"கசடற"

அறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன். முழுக்க முழுக்க இவை என் கருத்துகள் மட்டுமே! முருகனருள் முன்னிற்கும்!

Wednesday, May 16, 2007

"லப்-டப்" -- 22 "ரத்தமிங்கு உறையட்டும்"

"லப்-டப்" -- 22 "ரத்தமிங்கு உறையட்டும்"

ஆதிகாரணி[Primary Factor] ஒன்று, உறைகாரணிகள்[Clotting Factors] 12, எனச் சொன்னேன் முன் பதிவில்!

வான் வில்லி ப்ராண்ட் காரணி[Von Willi Brandt Factor] என ஒன்று ரத்தத்தில் இருக்கிரது.

கொல்லாஜென்[collagen] ப்ளேட்லெட்டுகளோடு சேர்ந்து ரத்தம் உறைய இந்த வான் வில்லி ப்ராண்ட் காரணி[vwbF] உதவுகிறது.


ப்ளேட்டுகளின் மேல் இருக்கும் க்ளைகோ ப்ரொடீன்களோடு[Glycoproteins], கொல்லாஜென் இழைகள் சேர்ந்து ரத்தம் உறைய இந்த வா.வி.ப். காரணி ஒரு பாலமாக உதவுகிறது.


இந்தக் காரணியின் அளவு ரத்தத்தில் குறையும் போது வா.வி.ப். நோய்[V W B Disease] என்றழைக்கப்படுகிறது.

இப்போது உறைகாரணிகளைப்[Clotting Factors] பார்க்கலாம்.

இவை மொத்தம் 12 வகைப்படும், ஒன்று முதல் 12 வரை இதற்கு எண்கள் கொடுத்திருக்கிறார்கள்.


இது தவிர, தனித்தனியே சிலவாயில் நுழையாத பெயர்களும் இவற்றுக்கு உண்டு.


உள்வழிப்பாதைக்கு[Intrinsic Pathway] 8, 9, 10, 11, மற்றும் 12 உதவுகிறது.

மற்றவை வெளிவழிப்பாதைக்கு.[Extrinsic Pathway]

இவற்றில் ஏற்படும் குறைபாடுகளால் ரத்தம் உறைவதில் தடுமாற்றம் வரும்.

இங்கு நான் மிகவும் பொதுப்படையாகச் சொல்லி வருகிறேன்.

குறிப்பிட்ட குறைபாடுகளால் வரும் நோய்கள் மிகவும் அரிது, அபூர்வம் என்பதால் இப்படி!!

இப்போது சில முக்கியமான நோய்களைப் பார்ப்போம்!

ஹீமோஃபீலியா A: [Hemophilia A]

இது ஒரு பரம்பரை நோய்.

உறைகாரணி 8 -ன் குறைபாட்டினால் வருவது இது.

பொதுவாக மூட்டுகளில் ரத்தப்போக்கு ஏற்பட்டு, இது உறைய தாமதமாகும்.

ஒரு சின்ன காயம் பட்டாலும், ரத்தப்போக்கு சீக்கிரமாக நில்லாது போகும் இக்குறைபாடு உள்ளவர்களுக்கு.

உறைகாரணி 8 செயற்கையாக உடலுள்ளே செலுத்தப்பட்டு, இக் குறைபாடைத் தவிர்க்க முடியும்.

ஹீமோஃபீலியா B: [Hemophilia B]

காரணி 9-ன் குறைபாட்டால் இது நிகழ்கிறது.

ரத்தம் உறைய அதிக நேரம் ஆகிறது இப்போது.

வா.வி.ப். குறைபாடு:[V W B Deficiency/Disease]

ப்ளேட்லெட்டுகள் ஒன்று சேர்வது தடைப்பட்டு, காரணி 8-ன் வேலையைத் தடுக்கிறது இது.

பொதுவாக, வார்ஃபேரின்[Warfarin], ஹெபாரின்[Heparin] என்னும் மருந்துகள் இந்த வகை நோய்களுக்கு உதவுகின்றன.

நாம் சாதாரணமாக, தலைவலி போன்றவற்றிற்கு உபயோகிக்கும் ஆஸ்பிரின்[Aspirin] மாத்திரையைப் பற்றி ஒரு வார்த்தை.

ப்ளேட்லெட்டுகள் ரத்தம் உறைவதற்கு மிகவும் தேவையான ஒன்று.

ஒரு காயம் ஏற்பட்டு ரத்தப்போக்கு தொடங்கும் போது, இந்தப் ப்ளேட்லெட்டுகள் அதிகமாகி, ரத்தம் உறைய உதவுகிறது.

ஆஸ்பிரின் இந்த செயலைத் தடுக்கிறது.

இது இருவகைகளில் செயல்படுகிறது!

ரத்தம் உறையக்கூடாத நிலையில் இருக்க வேண்டிய இதய நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம்!

ஆனால், உறைகாரணிக் குறைபாடு இருப்பவர்களுக்கு இது ஒரு ஆட்கொல்லி!

இதில், எல்லாவற்றையும் நான் சொல்லவில்லை.....

மேற்கொண்டு அதிக விவரம் வேண்டுவோர், பின்னூட்டத்தில் கேட்கவும்.

9 Comments:

At 7:03 PM, Blogger வடுவூர் குமார் said...

உறைகாரணி 8 செயற்கையாக உடலுள்ளே செலுத்தப்பட்டு, இக் குறைபாடைத் தவிர்க்க முடியும்.
ஒரு தடவை செலுத்தினாலே போதுமா? அல்லது எப்போதெல்லாம் இரத்தம் உறைய மறுக்கிறதோ அப்போதெல்லாம் செலுத்த வேண்டுமா?
மாத்திரைகள் மூலம் இதை எப்போதும் சம நிலையில் வைக்கமுடியாதா?

 
At 7:09 PM, Blogger கோவி.கண்ணன் said...

பதிவு ரொம்ப கெமிஸ்டிரியாக இருக்கு.

நான் கூட தினமும் ஒரு ஆஸ்பிரின் எடுத்துக் கொள்கிறேன்
:)

 
At 8:00 PM, Blogger VSK said...

தொடர்ந்து மருந்து மாத்திரகள் சாப்பிடாவும் வேண்டும்.

ஒரு நிகழ்வின் போது அவசர ஊசியும் போட வேண்டும்.

சமநிலையில் வைப்பது இயலாது, திரு.குமார்.

 
At 8:01 PM, Blogger VSK said...

ஆமாங்க, கோவியாரே!.

இன்னும் சொன்னா பையோகெமிஸ்ட்ரியாப் போயிடும்னுதான் சுருக்கமாகச் சொன்னேன்!
:))

 
At 11:55 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

போன பதிவும் சரி, இந்தப் பதிவும் சரி, புரிந்து கொள்ள கொஞ்சம் கஷ்டமாகவே இருக்கிறது. பொதுவாக கடினமான விபரங்களைக்கூட உங்கள் எழுத்து எளிமையாகச் சொல்லும். இது அப்படி இல்லையோ எனத் தோன்றுகிறது. ஒரு வேளை நான் பாதி ராத்திரியில் எழுந்து படிப்பதால் கூட இருக்கலாமோ என்னவோ.

//வான் வில்லி ப்ராண்ட் காரணி// - இதுதான் ஆதி காரணியா?

//உறைகாரணிகள்[Clotting Factors] 10, எனச் சொன்னேன் முன் பதிவில்!//

//இப்போது உறைகாரணிகளைப்[Clotting Factors] பார்க்கலாம்.

இவை மொத்தம் 12 வகைப்படும்,//

10ஆ 12ஆ?

வேறு வேறு சமயங்களில் தேவையான உறைகாரணி செயலாற்றி ரத்தப் போக்கைத் தடுக்குமா? அல்லது எப்பொழுதுமே எல்லா உறைகாரணிகளும் தேவையா?

 
At 3:41 AM, Blogger VSK said...

ரத்தம் உறைகிறது.

எப்படி உறைகிறது என்பது முழுக்க முழுக்க ஒரு கெமீஸ்ட்ரி சம்பந்தப்பட்ட விஷயம்.

மேலும், இது தவிர்க்கக்கூடிய ஒன்றும் அல்ல.

பரம்ப்ரையாக வருபவர்களுக்கு வந்ஹே தீரும்.

எனவே இப்படி ஒன்று இருப்பதைத் தெரிந்து கொண்டால் போதும் என நினைத்தேன்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஒரு சிலர் நம்மிடையே இருப்பார்கள்.
அவர்கல் வந்து கேட்டால் சொல்லலாம் என இருக்கிறேன்.
நன்றி, கொத்தனாரே!

 
At 12:47 PM, Blogger VSK said...

இப்போதுதான் கவனித்தேன், கொத்ஸ், மேலும் சில கேள்விகள் கேட்டிருப்பதை.

//வான் வில்லி ப்ராண்ட் காரணி// - இதுதான் ஆதி காரணியா?//

ஆம். இதுதான் ரத்தம் உறைவதற்கு ஆதி காரணி.
இது செயலைத் துவங்கிய பின்னரே, உறைகாரணிகளான 12-ம் தங்கள் கடமையைச் செய்கின்றன.

//10ஆ 12ஆ? //

10 அல்ல; 12 என்பதை விளக்கியிருக்கிறேன்.

//வேறு வேறு சமயங்களில் தேவையான உறைகாரணி செயலாற்றி ரத்தப் போக்கைத் தடுக்குமா? அல்லது எப்பொழுதுமே எல்லா உறைகாரணிகளும் தேவையா? //

எப்போதுமே இந்த 1+12 தேவை, ரத்தம் உறைவதற்கு.

இவற்றில் சில உள்வழிப்பாதைக்கும், மற்றவை வெளிவழிப்பாதைக்கும் உதவுகின்றன.

வெளிக்காய இல்லாமல், உடம்பிற்குள்ளேயே ரத்தக்குழாய் உடையும் போது ரத்தம் உறைய சில காரணிகள்.

இவையே வெளிக்காயத்தின் வழியே ரத்தம் வெளியேறும் பொழுது மீதி காரணிகள் வந்து வேலையைச் செய்கின்றன,

நடப்பதற்கு கால்கள் வேண்டும்.
வீட்டுக்குள்ளேயே நடக்க கால்களின் உதவி மட்டும் போதும்.

அதுவே, வெளியே செல்லும் போது, இக்கால்களில் செருப்பு அணிந்து செல்கிறோம்.

அது போல எனப் புரிந்து கொள்ளுங்கள்!

நன்றி, கொத்தனாரே!

 
At 2:40 PM, Blogger சேதுக்கரசி said...

உள்ளேன் ஐயா!

 
At 7:56 AM, Blogger Anbazhagan Ramalingam said...

may i know about factor XIII?

 

Post a Comment

<< Home