"லப் - டப்" -- 3
"லப் - டப்" -- 3
"என்ன சத்தம் இந்த நேரம்!"
இதயத்தின் நான்கு அறைகள் இயங்கும் விதத்தையும், அவற்றின் மூலம் ரத்தம் உடலெங்கும் போய்த் திரும்புவதையும் சென்ற பதிவில் பார்த்தோம்!
பொன்ஸ் சொன்ன இதயத் தாக்குதலைப் [Heart attack] பற்றி எழுதவே இத்தொடரை ஆரம்பித்தேன்.
இப்போது இதைப் படிக்கும் வாசகர்கள் காட்டும் ஆர்வத்தைப் பார்க்கையில் இன்னும் கொஞ்சம் இதயம், ரத்தம், ரத்தக் குழாய்கள் இவற்றைப் பற்றிச் சொல்லிவிட்டு பிறகு இதயத்தைப் பாதிக்கும் நிகழ்வுகளைச் சொல்லலாம் என நினைக்கிறேன்.
கிட்டத்தட்ட இதயத்தைப் பற்றிய எல்லா விஷயங்களையும் இதன் மூலம் நாம் பார்க்கலாம்.
இது உங்களுக்குச் சம்மதமெனில் சொல்லவும்.
இல்லையேல், சுருக்கமாகச் சொல்லி உங்கள் நேரத்தைக் காக்கிறேன்!!
இது பற்றி உங்கள் மேலான கருத்தை எதிர்பார்க்கிறேன்.
பீடிகையை முடித்துவிட்டு பதிவுக்குள் செல்லலாம்!
இன்று இதயத்தின் சத்தம், அந்தத் துடிப்பு Heart Beat] எப்படி நிகழ்கிறது என்பதை இன்று பார்க்கலாம்.
ஆரிக்கிள்கள், வெண்ட்ரிக்கிள்கள் தனித்தனியே இயங்குகிறது எனச் சொன்னேன்.
ஆனால், இவை இரண்டின் இயக்கமும் ஒருங்கே [Simultaneously] நிகழ்கிறது.
அதாவது வலது ஆரிக்கிள், வெண்ட்ரிக்கிள் இரண்டும் ஒரே நேரத்திலும், இடது ஆரிக்கிள், வெண்ட்ரிக்கிள் இரண்டும் ஒரே நேரத்திலும் சுருங்கியும், விரிந்தும் ரத்தத்தை இதயத்துக்குள் பரிமாறிக் கொள்கின்றன.
இவை நிகழ்வது ஒரு மின்சார அதிர்வினால், இயக்கத்தால் [Electrical Impulses]!
ஆமாங்க, மின்சாரம் என்ற ஒன்றை நம் கண்டுபிடிக்கும் முன்னரே, நான் வணங்கும் இறையோ, அல்லது மற்றவர் சொல்லும் இயற்கையோ, இதை நம் உடலில் பல இடங்களில் வைத்திருக்கிறது என்பதே உண்மை!!
இது ஒரு தனி வழிப்பாதை [Special Pathway] மூலம் இதயத்தில் நிகழ்வதால், இதயத் துடிப்பு என்ற ஒன்று நடக்கிறது.
1. ஸைனோ-அயோர்டிக் நோட் [Sino-Aortic Node, SA node ] :
இதை இதயத்தின் தொடக்க ஆட்டக்காரர் [Pace maker] என அழைக்கலாம்!
வலது ஆரிக்கிளில் இருக்கும் ஒரு விசேஷ செல்களின் [Specialized cells] கூட்டமைப்பில் இருந்தது இது துவங்குகிறது.
இவை அனைத்தும் சேர்ந்து கொடுக்கும் அதிர்வினால், வலது, இடது ஆரிக்கிளின் சுருக்கம் ஏற்படுகிறது.
இதன் மூலம், ரத்தம் வெண்ட்ரிக்கிள்களுக்கு அனுப்பப் படுகிறது.
இந்த எஸ்.ஏ. நோடுதான் [SA node] இதயத் துடிப்பின் அளவையும் [rate] தரத்தையும் [rhythm] நிர்ணயிக்கிறது.
எஸ்.ஏ.நோட் ஒழுங்காக இந்த மின்சார அதிர்வை அனுப்பும் இதயத்தை "ஒழுங்காக இயங்கும் இதயம்" [Normally functioning heart]என அழைக்கிறோம்.
2. ஏட்ரியோ-வெண்ட்ரிகுலர் நோட் [Atrio-ventricular node, AV Node] :
ஆரிக்கிளுக்கும், வெண்ட்ரிக்கிளுக்கும் இடையே இருக்கும் ஒரு கூட்டு செல்களே ஏ.வி நோட் [AV Node] என அழைக்கப்படுகிறது.
இதன் வேலை எஸ்.ஏ.நோடின் அளவைத் தரப்படுத்தி [collect®ularize] வெண்ட்ரிக்கிளுக்கு அனுப்ப்வது.
இந்த தாமதம் [delay] ஆரிக்கிளுக்கு ஒரு சிறிய அவகாச முன்னோடியைக் [delay advantage] கொடுக்கிறது, வெண்ட்ரிக்கிள்கள் சுருங்குவதற்கு முன்!
3. ஹிஸ்-பர்கிஞ்ஜி அமைப்பு [His-Purkinje Network]:
இவை ஒரு கூட்டான இழைகள்[fibres]. வலது, இடது வெண்ட்ரிக்கிள்களின் உட்சுவர்களில் ஊடுருவி இருப்பவை. இவை அனைத்தும் சேர்ந்து இயங்கும் போது வெண்ட்ரிக்கிள் இரண்டும் சுருங்கி ரத்தத்தை நுரையீரலுக்கும், உடலின் பல பாகங்களுக்கும், அனுப்ப முடிகிறது.
4. இது நிகழ்ந்து முடிந்ததும், மீண்டும் அடுத்த அதிர்வை எஸ்.ஏ.நோட் அனுப்புகிறது.
இப்படித்தான் இதயத் துடிப்பு நிகழ்கிறது.
சாதாரணமாக, ஒரு நிமிடத்திற்கு 50 முதல் 90 வரை இதயத் துடிப்பு நிகழலாம்.
உடற்பயிற்சி,[exercise] உணர்ச்சி மிகுதி [emotions] ,காய்ச்சல் [fever] போன்ற நேரங்களில் இது அதிகமோ. குறைவோ படும்.
மேலே சொன்னது ஒரு இதயத் துடிப்பைப் பற்றி!
ஆனால், இதுவல்ல நாம் கேட்கும் லப் டப்!!
அது என்ன?
ஆரிக்கிள்களுக்கும், வெண்ட்ரிகிள்களுக்கும் இடையே வலது, இடது பக்கங்களில் தனித்தனி வால்வுகள் இருப்பதைப் பார்த்தோம்!
வலது, இடது ஆரிக்கிள்கள் முழுதும் சுருங்கி, ரத்தத்தை வலது, இடது வெண்ட்ரிக்கிளுக்குள் அனுப்பிய , வெண்ட்ரிகிள்கள் முழுதும் நிரம்பிய,... இன்னும் பல்மோனிக், அயோர்டிக் வால்வுகள் [pulmonic, aortic valves] திறக்காத... நிலையில், ட்ரைகஸ்பிட், மற்றும் மைட்ரல் வால்வுகள் [tricuspid, mitral valves] மேல் நோக்கி 'சட்டென்று' மூடி ஆரிக்கிள், வெண்ட்ரிகிள்களுக்கிடையே ரத்த ஓட்டத்தை நிறுத்தும் ஒலியே "லப்"[lub]!
அதே போல, வெண்ட்ரிக்கிள்கள் சுருங்கி முறையே, நுரையீரலுக்கும், உடலுக்கும் ரத்தத்தை அனுப்பியபின், இன்னும் மேலே சொன்ன வால்வுகள் மூடிய நிலையில், வெண்ட்ரிக்கிளுக்குள் ரத்த அழுத்தம் குறைவதால், பல்மோனிக், அயோர்டிக் வால்வுகள் [pulmonic, aortic valves] 'டப்'[dub] என்று மூடிக் கொள்கின்றன!
இதயம் துடிப்பதை ஒரு மருத்துவர் ஸ்டெதாஸ்கோபின் மூலம் இடது பக்க மார்பில் கேட்பதைப் பார்த்திருப்பீர்கள்.
ஒரு நண்பர், "எங்கேயோ பார்த்துக் கொண்டு அலட்டலாக கையைப் பிடித்துப் பார்க்கிறாரே, அது எப்படி?" என ஒரு கேள்வி கேட்டிருந்தார்!!
தன் விரல்களை உள் மணிக்கட்டிற்கு சற்று மேலே, கட்டைவிரலின் அடிப்பாகத்தில், வைத்து ஒரு அதிர்வை "உணர்வதே" அது! அதான் 'அலட்டலாக' எங்கோ பார்க்கிறார்!
இதை நீங்களும் செய்யலாம்!
ஒரு பத்து நொடிகள் இந்த அதிர்வை எண்னவும்.
அதை ஆறால் பெருக்கினால், ஒரு நிமிடத்தில் எவ்வளவு முறை உங்கள் இதயம் துடிக்கிறது என்பதை அளவிட முடியும்.
சற்று உன்னிப்பாக உணர்ந்தால், இது ஒழுங்காக அடிக்கிறதா, இல்லையா என்பதைக் கூட உணர முடியும்!
அடுத்த பதிவு வரும் வரைக்குள்,...... சற்று முயலுங்கள்!!
:)
20 Comments:
எஸ்கே ஐயா,
படிக்க படிக்க திக் திக் .. டிக் டிக் பயனளிக்கும் தொடர் !
பாராட்டுக்கள் ஐயா !
பதிவில் சிறிதாகத் தெரியும் படத்தின் மீது 'கிளிக்'கினால், படத்தைப் பெரிதாகப் பார்க்கலாம்!!
எஸ் கே ஐயா
அருமையாக வந்திருக்கிறது.
எதையும் குறைக்காமல் போடவும்,தெரிந்துகொள்கிறோம்.
நன்றி
அவ்வளவு பயமாவா இருக்கு?
பாராட்டுக்கு நன்றி, கோவியாரே!
பயனுள்ள பகுதி எஸ்.கே சார்.
டொடரட்டும்.
அப்படியே, ஆரோக்கிய வாழ்கைக்கான வழியையும் அங்கங்க சைட்பார்ல சொல்லிடுங்க. (இதச் செய்யலாம், இத செய்யக்கூடாது, இத சாப்பிடலாம், இத தொடக்கூடாது, et.. ) -- ஓசி வைத்தியம் கேக்கரேன்னு நெனைக்க வேணாம் :)
btw, time இருக்கும்போது இங்க போய் உங்க கருத்த சொல்லிட்டு வந்தீங்கன்னா நல்லது http://valai.blogspirit.com/archive/2006/12/17/santhi.html
//கிட்டத்தட்ட இதயத்தைப் பற்றிய எல்லா விஷயங்களையும் இதன் மூலம் நாம் பார்க்கலாம்.
இது உங்களுக்குச் சம்மதமெனில் சொல்லவும்.//
தொடர் ரொம்ப பெரிசா போகுமுன்னு பயமா? போகட்டும் ஐயா. உங்க இதயம் பெருசு அப்படின்னு சொல்லிட்டு போறோம்!
கட்டாயம் எல்லா விவரங்களும் சொல்லுங்க, கேட்டுக்கறோம். ரொம்ப உபயோகமான தகவல்கள் இல்லையா?
//ஆரோக்கிய வாழ்கைக்கான வழியையும் அங்கங்க சைட்பார்ல சொல்லிடுங்க.//
இப்போ இதுவரைக்கும், இதயத்தின் செயல்பாடுகள் பற்றித்தான் பார்த்து வருகிறோம்.
இதய நோய்கள் பற்றி வரும்போது, எனக்குத் தெரிந்த ஆலோசனைகள் கண்டிப்பாக வரும்.
உங்கள் பதிவை முன்னமேயே பார்த்து விட்டேன், திரு. சிந்தாநதி!
இது பற்றி விரைவில் எழுதுகிறேன், அங்கேயே வந்து!
// SK said...
அவ்வளவு பயமாவா இருக்கு?
பாராட்டுக்கு நன்றி, கோவியாரே!
//
ஆமாம் என்ன சாதாரணமாக எடுத்துக் கொள்கிறாய் என்று கேட்டு இதயம் ஸ்ட்ரைக் பண்ணிவிட்டால் என்ன செய்றது ?
:)
//இதயம் ஸ்ட்ரைக் பண்ணிவிட்டால் என்ன செய்றது ?//
அப்படியெல்லாம் ஸ்ட்ரைக் பண்ணாதுங்க இதயம்!
நீங்க அதுக்கு எதனாச்சும் தப்பா பண்ணினாத்தான் உண்டு!
இப்படி காரணமின்றி பயப்படுவது கூட அது போன்ற ஒரு தப்பான காரியமே!
:))
கருத்துக்கு நன்றி, கொத்ஸ்!
முடிந்தவரை விவரமாகச் சொல்லி விடலாம், சரிதானே!
:))
எஸ்கே சார்,
கண்டிப்பாக நிறைய தகவல்கள் வேண்டும்.
இது ஒரு பரம்பரையாகத் தொடருமா.
ஜீன்ஸ் சம்பந்தப் பட்டதா.
என்று பல கேள்விகள் எனக்கு உண்டு.
மிகவும் நன்றி.
//இது ஒரு பரம்பரையாகத் தொடருமா.
ஜீன்ஸ் சம்பந்தப் பட்டதா.//
"இது" என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள், வல்லியம்மா?
//இது உங்களுக்குச் சம்மதமெனில் சொல்லவும்.//
நிச்சயமாக!
//நிச்சயமாக!//
:))
நன்றி!
//இப்போது இதைப் படிக்கும் வாசகர்கள் காட்டும் ஆர்வத்தைப் பார்க்கையில் இன்னும் கொஞ்சம் இதயம், ரத்தம், ரத்தக் குழாய்கள் இவற்றைப் பற்றிச் சொல்லிவிட்டு பிறகு இதயத்தைப் பாதிக்கும் நிகழ்வுகளைச் சொல்லலாம் என நினைக்கிறேன்.//
இன்னும் கொஞ்சம் என்ன,நிறையவே சொல்லுங்கள்..
//இவை நிகழ்வது ஒரு மின்சார அதிர்வினால், இயக்கத்தால் [Electrical Impulses]!//
first time i am hearing..
so அப்படினா நம்ப எல்லாருமே
மின்சார கண்ணா வா..
மின்சாரக் கண்ணா இல்லை!
மின்சர இதயம்!
ஐயா,
இந்த பகுதி ரொம்ப சுவராசியமா இருக்கு.... இன்னும் படிக்க ஆர்வம் கூடுது.
கச்சேரி ரொம்ப நல்லா போகுது எஸ்.கே. தொடருங்கள்.
லப் டப் பற்றி இப்போது அறிந்து கொண்டேன்.
கச்சேரி நாலாவது பாட்டுக்குப் போயாகிவிட்டது!
அங்கே வந்து, உங்கள் கருத்தைச் சொல்லலாமே, குமரன்!
வணக்கம்,
உங்களுடைய பதிவுகள் எல்லாம் நல்லம். ஆங்கிலத்தில் அதற்குறிய பெயர்களைக் குறிப்பிடுகிறீர்கள். அப்பொழுது அது எங்கே இருக்கிறது என காட்டினால் இன்னும் நல்லாயிருக்கும்.
நன்றி
Post a Comment
<< Home