"லப்-டப்" 19 "அனுஷா அனுஷா அனுஷா!"
"அனுஷா அனுஷா அனுஷா!"
"IT'S NOT HOW GOOD WE ARE, BUT WHAT GOOD THINGS WE DO!!
[எவ்வளவு நல்லவன் நீ என்பதல்ல; எத்தனை நல்லவை செய்தாய் என்பதே!]
"லப்-டப்" -- 19 "நெஞ்சமொன்று கடனாகத் தருவாயா?"
கந்தசாமியை செந்தில்நாதன் பார்த்துக் கொள்ளட்டும்!
நாம் இதய பலவீனம் {heart failure] சம்பந்தமான சில சிகிச்சை முறைகளைப் பார்க்கலாம்.
4 நிலைகளாகப் வகைப்படுத்தலாம் இதயப் பலவீனத்தை எனப் பார்த்தோம்.
ஒவ்வொரு நிலைக்கும் தக்க மாதிரி சிகிச்சை முறைகளும் அமையும் எனவும் கண்டோம்.
அதில் சில முறைகளைச் சுருக்கமாக இப்போது கவனிப்போம்.
இதயத் துடிப்பை ஒழுங்குபடுத்தல்[Cardiac Resynchronization Therapy; CRT]
1. பேஸ்-மேக்கர்[Cardiac Pace Maker]:
வலது ஆரிக்கிளில் இருக்கும் எஸ்.ஏ. நோட்[SA node] எனும் இடத்திலிருந்துதான் இதயத் துடிப்பின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது என முன்னொரு பதிவில் சொல்லியிருந்தேன்.
இதயம் சோர்வடையும் போது இந்த நோடின்[node] மூலம் மின்சார அதிர்வுகள் குறைய ஆரம்பித்து, இதயத் துடிப்பு சீராக அடிக்க மறுக்கிறது.
இதை ஒழுங்குபடுத்த பேட்டரியால் இயங்கக்கூடிய ஒரு மின்சாரக்கருவி நம் உடலில் பொருத்தப் படுகிறது.
இதற்கு "பை-வெண்ட்ரிகுலர் பேஸ் மேக்கர்"[Bi-Ventricular Pace-Maker] எனப் பெயர். இடது பக்க மார்பில் [அ] வயிற்றுப்பகுதியில்[abdomen] தோலுக்குக் கீழே இக்கருவி பொருத்தப்பட்டு, அங்கிருந்து சில ஒயர்கள்[wires] வல்து ஆரிக்கிள், வலது, இடது வெண்ட்ரிக்கிள்களுக்குள் செலுத்தப்பட்டு, இப்பகுதிகளின் இயக்கம் ஒழுங்கு படுத்தப் படுகிறது.
முன்கூட்டியே அளவை செய்யப்பட்ட [Pre-set]இலக்குக்குக் கீழே இதயத் துடிப்பு இறங்கும் போது, இந்தக் கருவி செயல் படத் துவங்கி, துடிப்பைச் சீராக்க உதவுகிறது.
அதே போல், அளவுக்கு மேலாகத் துடிக்கும் நேரங்களிலும் இந்தக் கருவி செயல்பட்டு சரியான அளவுக்குக் கொண்டு வரும்.
ஒரு தொலைபேசி இணைப்பின் மூலம், இந்த அளவைகள் உங்கள் மருத்துவரின் கணினிக்கு மாற்றப்பட்டு, அவரால் இதை கண்காணிக்க முடியும்.
2,3 நிலைகளில் இருப்பவர்களுக்கு இக்கருவி மூலம் பயன் கிடைக்கும்.
2. கார்டியாக் டீ-ஃபிப்ரிலேடர்[Cardiac De-Fibrillator]:
இது அற்புதமான கணினிக் கருவி. இதயத்தின் துடிப்பை உள்ளிருந்தே சரிசெய்யும் கருவி.
இதுவும் பேஸ்-மேக்கர் போலவே பொருத்தப்படும்
நோயின் தீவிரத்தைப் பொறுத்து மேற்கூறிய இரு கருவிகளுமே ஒருவருக்குப் பொருத்தப்படலாம்.
3. VAD

இவையெல்லாம் பலனளிக்காமல், இதய பலவீனம் 3 [அ] 4-ம் நிலையில் இருக்கையில் இதய மாற்று அறுவை சிகிச்சை தேவையென ஆகும் போது, மாற்று இதயம் கிடைக்கும் வரை,ஒரு தற்காலிக ஏற்பாடாக VAD[Ventricular Assist Device] "வெண்ட்ரிக்கிளுக்கு உதவி செய்யும் கருவி" பொருத்தபடலாம்.
பழுதான வெண்ட்ரிக்கிளை மட்டும் வெளியிலிருந்து இயக்கும் இக்கருவியைப் பற்றிய மேல் விவரங்கள் வேண்டுவோர் உங்கள் மருத்துவரை அணுகினால், விவரமாகக் கூறுவார்.
4."டோர் சிகிச்சை"[DOR Procedure]:
பழுதடைந்த இதயத் திசுக்களை அறுவ சிகிச்சை மூலம் அகற்றும் ஒரு முறை இது. சாதாரணமாக இது செய்யப்படுவதில்லை. வேறு மாற்று வழிகள் பயனளிக்கா நிலையின் போதே இது செய்யப்படுகிறது.
5. பழுதடைந்த வால்வுகளையும், கரோனரி நாளங்களையும் அறுவைச்சிகிச்சை மூலம் சரி செய்வது இன்னொரு வகை. இவை பற்றி, "இதயத் தாக்குதல்"[Heart attack] பதிவுகளில் முன்னரே பார்த்தோம்.
6. "இதய மாற்று அறுவை சிகிச்சை" [Heart Transplant]:
இறந்து போன ஒருவரின் இதயம் அவரது குடும்பத்தினரின் ஒப்புதலின் பேரில் தானமாக அளிக்கப்பட்டு, மற்றொருவருக்குப் பொருத்தப் படலாம். மூளை இயக்கம் நின்று போனதால்[Brain dead] இறந்ததாக முடிவு செய்யப்பட்ட ஒருவரின் இதயம் இன்னும் சற்று நேரத்திற்கு இயங்கிக் கொண்டுதான் இருக்கும்.
டோபமின்[Dopamine] என்னும் மருந்தின் உதவியோடும், நுரையீரலை வெளியிலிருந்து இயக்குவதன் மூலமாகவும் மேலும் சில மணி நேரங்களுக்கு இதயத்தை இயக்கத்தில் வைத்திருக்க முடியும்.
இந்த நேரத்திற்குள், மாற்று இதயம் தேவைப்படும் சரியான , பொருத்தமான நோயாளிக்கு இது பொருத்தப்பட வேண்டும்.
[இந்தப் பதிவு எழுதும் இந்நேரத்தில், நேற்றைய தினம் பள்ளிக்குச் செல்லும் போது ஒரு கார் மோதி, மரணமடைந்த என் தமிழ்நண்பரின் 12 வயதுக் குழந்தை அனுஷாவின் இதயம் யாரோ ஒருவருக்குப் பொருத்தப்படுகிறது என்னும் செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொண்டு, அந்தக் குழந்தைக்காகவும், அவர் குடும்பத்தினர்க்காகவும் ஒரு நொடி பிரார்த்தியுங்கள் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்]
இதற்கு மேல் தொடர மனமில்லை.
[அனுஷாவின்]இதயம் மீண்டும் தொடரும்!

[இதில் சொல்லப்பட்டிருப்பவை உங்கள் தகவலுக்கு மட்டுமே.
முறையான சிகிச்சைக்கு உங்கள் மருத்துவரை அணுகவும்.]
21 Comments:
ஐயா, மனம் கலங்கி விட்டதே. அந்த தளிருக்கு இப்படி ஒரு முடிவா? அத்தனை சோகத்திலும் அடுத்தவர் துயர் தீர்க்க கரம் நீட்டிய அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் கடவுளுக்கு நிகர். அவர்களுக்கு என் அனுதாபங்களும் வணக்கங்களும்.
//[இந்தப் பதிவு எழுதும் இந்நேரத்தில், நேற்றைய தினம் பள்ளிக்குச் செல்லும் போது ஒரு கார் மோதி, மரணமடைந்த என் தமிழ்நண்பரின் 12 வயதுக் குழந்தை அனுஷாவின் இதயம் யாரோ ஒருவருக்குப் பொருத்தப்படுகிறது என்னும் செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொண்டு, அந்தக் குழந்தைக்காகவும், அவர் குடும்பத்தினர்க்காகவும் ஒரு நொடி பிரார்த்தியுங்கள் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்]
http://kasadara.blogspot.com/2007/04/19.html//
ஐயா,
மிக வருத்தமான நிகழ்வு, அந்த குழந்தையின் பெற்றோர்களுக்கு ஆறுதல் சொல்லுங்க.
:(
/
[இந்தப் பதிவு எழுதும் இந்நேரத்தில், நேற்றைய தினம் பள்ளிக்குச் செல்லும் போது ஒரு கார் மோதி, மரணமடைந்த என் தமிழ்நண்பரின் 12 வயதுக் குழந்தை அனுஷாவின் இதயம் யாரோ ஒருவருக்குப் பொருத்தப்படுகிறது என்னும் செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொண்டு,//
நெஞ்சு கனத்து போச்சு SK.... :(
ஐயா,
தற்பொழுது தான் அனுசாவின் நினைவலைகள் பற்றிய பதிவை பார்த்தேன். சின்ன வயதில் இவ்வளவு திறமையை வைத்திருத்திருக்கிறாள் !!!
மிகவும் வருத்தமாக இருக்கிறது !
கலங்கிய கண்களுடன்தான் இதைப் பதிந்தேன் கொத்ஸ்!
சாவிலும் ஒலிக்கிறாள் அனுஷா!
அந்தக் குழந்தையின் வலைத்தளத்திற்கும் சென்று ஒரு வரி எழுதுங்கள்.
பாராட்டவும் இங்கே தமிழ் உள்ளங்கள் இருக்கிறதென்று!!
நீங்களும் போய் ஒரு வார்த்தை சொல்லிடுங்க கோவியாரே!
அந்தப் பெண்ணின் புல்லாங்குழல் இசையை அனவரும் கேட்க லிங்க் அனுப்பியதற்கு நன்றி.
தந்தையின் கண்ணெதிரே நடந்த கோரம் இது ராம்.
கவலையைத் தள்ளி வைத்து இதயத்தைத் தானமாக அளித்த அவர் உள்ளம் வாழ்க!
உங்கள் பதிவுகளின் மௌன வாசகன் நான். பின்னூட்டமிட நேரமில்லாது ஓடிகொண்டிருந்தாலும் இந்த திறன் வாய்ந்த குழந்தையின் இழப்பைத் தாளமுடியாது என்னிரு கண்ணீர்சொட்டுக்களை இங்கு காணிக்கையாக்குகிறேன். அதுவும் கோவியாரின் இணைப்பு இதயத்தை மேலும் கனக்கச் செய்துவிட்டது. அவளில்லாமல் போனாலும் அவள் இதயத்தை இயங்கிக் கொண்டிருக்க வைத்த பெற்றோர்களுக்கு இந்த துயரத்தைத் தாங்கும் சக்தியை எல்லாம்வல்ல இறைவன் அருள்வானாக !
நன்றி மணியன்!
இறைவனுக்கு இதயமே இல்லை.அரும்புகளின் மீதா மரணத்தைக் குறிவைக்க வேண்டும்?
அனுஷாவின் பெற்றோருக்கு உயிரைப்பறித்த இறைவனே அதைத் தாங்கும் வலிமையையும் தரட்டும்.
அந்தப்பதிவில் குழந்தை புல்லாங்குழல் வாசிப்பது கேட்டு கண் கலங்கிறது டாக்டர்...என்னவென்று நான் அங்கு எழுத,இப்போதைக்கு இயலாது மனம் வேதனையில் தவிக்கிறது.
இப்போதுதான் திரும்பீனேன் அவளை அனுப்பிவிட்டு!
:(
தாள முடியா சோகம் இது ஷைலஜா!
7 பேர் இன்று அவளருளால் உயிர் வாழ்கிறார்கள்.
ஆம்!
தன் இதயம்,கணையம், 2 நுரையீரல்கள், இரண்டு சிறுநீரகங்கள் இதனைத் தந்து விட்டுத்தான் சென்றிருக்கிறது அந்தப் பிள்ளை!
வாழ்க அதன் பெற்றவர்கள்!
இதயத்துக்கு இப்படி ஒரு ஷாக்கா!!
ஏனோ தெரியவில்லை,முதலில் படிக்க ஆரம்பிக்கும் போதே கடைசியில் ஏதாவது சொல்லி பதிவை முடித்திருப்பார் என்று தோன்றியது.(நகைச்சுவையாக)
அங்கு சொல்லிவிடுகிறேன் அனுதாபங்களை.
தலைப்பை முதலிலேயே எழுதிவிட்டு, பாதி எழுதுகையில் இந்த சேதி வந்தது.
தலைப்பில் சொன்னபடி கூட இல்லாமல், இனாமாகவே தந்திருக்கிறாள் இந்தப் பெண்!
எல்லாரும் ஒரு வரி எழுதுங்கள், குமார்!
என்ன சொல்வதென்றே தெரியவில்லை..
அனுவின் பெற்றோர்களுக்கு என் ஆழந்த அனுதாபங்களும், வணக்கங்களும்.. உயர்ந்து நிற்கிறார்கள்.. ஆனால்...அவள் இல்லையே...
படிக்கின்ற நமக்கே மனம் எவ்வளவு பாடு படுகிறது. அனுஷாவின் பெற்றோர், நினைத்து பார்க்க முடியவில்லை!!
அனுஷாவின் அத்தனை பாகங்களும் இனி வாழும் இல்லையா எஸ்.கே சார்.
எப்படி அந்தப் பெற்றோரை மீடபது..
தன் மகள் இன்னமும் எங்கோ எவர்களுக்காகவோ வாழ்ந்து கொண்டிருப்பதாகவே நினத்துக் கொண்டிருக்கிறார்கள் அனுஷாவின் பெற்றோர், திரு. இசக்கிமுத்து. அதுவே உண்மையும் கூட!
அவளால் ஒரு 7 பேர் இன்னமும் வாழ்கின்றனர் என்பதே உண்மை, வல்லியம்மா.
Sankar Sir,
Now only I read the pathivu. Manasu kanathu pOchu. Antha family-kku kadavul nalla thairiyathai kadavul thaan kodukka mudiyum. rendu varthaiyil solli aaruthal sollakoodiya visayamaa ithu.. :-)
Anbudan,
'IIRpithan' Siva
மிகவும் வருத்தமாகிப்போய்விட்டது! :-( அனுஷாவின் உற்றார் உறவினருடைய ஆறுதலுக்கு என் பிரார்த்தனைகள்.
வாழ்க்கை எல்லாவற்ரையும் கடந்து சென்றுகொண்டுதான் இருக்கிறது.
அப்பெண்ணின் இழப்பு ஆனால் இன்னமும் உணரப்படுகிறது.
நன்றி, சேதுக்கரசி.
Post a Comment
<< Home