"கசடற"

அறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன். முழுக்க முழுக்க இவை என் கருத்துகள் மட்டுமே! முருகனருள் முன்னிற்கும்!

Monday, March 24, 2008

" எய்ட்ஸுக்கே உதவியா"? [1]



" எய்ட்ஸுக்கே உதவியா"? [1]

அன்று 'வலென்ட்டைன்' தினம்! அதாங்க! காதலர் தினம்னு அவங்கவங்க சொல்லிகிட்டு இருக்காங்களே... அதேதாங்க... !

எனது ஒரு சில பதிவுகளில் நான் எழுதிய என் கவிதைகளையும்[???] கருத்துகளையும் படித்த என் மனைவி என்னிடம் சொன்னார்!

'ஏங்க! உங்களுக்கு வேற வேலை இல்லியா? நீங்க ஒரு டாக்டர்தானே! அது சம்பந்தமா எதுனாச்சும் எழுதக் கூடாதா?'

'என்ன? இப்ப பாலியல் கல்வி - பெற்றோருக்கு' ன்னு ஒண்ணு எழுதினேனே! போறாதா?' என அப்பாவியாய்க் கேட்டேன்!

'ம்க்கும்! நீங்கதான் மெச்சிக்கணும்!அதை எழுதி கிட்டத்தட்ட ஒன்பது மாசம் ஆகப் போகுது! "நான் தான் அதைப் பெத்தாச்சே, எதுக்குப் படிக்கணும்"னு யாரும் அங்கே வர்றதில்லை! நீங்க வேற ஏதாவது எழுதுங்க! இந்த 'ஹோமோஸெக்ஷுவாலிடி'.. ஓ.. இங்கே தமிழ்ல தான் பேசணும்ல!... ஓரினச் சேர்க்கையாலத்தான் எய்ட்ஸ் அதிகமா பரவுதுன்னு சொல்றாங்களே! அதைப் பத்தி எழுதுங்க. புரிஞ்சுக்கறவங்க புரிஞ்சுக்கட்டும்!"

என் ஞானக்கண்[!!!] திறந்தது!

இதோ, உங்களை எல்லாம் அடுத்த சில நாட்களுக்கு தொல்லை பண்ண முடிவு செய்து................எப்படி இதைத் தொடங்கலாம் என !யோசித்துக் கொண்டிருந்தேன்!

அப்பத்தான் வந்தான் என் நண்பன் சுகுமார்!

"டேய்! எய்ட்ஸுன்னா என்ன? எப்படி வருது? இதுக்கு என்ன அறிகுறிங்க? எப்படி கண்டுபிடிப்பது? இதுக்கு என்ன சிகிச்சை செய்வது? இதுனால என்ன ஆகும்? இதைப் பத்தி ஆளாளுக்கு என்னமோ சொல்றாங்களே அதெல்லாம் உண்மையா பொய்யா? நீதான் டாக்டராச்சே! எனக்கு இப்ப இந்த உண்மை தெரிஞ்சாகணும்" என ஓடி வந்தான்!

"ஏண்டா! எதுனாச்சும் ஏடாகூடமா செஞ்சுட்டியா? சொல்லுடா" என அதட்டினேன்!

"அதெல்லாம் இல்லைடா! இதையெல்லாம் பத்தி தெரிஞ்சுக்கணும்னு ரொம்ப நாளா ஆசை. தப்புத்தண்டா பண்ணாம இருக்கறதுக்காகத்தான்! அதான் கேட்டேன்," என சிரித்தான்!

"சரி! அப்போ, நீ கேள்விகளாக் கேளு. நான் சொல்றேன்" என்றேன், ஒரு வழி கிடைத்த நிம்மதியுடன்!!

இதோ! அவன் கேள்விகளும், என் பதிலும்!

"எய்ட்ஸ்"ன்னா என்ன?

அக்வைர்ட் இம்யோனோ டிஃபிஷியென்ஸி ஸிண்ட்ரோம் [Acquired Immuno Deficiciency Syndrome]] இதுதாங்க எய்ட்ஸ்[AIDS] அப்பிடீன்னு சொல்லப் படுவது! அதாவது, 'தானே வரவழைத்துக் கொண்ட தன்னெதிர்ப்புக் குறைவை விளைவிக்கும் அறிகுறிகளைக் கொண்ட ஒரு நோய்' என தமிழில் விளக்கலாம்!
இந்தப் பெயர், ஒரு மருத்துவரால் ஒரு சில அறிகுறிகளாலுமோ, அல்லது சில பரிசோதனைகள் மூலமோ
அறியப்படுவதுன்னு மட்டும் இப்போதைக்குப் புரிஞ்சுக்கோ!


'இது எப்படித்தான் வருது?'

ஹெச்.ஐ.வி. வைரஸ்[HIV Virus], அதாவது, ஹ்யூமோஇம்யூனோ டிஃபிஷியென்ஸி வைரஸ் [Human Immuno Deficiency Virus] என்னும் ஒன்றால் இந்த நோய் வருகிறது.

'வாங்க சுகுமார்! வீட்ல எல்லாரும் நலமா?" எனச் சொல்லியபடி தேநீருடன் சுகுமாரை வரவேற்றவர், என்னருகில் வந்து, 'ஐயோ! இது எல்லாருக்கும் தெரியுங்க! இது எப்படி பரவுகிறதுன்னு சொல்லுங்க சாமி!' என முறைத்தார்!

'சொல்லத்தானே போறேன்! அதுக்குள்ள ஏன் இப்படி தொணதொணக்கற? சுகுமார் இன்னும் கொஞ்ச நேரம் இங்கதான் இருப்பான்.நீ போய் சமையலைக் கவனி' என அவரை ஒருமாதிரியா சமாளிச்சேன்!

"நீ கேளு சுகுமார்! இதனால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த நோயை, ரத்தமும் ரத்தமும் கலப்பதின் மூலமாகவோ, அல்லது பாலியல் மூலமாகவோ.... அதாவது, உடலுறவின் மூலமாகவோதான் பெறுகிறார்கள்! ஒரு தாய் தனது குழந்தைக்கும் இதைத் தர முடியும்.... கருவுற்றிருக்கும் போதோ அல்லது தாய்ப்பாலைத் தரும்போதோ! இந்த நோயைப் பெற்றவர்கள் சிறிது காலத்தில் எய்ட்ஸ் என்னு நிலையை அடைகிறார்கள் என்பதே நடப்பு!' என்றேன்.

[தொடரும்]
*************************************

Labels: ,

13 Comments:

At 3:48 PM, Blogger VSK said...

test!

 
At 5:24 PM, Blogger கோவி.கண்ணன் said...

புதுத் தொடர்...

தவிர்க்க முடியாமல் ஒழுக்கம் தவறும் நேரத்தில் தவிர்க்கக் கூடாதது பற்றிச் சொல்லப் போகிறீர்கள்.

காண்டம் தவிர்த்தால் கண்டம் !

இனி நீங்க என்ன சொல்லப்போறிங்க பார்போம்.

 
At 6:55 PM, Blogger VSK said...

"காண்டம் தவிர்த்தால் கண்டம்"!!

நான் வைத்திருந்த ஒரு தலைப்பைத் திருடியதற்கு கண்டனம்!
:))))))))
நன்றி கோவியாரே!

 
At 7:29 PM, Blogger வடுவூர் குமார் said...

ஆஹா! புதிய தலைப்பா?
நன்றி உங்கள் மனைவிக்கு..
இதிலும் சந்தேகம் இருக்கு,பதில் வரும் பதிவுகளில் விட்டுப்போனால்,கேட்கிறேன்.

 
At 8:13 PM, Blogger VSK said...

மறக்காமல் கேளுங்க திரு.குமார்

அநேகமா எல்லாம் சொல்லிருவேன்னு நினைக்கிறேன்!
நன்றி.

 
At 8:27 PM, Blogger துளசி கோபால் said...

அப்ப நன்றியை ம.பா. அவர்களுக்குத்தான் சொல்லணும்:-)))

 
At 8:38 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

இப்போதைக்கு உள்ளேன் ஐயா.

 
At 6:12 AM, Blogger Unknown said...

நல்ல பயனுள்ள பதிவுகளை ஒரு சிலர்தான் எழுத முடியும். அழகான தொடக்கம்.

 
At 6:37 AM, Blogger VSK said...

சொல்லிகிட்டேதானே இருக்கேன்... தினமும்!:))
வாங்க டீச்சர்!

 
At 6:38 AM, Blogger VSK said...

நீங்க எப்பவுமே உள்ளவர்தானே கொத்ஸ்!:))

 
At 6:40 AM, Blogger VSK said...

//சுல்தான் said...
நல்ல பயனுள்ள பதிவுகளை ஒரு சிலர்தான் எழுத முடியும். அழகான தொடக்கம்.//

தொடர்ந்து காட்டிவரும் அன்புக்கு நன்றி நண்பரே!

 
At 9:00 AM, Blogger கோவி.கண்ணன் said...

//At 6:38 AM, VSK said...
நீங்க எப்பவுமே உள்ளவர்தானே கொத்ஸ்!:))
//

இப்படியா, தந்திரமாக சிறைபிடிப்பது ?

 
At 6:52 AM, Blogger குமரன் (Kumaran) said...

தாய் கருவுற்றிருக்கும் போது எய்ட்ஸ் நோயைப் பிள்ளைக்குத் தரமுடியும் என்று முன்பே அறிந்திருந்தேன் எஸ்.கே. தாய்ப்பாலின் வழியாகவும் பரவும் என்பது புதிய செய்தி.

 

Post a Comment

<< Home