"பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்!" - 3
"பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்!" - 3
முந்தையப் பதிவு
வேந்தன் அரசு
கேள்வி:
குழாயை துண்டித்து விட்டால் விதையில் பிறக்கும் தலைபிரட்டைகளின கதி என்ன?
கசடற: இவை மீண்டும் ரத்தத்தில்[நேரடியாக அல்ல!] கலக்கின்றன. செயலிழந்த நிலையில்.
நன்றி... கேள்விக்கு!
கேள்வி: வேந்தன் அரசு
நன்றி
அறுபடாத குழாய் உள்ளவர்கள் பல நாள் வடிக்காமல் இருந்தால் இதே விளைவு உண்டா?
கசடற: இது குறித்து இன்னும் சில விளக்கங்கள்.
நம் உடலில் சுரக்கும் உமிழ்நீர், சிறுநீர் போல எப்போதுமே இந்த விந்து சுரப்பதில்லை.
இந்தச் சுரப்பியை உணர்வு பெற்று எழச் செய்யும் போது மட்டுமே, இந்த நாளங்கள் உந்தப்பட்டு, மற்ற சில கலவைகளோடு, விந்தணுவும் சேர்ந்து விந்து வெளிப்படுகிறது.
உடலுறவின் இறுதியிலோ, அல்லது சுய இன்பம் போன்ற செயல்பாடுகளாலோ, இந்த விந்து வெளிப்படுகிறது.
இந்த அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு, விந்தணு சுரப்பதில் ஒரு தடையும் இருப்பதில்லை.
விந்தோடு கலக்க உதவும், குழாய் துண்டிக்கப்படுவதால், இதன் கலப்பு தடுக்கப்பட்டு, விந்தணு இல்லாத விந்து வெளியேறுகிறது.
வெளியேற முடியாத விந்தணு ரத்தத்தோடு கலக்கிறது.
---------------------------
கேள்வி: ஆண்களுக்கு வரும் பால்வினை நோய் எதனால் வருகிறது என்று விளக்கமுடியுமா? அப்படியே அதை எப்படித் தவிர்க்கலாம் என்றும் விளக்குங்களேன்.
கசடற: ஆண்களுக்கு, பெண்களுக்கு எனப் பொதுவாக இல்லை எனினும், முக்கிய நோய்கள் அனைத்துமே இருபாலருக்கும் வரக்கூடும் என்றாலும், இந்தக் கேள்வியை மையமாகக் கொண்டு ஒரு சில முக்கியமான பால்வினை நோய்களை விளக்க முற்படுகிறேன்.
ஒரு டஃஜனும் மேற்பட்ட பால்வினை நோய்கள் இருக்கின்றன. இதில், குறிப்பாக ஒரு ஆறு நோய்கள் ஆண்களை வருத்தும். அவைகள் என்னவென்று பார்ப்போம்.
ஸிஃபிலிஸ் என்னும் மேகநோய்:
எய்ட்ஸ்/ ஹெச்.ஐ.வி
கொனோரியா என்னும் வெட்டைநோய்
க்ளமிடியா
ஹ்யூமன் பபில்லோ வைரஸ்
ஜெனிடல் ஹெர்பிஸ்
இதில் இந்த எய்ட்ஸ்/ ஹெச்.ஐ.வி பற்றி விவரமான பதிவு ஏற்கெனவே போட்டிருக்கிறேன்.
மற்ற நோய்களைப் பற்றி ஒரு சுருக்கமான வரைவு.
கொனோரியா என்னும் வெட்டைநோய்:
சிறுநீர் வழியே ஒரு வெள்ளை நிற திரவம் வடிவது, சிறுநீர் கழிக்கும் போது வரும் எரிச்சலும் இந்நோயின் அறிகுறிகள்.
இது ஆண்மை இழப்புக்கும் வழி வகுக்கும்... சரியான சிகிச்சை எடுக்காவிட்டால்.
இந்நோய் இருப்பவருடன் உடலுறவு கொள்வதால் இது வருகிறது.
உடலின் பல பாகங்களை இது பாதிக்கும்.
எலும்பு நோய்[], கண்பார்வை பாதிப்பு போல பல மோசமான விளைவுகளை இது ஏற்படுத்தும் என்பதால் இந்த நோயின் அறிகுறி கண்டவுடனேயே சிகிச்சை எடுப்பது நல்லது.
ஒரு சில எளிய மருந்துகள் மூலம் இதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும். கவனம்!
"க்ளமைடியா"
இந்த நோய் வந்ததின் அறிகுறிகளே தெரியாமல் இருப்பதுதான் இதன் சிறப்பு !
தனக்கு இது வந்ததே தெரியாமல் மற்றவருக்கும் பரப்பப்படும் நோய் இது.
எரிச்சல், விரை வீங்குதல் போன்ற அறிகுறிகள் இதற்கு.
ஹெர்பிஸ் சிம்ப்லெக்ஸ் வைரஸ்[2]:
ஆணுறுப்பில் சில புண்களை உண்டாக்கும் இந்த நோய் கிட்டத்தட்ட ஸிஃபிலிஸ் என்னும் மேகநோய் பொன்ற தோற்றத்தை அளிக்கும்.
மருந்துகள் மூலம் குணமாக்கலாம் இதனை.
ஹ்யூமன் பாபில்லோ வைரஸ்:
ஆணுறுப்பு, ஆசன வாய், இன்னும் சில இடங்களில் ஒரு சில தழும்புகளை இது ஏற்படுத்தும். ஆண், பெண் இருவருக்கும் இது ஒருவர் மூலம் ஒருவருக்குத் தொற்றும்.
11 முதல் 12 வயதுக்குள் போட்டுக்கொள்ளும் ஊசியினால் இதைத் தவிர்க்க முடியும்.
ஸிஃபிலிஸ்:
தவிர்க்க முடியாது என்றாலும் குணப்படுத்த்க் கூடிய நோய்தான் இந்தக் கொடிய நோய். இது வந்தவருடன் கலப்பதால் இது வருகிறது.
ஆனால், சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால், இது ஆளையே இறுதிவரை துன்பப் படுத்தும் என்பதை மனதில் கொண்டு முறைய்யன சிகிச்சை மேஷ்ற்கொள்ள வேண்டும்.
ஆணுறுப்பில் ஒரே ஒரு புண் மட்டும் வந்து சில நாட்களில் மறைந்துவிடும்.
ஆனால், இந்தக் கிருமி உள்ளேயே இருந்துகொண்டு, பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
இதை மனதில் கொள்ளுங்கள்.
உரிய காலத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
அசட்டையாய் இருந்து விடாதீர்கள்.
கேள்வி: இதை எப்படி தவிர்ப்பது?
கசடற: 1. கட்டியவருக்கு உண்மையாய் இருங்கள்! 2. உங்கள் உறவைத் தவிர, மற்றவருடான உடலுறவைத் தவிருங்கள். 3. ஆணுறை உபயோகிங்கள்.
இந்த மூன்று செய்திகளை ஒரு மந்திரமாகப் பயன்படுத்துங்கள்!
உங்கள் வாழ்வு சிறக்கட்டும்.
வாழ்த்துகள்!
Labels: .vsk, kasadara, Q and A on sexology
17 Comments:
பால்வினை நோய்கள் அனைத்துமே தொற்று நோய்வகையைச் சார்ந்தாகவே இருக்கிறது.
மற்ற உயிரினங்களில் இல்லாத ஒன்றுதானே இவை ?
மனிதனுக்கு ஒழுக்கத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க ஏற்பட்ட இயற்கை அமைப்பு என்று இதனை சொல்லிவிடலாமா ?
எவ்வளவு சரியாக அவதானித்திருக்கிறீர்கள் கோவியாரே!
மிகச் சரியான கருத்து இது.
நன்றி பல!
விளக்கங்கள் நன்றாக இருந்தது.
நன்றி, திரு.குமார்!
///மற்ற உயிரினங்களில் இல்லாத ஒன்றுதானே இவை ?//
குரங்குகளிலிருந்துதான் இந்த ஹெச்.ஐ.வி. வந்தது என்பதை மறந்துவிடாதீர்கள் கோவியாரே!
தனிமனித ஒழுக்கம் தேவை என்ற உங்கள் கருத்தோடு ஒன்றுகிறேன்.
thani manudha ozhukkam, kaalathukku, idathukku erpa maarubadum!
ellaarume nallavanaa irukkanumnu dhaan nenekkirom, aanaalum sila samayam thavaru nadappadhu sagajam!
//thani manudha ozhukkam, kaalathukku, idathukku erpa maarubadum!
ellaarume nallavanaa irukkanumnu dhaan nenekkirom, aanaalum sila samayam thavaru nadappadhu sagajam!//
ஒப்புக் கொள்கிறேன் அனானி ! இருக்க முயலுவோம்; தவறு நடந்துவிட்டால், தவறாமல் சிகிச்சை எடுத்துக் கொள்ளுவோம்.
விஎஸ்கே ஐயா,
வலது பக்க testisஇல், சிறு கரும் புள்ளியாக ஆரம்பித்து, இரு நாட்களுக்குள் கொஞ்சம் பரவி விட்டது. இப்போது அது சிவப்பும் வெள்ளையும் நிறமாக மாறிவிட்டது. மருத்துவரிடம் கேட்டபோது இது ஹெர்பிஸ் என்றும், உடலுறவு கொள்வதால் பரவும் என்றும் சொன்னார்.(மருத்துவர் எந்தவித சோதனையும் செய்யவில்லை..மேலும் 2 மருத்துவர்களிடமும் கேட்டுவிட்டேன்.. அவர்களும் ஹெர்பிஸாக இருக்கலாம் என்று சொல்கிறார்கள், ஆனால் எந்த சோதனையும் செய்யவில்லை)
ஆனால், நான் இதுவரை எந்தவிதத்திலும் யாருடனும் உடலுறவு கொண்டதில்லை..வேறு வகையில் வர வாய்ப்பு இருக்கிறதா?
இதை முழுமையாகக் குணப்படுத்த முடியுமா?
நான் இன்னும் 2 வருடங்களுக்குத் திருமணம் செய்யப்போவதில்லை. அதற்குப் பின் திருமணம் செய்துகொள்ளலாமா?
இதனால் கொஞ்சம் மனஉளைச்சல் அதிகமாக இருக்கிறது.. இது மிகவும் கவலைப்படவேண்டிய விசயமா?
முடிந்தவரை விரைவில் பதிலளிக்கவும்...
நன்றி...
அன்புள்ள அனானியாரே!,
உங்கள் கேள்விக்கான பதிலை தனிப்பதிவாக இட்டிருக்கிறேன். பாருங்கள். நன்றி.
http://kasadara.blogspot.com/2008/08/4.html
15 ஆவது வயதில் எனக்கும் இது போல ஒரு பிரச்சினை வந்தது. நான் அப்போதுதான் உள்ளாடைகள் அணியவே ஆரம்பித்திருந்தேன். நான் அப்போது பள்ளி விடுதியில் இருந்தாலும், விடுதியின் சுகாதாரக் குறைவு காரணாமாக வந்திருக்குமா என்று தெரியவில்லை. விடுதியில் சேர்ந்த புதிதில் இல்லாமல், சில மாதங்கள் கழித்த பின்னரே இந்த பிரச்சினை வந்தது. விரைப்பையின் மேல் தோலின் மீது பருக்கள் போல சலத்துடன் இருந்தது. வலி எதுவும் இல்லை, ஆனால் ஒரே அரிப்பு. வீட்டில் கூட சொல்ல வில்லை. ஓரிரு மாதங்கள் இப்படி இருந்தது, பின் அதுவாகவே சரியாகி விட்டது.
suya inbam thinamum anubavippathu sariya thavara aiya...
enakum viraipaiyin tholil siru parukkal irukinrana. Ithai veru yaaridam sollavum thayakamaga ullathu. Enaku itharkaana sariyana kaaranathai solungalaen...
//suya inbam thinamum anubavippathu sariya thavara aiya...
enakum viraipaiyin tholil siru parukkal irukinrana. Ithai veru yaaridam sollavum thayakamaga ullathu. Enaku itharkaana sariyana kaaranathai solungalaen...//
தேவையில்லாமல் சக்தி வீணாகிறதே என்பதைத் தவிர, சுய இன்பம் அனுபவிப்பதால் வேறொன்றும் பிழை இல்லை. இருப்பினும் தவிர்ப்பது நல்லது. சக்தியில்லா உடலில் சுரக்கப்போகும் விந்துவின் வீரியம் குறையும் அபாயம் இருப்பதால், திருமணமானபின்னர், குழந்தையை உருவாக்குவதில் சிரமம் ஏற்படலாம்.
விரைப்பையின் தோலில் பருக்கள் இருப்பது பல காரணங்களால் வரக்கூடும். வெளியுறவு, முடி வளரும் மயிர்க்காலில் ஏற்படும் சில உபாதைகள், அதிகமான வியர்வை சுரப்பதால் ஏற்படும் அரிப்பு என பல காரணங்கள் உண்டு.
ஒரு மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெறவும்.
நன்றி.
suya inbam athigama panna enna agum?
இளம் வயதில் இப்படிச் செய்வதால் பெரிதுமாக ஒன்றும் நேராது. ஆனால், நரம்பியல் அழுத்தம், தளர்ச்சி, போன்றவை வரும் வாய்ப்புகள் உண்டு. தானாக வெளியேறுவதில் தவறில்லை. ஆனால், தானே இப்படிச் செய்வது ஒருவகையில் மனக் கட்டுப்பாடு சம்பந்தப்பட்டது என்பதால், இதனைக் குறைத்துக் கொள்வது நல்லது. உடலின் சக்தியை விரயமாகுவானேன்? [இதற்கு முன்பு ஒரு அன்பர் கேட்ட கேள்விக்கான பதிலையும் படிக்கவும்!:)
suya inbam panni ethana varudathuku apparam nerambu thalarche varum ? nerambu thalarche antha mathiri vanthathuku apparam suya inbam pandratha vittuta nerambu thalarche athuva seri ayduma marunthu ethuvum sapdama?
nan 10 years suya inbam seigiren ipavum seigiren ennala atha control panna mudiyala enaku payamaga irukirathu..kai kal nadungukirathu innum 3 yearla ennaku marrieage pannuvanga appo ethavathu problem varuma en vinthu kurainthu viduma naan ippa enna pandrathu
5 vayadu pen kuzhandai suya inbam kolla mudiyuma? mudiyum endral eppadi thavirpadu.. suya inbam thavarillai enabdu theriyum. analum miga siriya vayadil inda palakam sariyanadu illai endru ninaikiren.. ungalin karuthu enna? sariyana arivurai kooravum. plz..
Post a Comment
<< Home