"கசடற"

அறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன். முழுக்க முழுக்க இவை என் கருத்துகள் மட்டுமே! முருகனருள் முன்னிற்கும்!

Wednesday, April 25, 2007

"லப்-டப்" -- 20 "நெஞ்சு பொறுக்குதில்லையே!"

"லப்-டப்" -- 20 "நெஞ்சு பொறுக்குதில்லையே!"

இதயத்தைப் பாதிக்கும் இன்னும் சில நோய்களைப் பற்றிச் சுருக்கமாக இப்பதிவில் பார்ப்போம்.

1. ஹைப்பர்ட்ரோஃபிக் கார்டியோமையோபதி [Hypertrophic Cardiomyopathy]:

இதயம் என்பது முழுக்க, முழுக்க சதையால் ஆன ஒரு உறுப்பு என முதலில் சொல்லியிருந்தேன்.
மற்ற தசை உறுப்புகள் போலவே, இதுவும் தடிமனாக[thickening] முடியும்!

நிமிடத்திற்கு 72 முறை சுருங்கி விரியும் தன்மை கொண்ட இதயம், தடிமனானால் இந்த வேலை தடைப்படுகிறது.

பொதுவாக வலது, இடது பகங்களைப் பிரிக்கும் தடுப்புச்சுவரே[[septum] அதிகமாக தடிமனாகும் வாய்ப்பு உள்ளது.

இப்படி ஆகும் போது, இடது வெண்ட்ரிக்கிளில் இருந்து அயோர்ட்டாவுக்கு அனுப்பப்படும் ரத்தத்தின் அளவு குறைய நேருகிறது.

இதற்கு, "வெளிச்செல்லும் ரத்த ஓட்டத் தடை"[Outflow tract obstruction] எனப் பெயர்.
பல்வேறு மாற்றங்கள் இதயத்துக்குள் இதனால் நிகழ்கிறது.

1. இதயத்தின் கொள்ளளவு குறைகிறது.
2. ஆனால், இதயத்திற்கு வரும் ரத்தத்தின் அளவு அப்படியே இருப்பதால், அதிக அளவில் ரத்தம் உள்ளே செல்ல முயல்கிறது.
3. இதனால், உட்செல்ல முடியாத ரத்தம் பின்தங்குகிறது.
4. இடது வெண்ட்ரிக்கிள் அயோர்ட்டாவிற்கு வழக்கத்தை விடக் குறைவாக ரத்தத்தைச் செலுத்துகிறது.
5. இதனால் அதிகப்படியான ரத்தம் இ.வெண்ட்ரிக்கிளில் தங்கி, இதன் அளவு பெரிதாகிறது.

6. அதிகப்படியான ரத்தம் இ.வெண்ட்ரிக்கிளில் தங்குவதால், இதன் சுருங்கி விரியும் தன்மை தடைப்படுகிறது.

500 பேருக்கு ஒருவர் என்ற கணக்கில் இது நிகழ்வதாக, புள்ளிவிவரம் சொல்லுகிறது!

பரம்பரையாகவோ, அல்லது அதிக ரத்த அழுத்தத்தின் காரணமாகவோ, அல்லது, காரணம் ஏதுமின்றியோ, இது வரலாம்.

இதன் அறிகுறிகள்:

நெஞ்சுவலி,
மார்புப் பகுதியில் ஒரு அழுத்தம்,
மூச்சு வாங்குதல்,
திடீரென மயக்கம் வருதல்,
மார் படபடப்பு,
திடீர் மரணம்

இதன் அறிகுறிகள் ஏதேனும் தோன்றியவுடனேயே உங்கள் மருத்துவரைப் போய்ப் பார்ப்பது மிகவும் முக்கியம்.

ஒரு எளிய எக்கோகார்டியோகிராம்[echocardiogram] மூலம் இதனைக் கண்டுபிடித்து சிகிச்சையை உடனே தொடங்க முடியும்.
தள்ளிப் போடாதீர்கள்.

Excercise Stress Test எனப்படும் ட்ரெட்மில்[treadmill] சோதனை, மார்பு எக்ஸ்-ரே[Chest X-ray], ECG, கார்டியாக் கதீடெரைஸெஷன்[Cardiac Catheterization] போன்ற சில சோதனைகளும் செய்யப்படலாம்,... இதயத்தின் வேலைத்திறனைக் கண்டறிய.

நோயின் தீவிரத்தைப் பொறுத்து,மருந்து, மாத்திரைகள் மட்டுமோ அல்லது அறுவைச் சிகிச்சையோ செய்யும் நிலை வரும்.

தடுப்புச் சுவரின் தடிமனை நீக்கும் அறுவை சிகிச்சை[Septal Myomectomy], அல்லது இந்தச் சுவருக்கு ரத்தமளிக்கும் நாளத்தை செயலிழக்கச் செய்யும் அறுவை சிகிச்சை[Ethanol Ablation] போன்றவை தேவைப்படலாம்.

இது தவிர, இதயத்தின் வேலைத்திறனை அதிகரிக்கச் செய்யும் ஒரு கருவியை பொருத்துவதும்[Implantable Cardioverter Defibrillator] நிகழலாம்.
கூடவே, மற்ற சிகிச்சை முறைகளில் சொல்லியபடியே, வாழ்வுமுறை மாற்றங்களும்[Life stule changes] அவசியம்.

உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, போன்றவற்றை உங்கள் மருத்துவர் உங்களுக்குச் சொல்லுவார்.

2. "பெரிகார்டைடிஸ்" [Pericarditis]எனும் இதயதைச் சுற்றி படர்ந்திருக்கும் ஒரு ஜவ்வுத் தோலில்[Fibrous membrane] ஏற்படும் நோய்.

இந்தத் தோல் வெளி, நடு உள்[Outer, middle, inner] என மூன்று படிமங்களில் ஆனது.இவற்றுக்கு இடையே உராய்வைத்[Friction] தடுப்பதற்காக ஒரு திரவம் சுரக்கிறது.

உடலின் மற்றப் பாகங்களில் ஏற்படும் நோய்களின்[Infections] காரணமாக இதுவும் பாதிக்கப்படலாம்.
உடனடியாகவோ, [அ] கொஞ்சம் கொஞ்சமாகவோ இது வரக்கூடும்.

நெஞ்சுவலி, ஜுரம், இதயத்தின் அளவு பெரிதாதல்[Hypertrophy] போன்றவை இதன் அறிகுறிகள்.
ஈ.சி.ஜி., எக்ஸ்-ரே மூலம் இது கண்டுபிடிக்கப்படும்.

மருந்து மாத்திரைகள் மூலம் இதை குணப்படுத்த முடியும்.
அபூர்வமாக, இந்தத் தோலையே அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலையும் ஏற்படலாம்.

3. "இதய வால்வுகளைத் தாக்கும் நோய்"[Valvulitis, Valve disease]:

மைட்ரல், ட்ரைகஸ்பிட், அயோர்டிக், பல்மோனிக் என 4 வால்வுகள் இதயத்திற்குள் இருப்பதாக முன்னொரு பதிவில் சொல்லியிருந்தது நினைவிருக்கலாம்!{??}

ஒரு குறிப்பிட்ட வழியாக ரத்தத்தை அனுப்பும் பணியை இவைகள் செய்கின்றன.

இவை சரியாக வேலை செய்யாத போது ரத்த ஓட்டம் சீர்குலைகிறது.

வால்வுகள் குறுகிப் போவதாலோ[narrowing], [அ] சரியாக மூடித் திறக்காததாலோ[incomplete closing] இந்த நிலை வருகிறது.

பிறப்பிலேயே சில குறைபாடுகளால் இது பெரும்பாலும் நிகழ்கிறது.

சிறுவயதில் குழந்தைகளுக்கு வரும் ருமாட்டிக் காய்ச்சல்[Rheumatic Fever] இன்னுமொரு காரணம்.

இவை தவிர வேறு பல காரணங்களும் உண்டு.
அவை பெரும்பாலும் முக்கியமானவை அல்ல என்பதால் தவிர்க்கிறேன்.

அறுவை சிகிச்சை மூலமே பெரும்பாலும் இதை சரி செய்ய முடியும்.

படபடப்பு, அதிகம் வேலை செய்ய முடியாமை, சுத்த, அசுத்த ரத்தங்கள் கலந்து போகும் அபாயம் இருப்பதால் வரும் உடல் நீலமாதல் போன்றவை இதன் அறிகுறிகள்.

அநேகமாக இதயத்தைப் பற்றிய எல்லாவற்றையும் தொட்டிருக்கிறேன் என நினைக்கிறேன்.

இன்னும் சொல்ல வேண்டிய இரு பதிவுகள்:
1. ரத்தம் ஏன், எப்படி, எதனால் உறைகிறது?
2. குழந்தைகளுக்கு வரும் இதய நோய்கள்.

இவை பற்றி, அடுத்து வரும் பதிவுகளில் பார்ப்போம்.


24 Comments:

At 7:08 PM, Blogger வடுவூர் குமார் said...

அநேகமாக இதயத்தைப் பற்றிய எல்லாவற்றையும் தொட்டிருக்கிறேன் என நினைக்கிறேன்.
இதயத்தையும் தொட்டுள்ளது இந்த பதிவு.நன்றி

 
At 7:12 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

பொதுவா இதயத்தில் ஓட்டை அப்படின்னு சொல்லறாங்களே. அப்படின்னா என்ன?

 
At 7:27 PM, Blogger VSK said...

என்னையும் அப்படியே தொட்டுவிட்டீர்கள் திரு. குமார்!

நன்றி.

 
At 7:30 PM, Blogger VSK said...

அது எப்படீங்க ... இவ்வளவு பெருசா ஒரு பதிவு போட்டாலும் தனியா ஒரு கேள்வி தோணுது உங்களுக்கு, கொத்ஸ்!
:)

இந்ந்த வால்வுகளில் வரும் நோயைத்தான் பொதுவாக இதயத்தில் ஓட்டை எனச் சொல்லுவார்கள்.

இவை தவிர, சிறு குழந்தைகளின் இதயத்திலும் வேறு சில காரணங்களால் ஓட்டை வரலாம்.

அது பற்றி பின்னர் வரும்!

 
At 7:53 PM, Blogger கோவி.கண்ணன் said...

எஸ்கே ஐயா,

அருமையான மருத்துவ குறிப்புகள் மற்றும் படங்களுடன் ஆன இந்த இடுகை நன்று. பாராட்டுக்கள்.

மார்பு தசை வலிக்கும், இதய வலிக்கும் தொடர்பு இருக்கிறதா ?
மார்பு தசை வலி இது இதய வலி அல்ல என்று கண்டுகொள்வது எவ்வாறு ? மருத்துவரை நாடி தான் தெரிந்து கொள்ள வேண்டுமா ?

 
At 8:12 PM, Blogger சேதுக்கரசி said...

முதல் பகுதி பாடமெல்லாம் கொஞ்சத்துக்குக் கொஞ்சம் சுலபமா இருந்துச்சு.. இதெல்லாம் விட :(

 
At 8:41 PM, Blogger VSK said...

இதய வலியும், மார்பு தசைவலியும் வெவ்வேறே, கோவியாரே!

ஆனால் இரண்டிலுமே நெஞ்சுப் பகுதியில் வலி வருமென்பதால், மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்வதே சிறந்தது.

நன்றி.

 
At 8:43 PM, Blogger VSK said...

என்னங்க! சேதுக்கரசி!
இப்படிச் சொல்லிட்டீங்க!

ஒண்ணாம் வகுப்பு மாதிரி பத்தாம் வகுப்பு எப்படி இருக்கும்?
கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும்!
ஆனால், முதல் வகுப்பில் இருந்தே கவனமாகப் படித்து வந்தால், அவ்வளவு சிரமம் தெரியாது.
நீங்க தான் அடிக்கடி லீவுல போயிடறீங்களே!
:))

 
At 8:59 PM, Blogger சேதுக்கரசி said...

//ஒண்ணாம் வகுப்பு மாதிரி பத்தாம் வகுப்பு எப்படி இருக்கும்?//

:-) மருத்துவத் துறையில் சிலது புரியும்.. இதுல கொஞ்சம் வீக்.. சரி மறுபடியும் படிச்சுப் பாஸாகற வழியப் பார்க்கிறேன்!!

 
At 9:25 PM, Blogger மங்கை said...

///அது எப்படீங்க ... இவ்வளவு பெருசா ஒரு பதிவு போட்டாலும் தனியா ஒரு கேள்வி தோணுது உங்களுக்கு, கொத்ஸ்!
:)///

இது தான் எஸ் கே ஐயா நானும் நினைத்தேன் அவரோட கேள்விய பார்த்த்தும்... நீங்களும் கேட்டுட்டீங்க.. :-)))

அருமையான தொடர் கொடுத்தமைக்கு நன்றி....

 
At 10:12 PM, Anonymous Anonymous said...

அருமையான விளக்களுடன் எளியவருக்கும் புரியும்படி இருக்கும் இந்த பதிவு ஒரு சிறந்த ஆவணம்...

ஏதாவது பதிப்பகத்தார் பார்த்துவிடப்போகிறார்கள்...பிறகு புத்தகமாக போட்டே தீருவோம் என்று அடம்பிடிக்கப்போகிறார்கள்...

 
At 10:12 PM, Anonymous Anonymous said...

why dont you send this blog to Mr.Badri, he is looking for technical informative tamil authors.

 
At 4:11 AM, Blogger இலவசக்கொத்தனார் said...

//இது தான் எஸ் கே ஐயா நானும் நினைத்தேன் அவரோட கேள்விய பார்த்த்தும்... நீங்களும் கேட்டுட்டீங்க.. :-)))//

எல்லாம் ஒரு முடிவாத்தேன் கிளம்பி இருக்கீக. நல்லாயிருங்கடே!

 
At 8:04 AM, Blogger VSK said...

நீங்க பாஸாகலைன்னா வேறு யாரு பாஸாவாங்க!

முயற்சி திருவினையாக்கும்!

 
At 8:07 AM, Blogger VSK said...

இந்தப் பகுதிக்கு முதன் முறையாக வருகை தந்திருக்கும் அண்ணன், அ.மு.க. தலைவர், சிங்கத்தமிழன் செந்தழலாரைப் பாராட்டி இந்த நூல் மாலையை, பொன்னாரமாக அணிவிக்கிறேன்!

:))

வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி!

 
At 8:08 AM, Blogger VSK said...

அப்பாடா! எனக்குத் தோணின மாதிரி உங்களுக்கும் தோணினதில் மகிழ்கிறேன், மங்கை அவர்களே!

இப்ப இதுக்கும் எதனாச்சும் சொல்லிகிட்டு வருவாரு பாருங்க!

பாராட்டிற்கு மிக்க நன்றி!

 
At 8:09 AM, Blogger VSK said...

Could you please bring it to his attention or send me his address, Mr. Anony?
Thanks.

 
At 8:12 AM, Blogger VSK said...

//எல்லாம் ஒரு முடிவாத்தேன் கிளம்பி இருக்கீக. நல்லாயிருங்கடே!//


வழக்கமா ஆட்டோ அனுப்பறதுக்கு முன்னடி சொல்ற டயலாக்தானே இது, கொத்ஸ்!

ஆட்டோல்லாம் எதுக்கு?
அதன் நாளைக்கு வரப் போறேனே!
அங்கேயே முடிச்சிருங்க!
சொ.செ.சூ.!!!

:))

 
At 10:18 PM, Blogger சேதுக்கரசி said...

http://thoughtsintamil.blogspot.com/2007/04/blog-post_11.html

 
At 4:31 AM, Blogger பத்மா அர்விந்த் said...

SK
Very detailed explanation. I am not sure if you touched upon diastolic dysfuction kind problems, or QT intervals.These can also cause major problems to both heart and lungs, correct?

 
At 9:50 PM, Anonymous Anonymous said...

Very,very nice informative post. What a wonderful service to people of all adult ages.Keep posting.You have wealth of info.

Rumya

 
At 8:36 PM, Blogger VSK said...

தகவலுக்கு நன்றி, சேதுக்கரசி!

 
At 8:41 PM, Blogger VSK said...

//Very detailed explanation. I am not sure if you touched upon diastolic dysfuction kind problems, or QT intervals.These can also cause major problems to both heart and lungs, correct? //

ரத்த அழுத்தம் பற்றிய பதிவில் இது பற்றி சுருக்கமாகச் சொல்லியிருந்தேன், பத்மா அர்விந்த்.

ஈ.சி.ஜி. பற்றி ஒரு பதிவிடலாம் என எண்ணினேன்.
பிறகு அது மருத்துவர் மூலமாக அவரவர் தெரிந்து கொள்வதே நல்ம் என எண்ணி சொல்லாமல் விட்டேன்.

 
At 8:42 PM, Blogger VSK said...

Thank you so much for your kind words, "rumya".

You too keep writing!
:)

 

Post a Comment

<< Home