாள் அந்த தாய் வந்தார்.

"அடுத்தவங்க பார்வையில இது தப்புதான். கண்டிக்கப்பட வேண்டியதுதான். ஆனா, கொஞ்சம் அவன் நிலைமையில் இருந்து இதைக் கொஞ்சம் யோசியுங்கள். அவன்கிட்ட சில பருவ மாற்றங்கள் நடந்துக்கிட்டு இருக்கு. அதை அவனால புரிஞ்சுக்கவும் முடியல. இல்லேன்னு தள்ளவும் முடியலை. அவன் உடம்புல சில ஹார்மோன்கள் இப்ப சுரக்க ஆரம்பிக்குது. அதுதான் இவனை அப்படியெல்லாம் செய்யத் தூண்டுது. இதோ, இந்த பாம்ஃப்லெட்டை[pamphlet] எடுத்துகிட்டு போங்க. மொதல்ல, நீங்களும், மோகனும்[அவர் கணவர்] படியுங்க. அப்பறமா, ராஜுவை கூப்பிட்டு, அவ்ன்கிட்ட இதப்பத்தி பேசுங்க.

ஆம்பளைக்கு இந்த இந்த உறுப்புகள், பொம்பளைங்களுக்கு இதுன்னு தெளிவா சொல்லுங்க. இதுவரைக்கும் நீங்க சொல்லாததே, அவனோட இதைப் பத்தி பேசாததுதான் இதுக்கெல்லாம் காரணம்.

தன்மையா வளர்த்தேன்னு சொன்னா மட்டும் போறாது. சொல்ல வேண்டியதை சொல்லவும் வேணும். உங்களை விட்டா வேற யாரு இருக்கா அவனுக்கு? வேற யார்கிட்ட போயி அவன் இதை கேக்க முடியும்? ஒருவேளை அப்படிக் கேட்டிருந்தான்னா, அது அவன் ஃப்ரெண்ட்ஸுங்க கிட்டதான் இருக்க முடியும். அவங்களுக்கும் இது தெரியாது. "போடா! போய் பக்கத்து வீட்டு மாமி குளிக்கும்போது பாரு; அப்ப தெரியும் ஒனக்கு!"ன்னு சொல்லியிருப்பாங்க! அந்த சின்னப்பசங்க அப்படி சொன்னதிலியும் தப்பு இல்லை! அதான், அடுத்த வீட்டு மாமி குளிக்கும் போது பார்த்திருக்கான்"

என்று சொன்னவுடன்,

அந்த அம்மா, நிஜமாவே கண்கலங்கி, "இதெல்லாம் சொல்லணும்னு எங்களுக்கு தெரியவே இல்லை டாக்டர்!" என்று கண் கலங்கினார்.

ஸோ,[So] இப்ப நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது என்ன?

சிறில் துடிக்கிறது எனக்குப் புரியுது!
வாய்யா! விஷயத்துக்கு வாய்யா! எனத் திட்டுவது கேட்கிறது!
எனவே, அதிக பீடிகை இல்லாமல், செய்திக்கு வரலாம்!

பருவகாலத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை, நன்கு அறிந்த நீங்கள் சொல்லாமல் வேறு யார் சொல்வது?

"இன்னும் கொஞ்ச நாள்ல நீ பெரிய மனுஷி ஆகப் போறே! அப்படீன்னா, இதுவரைக்கும் சின்னப் புள்ளையா இருந்த நீ, சில மாற்றங்களை பார்ப்பே, உன் உடம்பில! உன் மார்பு என்னுது மாதிரி பெருசாகப் போவுது. தீட்டுன்னு நான் ஒரு 3 நாளு சொல்லுவேனே, அது உனக்கும் வரப் போகுது. இதுவரைக்கும் முளைக்காத இடத்துல எல்லாம் முடி வளரும்.
திடீர்னு ஒரு நாளைக்கு ஒனக்கு கீழேர்ந்து ரத்தப்போக்கு வரலாம். அப்ப நீ உடனே செய்ய வேண்டியது, என்கிட்டயோ, இல்லாட்டி, டீச்சர்கிட்டயோ போய், சொல்லணும். இது ரொம்ப முக்கியம்.

இதே ஒரு ஆண் பையனிடம்,.....

"இந்த வயசுல உனக்கு விதவிதமா ஆசை வரும். தப்பில்லை. அது சகஜம்தான். எல்லாருக்கும் இந்த வயசுல வர்றதுதான். ஆனா, நீ அதுக்காக, முறை தவறி நடந்துக்கக் கூடாது. உன் ஆசை உனக்கு எவ்வளவு முக்கியமோ, அது மாதிரி அடுத்தவங்களொட ப்ரைவசியும்[Privacy] அவங்களுக்கு முக்கியம்! உனக்கு எதுனாச்சும் சந்தேகம்னா எங்களை நீ தாராளமாக் கேக்கலாம். தப்பாவே நினைச்சுக்க மாட்டோம்.
இதுக்காக, நீ கண்ட கண்ட புஸ்தகமோ, இல்லை, வேற எதையோ தேட வேண்டாம். ராத்திரியில, உனக்கு உன்னோட விந்து வெளியாகும். அல்லது நீயே வெளியாக்கணும்னு உனக்கு ஒரு பரபரப்பு வரலாம். அதுல ஒண்ணும் தப்பே இல்லை. இது இந்த வயசுல எல்லாருக்கும் நடக்கறதுதான். அதிகமா பண்ணாதே. கண்ட்ரோல்[Control] பண்ணக் கத்துக்கோ!"

எதுவானாலும் அம்மா அப்பாகிட்ட பேசலாம்னு ஒரு தைரியத்தை பசங்க மனசுல வளர்க்கறது ரொம்ப முக்கியம் இந்த வயசுல.

இப்ப விட்டீங்கன்னா, அப்புறம், நீங்க அவங்களை எப்பவுமே பிடிக்க முடியாது!

'சேகர் மாதிரி நான் வளரலியே?',' லதா ஏன் இன்னும் என்னை மாதிரி ஆகல?, அவளுக்கும் என் வயசுதானே?', இது போன்ற கேள்விகள் எழும்.

ஒவ்வொருவர் வளர்ச்சியும் தனித்தனியானது, ஒருவர் போல் இன்னொருவர் வளர்ச்சி இருக்காது என்பதும் புரியவைக்க வேண்டும் நீங்கள்.

"இன்னும் கொஞ்ச நாள்ல, நீ பெரிய மனுஷி ஆகப் போறே! உன்னாலேயும் ஒரு குழந்தை பெத்துக்க முடியும் அப்போ. ஆனா, உனக்கு இன்னும் அதுக்கான முழு வளர்ச்சியோ, பக்குவமோ, பொருளாதார வசதியோ, வரவில்லை, இப்ப வராது, இது ஒரு வழக்கமான மாற்றம்தான், இதைப் பெருசு படுத்த வேண்டாம் என்பதை அவர்கள் மனதில் ஆழமாகப் பதிய வைப்பது உங்கள் தலையாய பொறுப்பு!"


உணர்வு வேறு, பாலியல் உணர்வு வேறு, இரண்டும் தனித்தனியானது என்பதுதான் இவர்களுக்கு நீங்கள் இப்போது சொல்லி, புரிய வைக்க வேண்டிய ஒன்று!

[விளக்கம் வேண்டுமெனில், பின்னூட்டத்தில் கேட்கவும். விவரமாகச் சொல்கிறேன்.]

கர்ப்பத்தடை சாதனங்களைப் பற்றி அவர்களுக்கு தெரியப் படுத்த வேண்டிய நேரமும் இதுவே!

.
மொத்தத்தில், இந்த நேரத்தில்தான் நாம் அவர்களுக்கு "ஒரு நண்பன்", நம்மிடம் வெளிப்படையாகப் பேசலாம் என்ற ஒரு உணர்வை அவர்களிடம் நாம் வளர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

திருமதி. மங்கை
சொன்ன இந்தக் கருத்து பதிவுக்கு வலு சேர்ப்பதால், அவர்கள் அனுமதியுடன் இதனையும் சேர்க்கிறேன்! நன்றி.

"உங்க அனுமதியுடன் இரண்டொரு வார்த்தை சேர்துக்கலாமா?.

.உடம்புல ஏற்படுகிற மாற்றங்கள போல உடம்பின் உள்ளிலும் ஏற்பட்ற மாற்றங்கள் பத்தி பெறோர்கள் தெரிஞ்சிட்டாங்கன்னா, குழந்தைகளின் இந்த வயசில அவங்க நினைவில கொள்ளவேண்டிய முக்கியமான ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட சில உணவு வகைகளை குடுப்பது மட்டும் இல்லாம, சில மாற்ற வேண்டிய பழக்க வழக்கங்களையும் மாற்ற அவங்க முற்படுவாங்க.
பிறப்பு உறுப்புகளின் வளர்ச்சிக்கு சத்தான உணவுகளை உட்கொள்ளுவது, பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பற்றிய விளிப்புணர்வையும் சேர்ந்து குடுத்தா, நம்ம நோக்கம் முழுசா முடிவடையும்னு நினைக்கிறேன்..
இந்த விஷயங்கள் நாங்க நேரடியா குழந்தைகளிடம் சொன்னாலும், பெற்றோர்களுக்கும் இந்த விழிப்புணர்வு இருந்தா,குழந்தைகளின் ஆரோக்கியம் எல்லாவிதத்திலேயும் பாதுகாக்கப்படும்."

-----------------------------------------------------

ரொம்ப பயமுறுத்திட்டேனா!

இதுக்கே இப்படீன்னா, அடுத்த பதிவை என்னன்னு சொல்லுவீங்க!

ஆம்! அடுத்த பதிவு..... ஒரு பயமூட்டும் பதிவு!!!

28 Comments:

At 7:39 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

ஐயா, சரியாத்தான் சொல்ல ஆரம்பிச்சிருக்கீங்க. இந்த வயசுக்கு இன்னும் சில பகுதிகள் வருமுன்னு நினைக்கிறேன். அதுக்கு முன்னாடி, இந்த வயசுல வர கேள்விகளுக்குத் தெளிவா விடை சொல்லற மாதிரி இணையத்தில் ஏதேனும் பக்கங்கள் இருக்கிறதா? "இந்தா பாரு தம்பி, இங்கன போயி ஒரு ரவுண்டு படிச்சிட்டு வா. அப்புறமும் புரியலைன்னா என்னை வந்து கேளு." அப்படின்னு சொன்ன நம்ம வேலையும் கொஞ்சம் சுலபமா ஆகும், அவனும் அதிகம் கூச்சப்படற சுபாவமா இருந்தா இது சரியா இருக்கும்.

உங்க சார்புல இந்த மாதிரி FAQs இருக்கிற வலைத்தளங்கள் இரண்டு மூணு சொல்லுங்க பார்க்கலாம்.

 
At 8:10 PM, Blogger VSK said...

நல்ல கேள்வி, கொத்தனாரே!

இப்பவே சொல்லாமல், பதிவின் முடிவில் இந்த இணைய தளங்கள் பற்றிய சுட்டி கொடுக்கலாம் என இருக்கிறேன்.

அவை பெரும்பாலும் மேற்கத்திய நாட்டு குழந்தைகள் சம்பந்தப் பட்டவையய் இருக்கின்றன.

நான் கொஞ்சம் நம் ஊருக்குத் தகுந்த மாதிரி சொல்ல நினைக்கிறேன்.
இப்போது கொடுத்தால் குழப்பமாகிவிடும் என அஞ்சுகிறேன்.

சரிதானே!

முதல் பின்னூட்டமே பின்னூட்டப்புயலிடமிருந்து!!

மிக்க நன்றி!

 
At 8:30 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

//
நான் கொஞ்சம் நம் ஊருக்குத் தகுந்த மாதிரி சொல்ல நினைக்கிறேன்.//

சரி, நீங்களே நம்ம பக்கத்து குழந்தைகளுக்கு சரியா வரா மாதிரி ஒரு பதிவு போடுங்க. எல்லாரும் உங்க கிட்டயே அனுப்பிடறோம். தமிழில் போட்டாலும் கூடவே ஆங்கில மொழிபெயர்ப்பு ஒண்ணும் குடுங்க.

அதே மாதிரி அமெரிக்க ஆசாமிங்களும் வந்து படிக்கறதுனால இந்த பசங்களுக்குத் தோதா அந்த சுட்டிகளையும் குடுங்க.

 
At 8:51 PM, Blogger VSK said...

அமெரிக்க வாழ் தமிழ்ப் பிள்ளைகளைப் பற்றி போடுவதென்றால், ஒரு தனித் தொடரே ஆரம்பிக்க வேண்டும், கொத்தனாரே!

இருவேறு கலாச்சாரங்களுக்கு இடையில் அகப்பட்டு இவர்கள் திண்டாடுவது,குழம்புவது, மிகவும் சோகமானது.

அது பற்றி கடைசியில் சொல்லலாம் என இருக்கிறேன்.

என்ன இது, கொஞ்சம் கொஞ்சமா, நம்ம சரக்கையெல்லாம் இப்பவே உடைக்கச் சொல்றீங்களே!

 
At 9:04 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

//சரக்கையெல்லாம் இப்பவே உடைக்கச் சொல்றீங்களே!//

கட்டற என்னைப் பார்த்து உடைக்கறேன்னு சொல்லறீங்களே. சரி விடுங்க. சில சமயங்களில் உடைச்சிட்டுத்தானே புதுசா கட்டறோம்.

 
At 9:05 PM, Blogger dondu(#11168674346665545885) said...

"ராத்திரியில, உனக்கு உன்னோட விந்து வெளியாகும். அல்லது நீயே வெளியாக்கணும்னு உனக்கு ஒரு பரபரப்பு வரலாம். அதுல ஒண்ணும் தப்பே இல்லை. இது இந்த வயசுல எல்லாருக்கும் நடக்கறதுதான். அதிகமா பண்ணாதே. கண்ட்ரோல்[Control] பண்ணக் கத்துக்கோ!"

From the book "Everything you wanted to know about sex, but were afraid to ask": (Quoting from memory)

"Masturbation is quite normal. It is nothing to be ashamed of. No loss of energy is caused thereby. It is quite a harmless habit. But...

Only your ears will fall off!"

Then there is a disclaimer footnote from the publisher: "The author is joking of course!"

Regards,
Dondu N.Raghavan

 
At 9:11 PM, Blogger VSK said...

இது மாதிரி தான் ஆதாரமற்ற பயங்களை பரப்புகிறார்கள்.

பெற்றோர்கள்தான் இதற்கு நல்ல மருந்தாக இருக்க முடியும்.

வருகைக்கு நன்றி, திரு. டோண்டு.

Don't do கூட ஒரு நல்ல மாற்றாக் இருக்கும்!

ஆனால் கொஞ்சம் கஷ்டம், இந்த வயதில்!

 
At 9:54 PM, Blogger dondu(#11168674346665545885) said...

"Don't do கூட ஒரு நல்ல மாற்றாக் இருக்கும்! ஆனால் கொஞ்சம் கஷ்டம், இந்த வயதில்!"
அதானே, இவ்வளவு வருஷ (கை)பழக்கத்தையெல்லாம் விட்டுட முடியுமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At 10:38 PM, Blogger மங்கை said...

SK

ரொம்ப நல்லா வந்துட்டு இருக்கு..

உங்க அனுமதியுடன் இரண்டொரு வார்த்தை சேர்துக்கலாமா?..

உடம்புல ஏற்படுகிற மாற்றங்கள போல உடம்பின் உள்ளிலும் ஏற்பட்ற மாற்றங்கள் பத்தி பெறோர்கள் தெரிஞ்சிட்டாங்கன்னா, குழந்தைகளின் இந்த வயசில அவங்க நினைவில கொள்ளவேண்டிய முக்கியமான ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட சில உணவு வகைகளை குடுப்பது மட்டும் இல்லாம, சில மாற்ற வேண்டிய பழக்க வழக்கங்களையும் மாற்ற அவங்க முற்படுவாங்க. பிறப்பு உறுப்புகளின் வளர்ச்சிக்கு சத்தான உணவுகளை உட்கொள்ளுவது, பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பற்றிய விளிப்புணர்வையும் சேர்ந்து குடுத்தா, நம்ம நோக்கம் முழுசா முடிவடையும்னு நினைக்கிறேன்.. இந்த விஷயங்கள் நாங்க நேரடியா குழந்தைகளிடம் சொன்னாலும், பெற்றோர்களுக்கும் இந்த விளிப்புணர்வு இருந்தா,குழந்தைகளின் ஆரோக்கியம் எல்லாவிதத்திலேயும் பாதுகாக்கப்படும்.

ரொம்ப நல்லா வந்துட்டு இருக்கு.. இத ஒரு தனி website ஆரம்பிச்சு போட்டா, சில querries வரலாம்.. தமிழ்மணம் ல இருக்கிற பெற்றோர்கள் மட்டும் இல்லாம, மற்றவர்களும் பார்ப்பாங்க..

முயற்சி செய்து பாருங்களேன் SK..

நன்றி

மங்கை

 
At 4:55 AM, Blogger ஆவி அம்மணி said...

நல்ல தொடர். வாழ்த்துக்கள் வாத்தியாரே!

நேற்றைய அனானி, இன்றைய ஆவி, நாளை...!?

 
At 6:26 AM, Blogger VSK said...

Somehow this post got published twice and there are comments in both!
I am deleting one and transfering the comments to this.
Hope this works!
At 4:33 AM, வைசா said...
மிக அருமை.

இதில் இன்னுமொன்று முக்கியமானது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் நண்பர்கள் போல பழக வேண்டும். எந்த பிரச்சனை என்றாலும் தங்களைப் பிள்ளைகள் அணுகக் கூடியதாக இருக்க வேண்டும். இதன் மூலம் நண்பர்களிடம் இமாதிரியான விடயங்களுக்கு பிள்ளைகள் போவதைக் குறைக்கலாம். அல்லவா?

வைசா


At 5:06 AM, அமானுஷ்ய ஆவி said...
// இதன் மூலம் நண்பர்களிடம் இமாதிரியான விடயங்களுக்கு பிள்ளைகள் போவதைக் குறைக்கலாம்.//

உண்மை!
நானும் இதையே சொல்கிறேன்!


At 5:36 AM, Sivabalan said...
SK அய்யா,

நல்ல அழகாக சொல்லியிருக்கீர்கள்..

 
At 6:40 AM, Blogger VSK said...

பதிந்த பின் தான் இணையான ஆங்கிலச் சொற்களைக் கொடுக்க மறந்தது நினைவுக்கு வந்தது, திரு. மௌல்ஸ்!

இந்த வயதில் பல்வேறு உணர்வுகள் தோன்ற ஆரம்பிக்கும்.

அவற்றையெல்லாம் அலசுவது இப்பதிவின் நோக்கம் அல்ல என்பதால், உணர்வு [emotions], பாலியல் உணர்வு [Sexual emotions] என்று பிரித்தேன்.

எதிர்த்துப் பேசுதல், நடவடிக்கைகளில் மாற்றம் தெரிகிற மாதிரி காட்டிக்கொள்ளல், பொய் சொல்ல ஆரம்பித்தல்[தவறு என்று தெரிந்தே], திருட்டு தம், வகுப்பை கட்[cut] அடித்து சினிமா செல்லுதல் போன்றவை வழக்கமாக நிகழும். இவை உணர்வுகள்.[Emotions]

பாலியல் சம்பந்தப்பட்ட, பதிவில் கூறியிருக்கும் நிகழ்வுகள் பாலியல் உணர்வுகள்.[Sexual Emotions]
சுய இன்பம், பாலியல் பற்றி அறியும் ஆர்வம், அடுத்த பாலரை தனிக்கண்ணோட்டத்தில் பார்க்கத் துவங்குதல், ரகசியமாக சில புத்தகங்களைப் படித்தல் போன்ற சில.

சரியாக சொல்லாததற்கு வருந்துகிறேன்.

 
At 6:44 AM, Blogger VSK said...

மிகவும் பயனுள்ள ஒன்றைச் சொல்லியிருக்கிறீர்கள், மங்கை.
என் அனுமதி எதற்கு.?
உங்கள் அனுமதியுடன் இதையும் பதிவிலேயே சேர்க்க முயற்சிக்கிறேன்.

ஒவ்வொரு பதிவிலும் இது போல வந்து விவரமான கருத்துப் பரிமாற்றம் செய்ய வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் சொன்ன இன்னொன்றையும் கவினிக்கிறேன் :!?
:)
மிக்க நன்றி.

 
At 6:47 AM, Blogger VSK said...

வாங்க "அமானுஷ்ய ஆவி"!

வாழ்த்துக்கு நன்றி.

//நேற்றைய அனானி, இன்றைய ஆவி, நாளை...!? //

மனிதன்.... தேவதூதன்[உருவமற்றவன்]??
:)

 
At 6:49 AM, Blogger VSK said...

சரியாகச் சொன்னீர்கள், வைசா!

அதைத்தான் முதலில் ஒரு நிகழ்வின் மூலம் விளக்க முயன்றிருக்கிறேன்.

ஒவ்வொரு பதிவிலும் வேறு வலியுறுத்தியும் வருகிறேன்.

நோட்ஸ் இல்லாட்டி என்ன?

உங்கள் அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாமே?

 
At 6:52 AM, Blogger VSK said...

மறுபடியும் அ.ஆவி!

அதைக் குறைக்க வேண்டும்; முடிந்த அளவில், பிள்ளைகள் தங்களிடம் எதையும் சொல்ல வரலாம் என்ற உணர்வை சிறு வயது முதலே பிள்ளைகளுக்கு தெரிய வைப்பது மிக அவசியம், அதுவும் இந்த வயதில் அது மிக, மிக அவசியம்.

நன்றி!

 
At 6:53 AM, Blogger VSK said...

அழகை ஆராதித்ததற்கு றிநன், சிபா!

:))

 
At 7:02 AM, Blogger VSK said...

//எனது பின்னூட்டத்திற்கு பதில் பின்னூட்டம் இட்டாக வேண்டும்! //

ஆவி ரொம்பவே பயமுறுத்துது.
போட்டாச்சுங்க, எல்லாத்துக்கும்!
இந்த ரெண்டு பதிவு வந்ததால குழப்பம்னு நினைக்கிறேன்.[ஒன்றைக் கழித்துவிட்டேன்!]
தயவு செய்து, பின்னுட்டங்கள் அதிகம் இருக்கும் பதிவிலேயே உங்கள் பின்னூட்டங்களையும் இடுமாரு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி!

 
At 7:06 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

SK இந்தத் தொடருக்கு சிறப்பு இணைப்பு தேனில் கொடுத்துள்ளேன்.

இந்தப் பதிவை இன்னும் படிக்கவில்லை.

I have been trying to give you a special place in my blog and I could do it only now.

 
At 7:12 AM, Blogger VSK said...

//சிறில் அலெக்ஸ் has left a new comment on your post ""பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" -- 8":

SK இந்தத் தொடருக்கு சிறப்பு இணைப்பு தேனில் கொடுத்துள்ளேன்.

இந்தப் பதிவை இன்னும் படிக்கவில்லை.

I have been trying to give you a special place in my blog and I could do it only now. //
மிக்க நன்றி, சிறில்.

ஸஸ்பென்ஸ் தாங்க முடியலைன்னு போன பதிவுல சொல்லிட்டு, இன்னும் படிக்கலைன்னா எப்படி.!!

இந்த வயதுப் பிள்ளை வேறு இருப்பதாகச் சொன்னதக நினைவு.!!

 
At 7:38 AM, Blogger VSK said...

இந்தத் தொடரைப் பொருத்த மட்டில், பதிவுக்கு சம்பந்தமான பின்னூட்டங்களே அனுமதிக்கப் படும் என, முதலிலேயே தெரிவித்திருந்தேன்.

உங்களது கடைசிப் பின்னுட்டத்தை அனுமதிக்க முடியாமைக்கு வருந்துகிறேன், "அ.ஆவி"!

 
At 9:00 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

SK,
என்னங்க இப்படி சொல்லிட் டீங்க எனக்கு அவ்வளவு வயசெல்லாம் ஆகலீங்க...

என் பையனுக்கு 2 வயசுதான் ஆச்சு.
(இரண்டு)

:(

 
At 9:03 AM, Blogger VSK said...

தவறுக்கு மன்னிக்கவும்!

வேறு எவர் அப்படிச் சொன்னார் எனப் பார்த்து வருகிறேன்!

 
At 9:18 AM, Blogger இலவசக்கொத்தனார் said...

//வேறு எவர் அப்படிச் சொன்னார் எனப் பார்த்து வருகிறேன்!//

அது நம்ம கால்கரியாருங்கோ.

 
At 11:54 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

சின்னக் குழந்தைங்க தங்கள் குறிகளைத் தடவிக் (சுகம் கண்டு?) கொண்டிருப்பதை தடுக்கவெண்டுமா? அல்லது அனுமதிக்கலாமா?

I am talking about my son now. he's 2 years and a few months old.

 
At 12:21 PM, Blogger VSK said...

//I am talking about my son now. he's 2 years and a few months old. //

*****"உவ்வாவைத் தொடாதே!" எனச் சொல்ல வேண்டாம்!
"நீர்[ஒண்ணுக்கு] போகும் இடம்" எனச் சொல்லிக் கொடுங்கள்!
பின்னால் அதன் பெயர் உங்களால்/பள்ளியில் அவனுக்கு/அவளுக்கு சொல்லிக் கொடுக்கப் படும் வரை!

குளிக்கும் போது, ஆர்வமிகுதியில் அதன் கை உங்கள் உறுப்புகளின் மீது பட்டால், பட்டென அடிக்க வேண்டாம்!
இது வெகு இயல்பாக நிகழும் ஒரு நிகழ்ச்சி தான்!*****

இப்படிச் சொல்லியிருந்தேன் எனது 4-ம் பதிவில்.

இது சுகத்துக்காக செய்வது இல்லை இவ்வயதில்.

நாம் தலையைச் சொறிவது, கால் ஆட்டுதல் போல, மூக்கை நோண்டுவது, இதைத் தடவிக் கொண்டிருப்பது போன்றவை குழந்தைகள் செய்யும்!

குழந்தைகள் சிறுநீர் கழித்தபின் ஒவ்வொரு முறையும் நன்றாகத் துடைத்து விட வேண்டும்.

யூரியா போன்ற உப்புகள் அங்கே தங்கி, லேசான அரிப்பை ஏற்படுத்தலாம்.

சொறியச் சொறிய சுகமாக இருக்கும்!

அப்படியே அது ஒரு பழக்கமாகிப் போகக் கூடும்.

உங்கள் கவனத்தைக் கவரச் செய்யும் உத்தியாகக் கூட இருக்கக் கூடும், அத்ற்குத் தேவையான கவனம் கிடைக்காவிட்டால்.

விரைவில் இது மாறிவிடும்.

அப்புறம் நீங்க வேற கவலைப் படலாம்.

--உங்களை நினைத்து நான் சொன்னது, கால்கிரியார் சொன்னது என கொத்தனார் தெரிவித்திருக்கிறார் , பார்த்தீர்களா!
நன்றி, கொத்தனாரே!--

 
At 4:58 PM, Blogger VSK said...

அட நீங்க வேற டோண்டு சார்!

நான் பேசறது 12, 14 வயசு குழந்தைகளைப் பற்றி.
அவங்களுக்கு இதுக்கு இன்னும் வயசே வரலை. அதுக்கு முன்னாடி ஒரு எச்சரிக்கையா சொல்லி வைப்போம்னா,...
நீங்க வந்து உங்க பல வருட பழக்கத்தை மாத்த முடியாதுன்னு சொல்லி,.....
குழப்புறீங்களே!

 
At 3:51 AM, Blogger Hariharan # 03985177737685368452 said...

எஸ்கே சார்,

எல்லை தாண்டாமல் இயல்பாய் ஏற்படும் உணர்ச்சி உந்துதல்களை இயற்கையானவைதான் அஞ்சவோ, கூசிக்குறுகவோ அவசியமில்லை என்று பெற்றோரே நேரடியாக இளையோர்களிடம் தெரிவித்தாலே கல்லூரியில் கட் அடித்து 'அஞ்சரைக்குள்ள வண்டி'யோட்டி இளையோர்கள் அடுத்த கட்ட கெட்ட பழக்கங்கள், மன விகாரங்களுக்குள் செல்வதைத் தடுத்துவிடும்.

இணையத்தின் கொடை தங்களது இந்த சமூக அக்கறை உடலியல் மாற்றம் பற்றிய அறிவியல் தொடர்.

எவரும் தொடத் தயங்கும் தங்களது பாலியல் கல்வித் தொடரில் வரும் பின்னூட்டங்களின் வாயிலாகவும் இதர வலைஞர்களின் கருத்துச் செறிவான பூக்களில் தொடுக்கப்பட்ட மாலையாகிப் பரிமளிக்கிறது.

வாழ்த்துக்கள்,

அன்புடன்,
ஹரிஹரன்

 

Post a Comment

<< Home