"கசடற"

அறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன். முழுக்க முழுக்க இவை என் கருத்துகள் மட்டுமே! முருகனருள் முன்னிற்கும்!

Monday, December 04, 2006

லப்-டப்

"லப்-டப்"




பொன்ஸ் ஒரு அருமையான பதிவை தனது நட்சத்திர வாரத்தில் கொடுத்திருந்தார்.

ஹார்ட் அட்டாக்கிற்கும், கார்டியாக் அரெஸ்டிற்கும் என்ன வேறுபாடு என ஒரு கேள்வி அங்கு எழுந்தது.

அதற்கு பின்னூட்டம் இட்டபோது, இதைப் பற்றி ஒரு தனிப் பதிவு போடுவதாக சொல்லியிருந்தேன்.

அதைத் தொடர்ந்து இதயம் பற்றி எழுதலாம் என நினைத்து இந்தப் பதிவு.

இது ஒரு விரிவான பதிவல்ல.

சரி!

இதயம் என்பது என்ன?

எலும்புகளே இல்லாத ஒரு சதை உறுப்பு.

நான்கு அறைகள் கொண்டது.



[இது இதயத்தின் குறுக்குத் தோற்றம்.

உங்களுக்கு எதிர் தோற்றம் இது! உங்களது இடது, வலது அல்ல!

மேலே தெரியும் சிவப்பு பகுதி அயோர்டா எனப்படும் மஹாதமனியின் குறுக்கு வெட்டுத் தோற்றம்.

அதன் கீழே நீல நிறத்தில் காண்பது வலது ஆரிக்கிள், வென்ட்ரிக்கிள்.

சிவப்பு நிறத்தில் காண்பது இடது ஆரிக்கிள், வென்ட்ரிக்கிள்.

இடையில் திறந்து மூடும் வால்வுகளைக் காணலாம்.]

வலது, இடது ஆரிக்கிள்.[right and left auricle]

வலது, இடது வென்ட்ரிக்கிள்.[right and left ventricle]

வலது பக்கம் கெட்ட ரத்தத்தை வாங்குகிறது.
இடது பக்கம் நல்ல ரத்தத்தை அனுப்புகிறது.

வலது ஆரிக்கிள் கெட்ட ரத்தத்தை உடலின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் வாங்குகிறது.

அதை வலது வென்ட்ரிக்கிளுக்கு அனுப்புகிறது.

அங்கிருந்து அது நுரையீரலுக்கு அனுப்பி ரத்தம் சுத்திகரிக்கப் படுகிறது.

அங்கிருந்து அது இடது ஆரிக்கிளை அடைகிறது.

இடது ஆரிக்கிள் இந்த சுத்த ரத்தத்தை, இடது வென்ட்ரிக்கிளுக்கு அனுப்புகிறது.

இடது வென்ட்ரிக்கிள் அதை மீண்டும் உடலின் எல்லாப் பாகங்களுக்கும் அனுப்புகிறது.

இது எப்படி நிகழ்கிறது?

வலது ஆரிக்கிளின் மேல் பகுதியில் சைனோஏட்ரியல் நோட் [sino-atrial node] என ஒரு மின்சார அதிர்வை நிகழ்த்தும் உறுப்பு இருக்கிறது.

இதன் அதிர்வு, வலது ஆரிக்கிளின் கீழ்ப்பகுதியில் ஏட்ரியோ வென்ட்ரிக்கிள் நோட்[atrio-ventricle node] என்பதை "அவனுடைய கட்டுகள்" [Bundle of His] மூலம் அடைகிறது.

இந்த இடைவெளியில், ரத்தம் கீழ் வென்ட்ரிக்கிளை அடையும் நேரத்தில்தான் இதயத் துடிப்பு நிகழ்கிறது.

இதுதான் லப் டப்!

லப்!
இதயம் நிரம்புகிறது.

டப்!
இதயம் வெளியனுப்புகிறது.

இந்த இதயம் இவ்வாறு துடிப்பதற்கு, அது இயங்க வேண்டும்!

அதற்குத் தனியாக ரத்த நாளங்கள், இதயத்திற்குத் தேவையான ஆக்ஸிஜனை
அனுப்ப இருக்கின்றன.

இவற்றிற்கு கரோனரி நாளங்கள் [caronory arteries] எனப் பெயர்.

இவற்றில் ஏற்படும் கோளாறுகளால் இதயத் தாக்குதல் [heart attack] நிகழலாம்.

இது தவிர, ஆரிக்கிளுக்கும், வென்ட்ரிக்கிளுக்கும் இடையே, சில வால்வுகள் [valves] இருக்கின்றன.

மைட்ரல், ட்ரைகஸ்பிட் வால்வுகள்[mitral, tricuspid valves] ஆரிக்க்கிளிலிருந்து வென்ட்ரிக்கிளுக்கு ரத்தத்தை அனுப்ப வழி செய்கிறது.

அயோர்டிக், பல்மோனரி வால்வுகள் [aortic, pulmonary] ரத்தத்தை இதயத்திலிருந்து வெளியே அனுப்ப உதவுகின்றன.

இதில் ஏற்படும் கோளாறுகளாலும் இதயநோய் உ ண்டாகலாம்.

அடுத்த பதிவில் மேலே பார்க்கலாம்.



This information is provided for education purposes only and is not intended to replace the medical advice of your doctor or health care provider. Please consult your health care provider for advice about a specific medical condition.




53 Comments:

At 5:46 PM, Blogger வெற்றி said...

SK ஐயா,
மிகவும் பயனுள்ள பதிவு. படித்துப் பயனடைந்தேன். சகலரும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் எழுதியிருக்கிறீகள். நீங்கள் குறிப்பிட்ட உடற் பாகங்களின் படங்களும் இணைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன். மேலும் இது போன்ற பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
நன்றி.

 
At 5:47 PM, Blogger கோவி.கண்ணன் [GK] said...

எஸ்கே ஐயா,
சிலருக்கு இதயமே இல்லை என்கிறார்களே ?
அவர்களுக்கெல்லாம் ஹார்ட் அட்டாக் வராதா ?
:))

 
At 5:59 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

எனக்கு புரிஞ்சது சரியான்னு கன்பர்ம் பண்ணிக்கறேன். இருதயங்களில் இயங்கத் தேவையான ரத்தத்தை கொண்டு வரும் நாளங்களின் பெயர் கரோனரி ஆர்டரீஸ். இந்த கரோனரி ஆர்டரீஸில் உண்டாகும் அடைப்புகளால் இதயம் செயலிழக்காமல் போவதன் பெயர் ஹார்ட் அட்டாக்.

இன்னும் கார்டியாக் அரெஸ்ட் பற்றி நீங்கள் சொல்லவில்லை.

சரிதானே?

(பொன்ஸ் பதிவை படித்த பின் எனக்கு குழப்பம். அதனால்தான் இப்படி கேட்டு கன்பர்ம் செய்து கொள்கிறேன்.)

 
At 6:17 PM, Blogger VSK said...

மிக்க நன்றி, திரு. வெற்றி.

படங்கள் இணைக்க ஆசைதான்!
அது தெரிந்தால் நான் ஏன் இப்படி இருக்கிறேன்.:))

முயல்கிறேன், அடுத்த பதிவுகளில்!

 
At 6:20 PM, Blogger VSK said...

நீங்க ஏதோ வில்லங்கமா கேக்கறீங்கன்னு புரியுது, கோவியாரே!

இதயமே இல்லாதவர்கள் மற்ற காரணங்களில் இறக்கக்கூடும்!

ரொம்ப கஷ்டப்பட்டு சாவாங்கன்னு நினைக்கிறேன்!

 
At 6:23 PM, Blogger VSK said...

இரண்டும் சரிதான், கொத்ஸ்!

இன்னும் கார்டியாக் அரெஸ்ட் பற்றி சொல்லவில்லை.

அடுத்த பதிவில் சொல்லுகிறேன்.

வருகைக்கு நன்றி.

 
At 8:00 PM, Blogger சிறில் அலெக்ஸ் said...

அடுத்த மருத்துவத் தொடரா.. இதயத்த கவர்ந்துருவீங்களே.

:)

 
At 8:01 PM, Blogger நாமக்கல் சிபி said...

ஆஹா! தொடர் ஆஅம்பித்து விட்டீர்கள்!

மிக்க மகிழ்ச்சி!
மிகவும் பயனுள்ள தொடராக இருக்கும் என்பதில் ஐயமில்லை!

 
At 8:02 PM, Blogger நாமக்கல் சிபி said...

காதலில் சிக்கிக் கொண்டவர்கள் இதயம் தொலைந்துவிட்டதாகச் சொல்கிற்களே!

அது உண்மையா?

 
At 8:07 PM, Blogger சேதுக்கரசி said...

புரியறா மாதிரி எழுதியிருக்கீங்க.. நன்றி. தொடருங்கள். மாரடைப்பு பத்தி எழுதும்போது கொலஸ்டிரால் பத்தியும் எழுதுவீங்கன்னு நம்பறேன்.

 
At 8:26 PM, Blogger VSK said...

எல்லாம் நீங்கள்லாம் கொடுக்கற தைரியத்துலதான், சிறில்!
நன்றி!

 
At 8:29 PM, Blogger வெற்றி said...

SK ஐயா,
சும்மா இதயத்தின் படம் போடாது, துடிக்கும் இதயப் படம் போட்டு கலக்கிவிட்டீர்கள். பொன்ஸின் பதிவுக்கும் தொடுப்பு கொடுத்துள்ளீர்கள்.
இங்கே கனடாவில் , புற்றுநோய், மாரடைப்பு ஆகிய நோய்களால் தானாம் ஒவ்வொரு வருடமும் அதிகமானோர் இறக்கிறார்கள்.
மிக்க நன்றி.

 
At 8:30 PM, Blogger VSK said...

'பயனுள்ள தொடர்'னு சொல்லிட்டு, உடனே வில்லங்கமா ஒரு கேள்வி!

எப்பிடீங்க , சிபியாரே, இதெல்லாம் முடியுது!

இந்த இதயத்திற்கு வெறும் ரத்தத்தை அனுப்பும் வேலை மட்டுமே!

அதற்குள் இருக்கும் வேறு உணர்வுகளைப் பற்றி, கவிஞரான நீங்கள்தான் சொல்லணும்!

 
At 8:32 PM, Blogger VSK said...

கொலெஸ்ட்ரால் பற்றியும் எழுத உள்ளேன், சேதுக்கரசி அவர்களே!

வருகைக்கு நன்றி.

 
At 8:38 PM, Blogger VSK said...

நீங்கள் சொன்னதின் பேரில் நண்பர் ஒருவரின் துணையுடனும், என் மனைவியின் ஒத்துழைப்புடனும் இதை செய்ய முடிந்தது, திரு. வெற்றி.

தலைப்புக்கு ஏற்றவாறு ஒரு படம் போட எண்ணி......!!:))

நீங்கள் சொல்லியிருக்கும் தகவலும் உண்மையே!

 
At 8:49 PM, Blogger நாமக்கல் சிபி said...

//இந்த இதயத்திற்கு வெறும் ரத்தத்தை அனுப்பும் வேலை மட்டுமே!
//

ஆனால் உணர்ச்சிவசப்படக்கூடிய/ அதிர்ச்சி தரக் கூடிய செய்திகளை இதய நோயாளிகளிடம் தெரிவிப்பது கூடாது என்று சொல்கிறார்களே! அது எதனால்?

திரைப்படங்களிலெல்லாம் தான் முழுக்க ஏமாற்றப்பட்டுவிட்டதாக அறியும் ஜமீந்தார்கள், பணக்காரர்கள் உடனடியாக நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சாய்கிறார்களே!

உ.ம்: படையப்பா சிவாஜி கணேசன்.

 
At 6:31 AM, Blogger VSK said...

சேதுக்கரசி,
அந்த 'நக்கிரனின் ஸ்டெம் செல்' பதிவின் சுட்டி தர முடியுமா?
நன்றி.

 
At 6:34 AM, Blogger VSK said...

சிபியாரே,
ஏற்கெனவே பழுதடைந்த இதயத்திற்கு மேலும் அதிர்ச்சி தரும் செய்திகள் அதிர்வை உண்டாக்கி ரத்த ஓட்டத்தில் அடைப்பான்களை உருவாக்கும் சாத்தியக்கூறு இருப்பதாலேயே அவ்வாறு சொல்கிறார்கள்.

இது பற்றி பதிவில் மேலும் வரும்!

 
At 6:42 AM, Blogger Sivabalan said...

SK அய்யா

அருமையான தொடர்.. கலக்கல்..

நிறைய விசயங்களை தெரிந்துகொள்ள வாய்ப்பு..

வாழ்த்துக்கள்

 
At 6:49 AM, Blogger VSK said...

மிக்க நன்றி, சிபா.

 
At 6:58 AM, Blogger இராம்/Raam said...

ஐயா,

உள்ளே வரலாமா???

 
At 6:59 AM, Blogger ஓகை said...

அற்புதமான, மிகவும் தேவையான பதிவு.

ஒரு தெளிவு வேண்டும்.

//உங்களுக்கு எதிர் தோற்றம் இது! உங்களது இடது, வலது அல்ல!//

இது குழப்புகிறது.

நான் காணும் படம் எனக்கு முன்னே தன் முதுகைக் காட்டிக்கொண்டு இருப்பவரின் இதயமா அல்லது என் முகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவரின் இதயமா?

தெளிவு பெற வேண்டி கேட்கப்பட்ட கேள்வியே குழப்பும் வகையில் இருந்தால் மீண்டும் இதையே வேறு மாதிரி கேட்கிறேன்.
****
//சிலருக்கு இதயமே இல்லை என்கிறார்களே ?
அவர்களுக்கெல்லாம் ஹார்ட் அட்டாக் வராதா ?//

ஆனால் வரவேண்டும் என்று பலர் விரும்புவார்கள்!

//காதலில் சிக்கிக் கொண்டவர்கள் இதயம் தொலைந்துவிட்டதாகச் சொல்கிற்களே!//

எல்லாவற்றையும் தொலைத்தவர்கள் இதயம் தொலைந்ததை மட்டும் கண்டுபிடிப்பார்கள். துடித்து.

 
At 7:10 AM, Blogger Unknown said...

டாக்டரிடமிருந்து புதிய பயனுள்ள அறிவியல் தொடர். நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா.

தொடர் நிற்காமல் தொடரவும், தொடர்ந்து இன்னும் பற்பல பயனுள்ள அறிவியல் மற்றும் மருத்துவச்செய்திகளைத் தரவும் கேட்டுக் கொள்கிறேன்.

 
At 7:31 AM, Blogger VSK said...

இப்படி ஒரு வரி செய்தியாகவே இன்னும் எத்தனை முறை தொடர்வதாக எண்ணம், திரு. ராம்!

தாராளமா வாங்க!

:))

 
At 7:34 AM, Blogger VSK said...

எதிர்த் தோற்றம் என்றால் நீங்கள் உங்களைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்வது போல, திரு. ஓகை!!

நல்ல சிரிக்க, சிந்திக்க வைக்கும் பதில்கள், இந்தக் கேள்விகளுக்கு!

:))

மிக்க நன்றி!

 
At 7:35 AM, Blogger VSK said...

வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி, திரு. சுல்தான்!

 
At 7:40 AM, Blogger ஓகை said...

அப்படியானால் என் எதிரே என்னைப் பார்த்தவாறு நிற்பவ(னி)(ளி)ன் இதயம் துடிப்பதையே அந்தப் படத்தில் நான் நேராகப் பார்க்கிறேன். சரிதானே!

 
At 7:48 AM, Blogger VSK said...

கண்ணாடித் தோற்றம் என்றால் உங்களைத் தவிர வேறு யார் அங்கு நிற்கமுடியும், ஓகையாரே!:))

ஆசைதான்!

 
At 7:50 AM, Blogger இராம்/Raam said...

//இப்படி ஒரு வரி செய்தியாகவே இன்னும் எத்தனை முறை தொடர்வதாக எண்ணம், திரு. ராம்!//

ஐயா,

என்ன பண்ண.. எனக்கு இந்த மருந்துவத்தை பத்தி ஒன்னும் தெரியாது... 11'ம் வகுப்பிலிருந்தே கம்ப்யூட்டர் பிரிவை சேர்ந்தவன்.

டாக்டர் மருந்து கொடுந்தா வாங்கி சாப்பிடுவேன்.. இதெல்லாம் நோய்களுக்கு உண்டான அறிகுறிகள், இன்னும் என்னன்னா சொல்லுவாங்களா அதேயேல்லாம் கேட்டுக்கேவேன்....

அவ்வோளோதான் எனக்கு அறிவு...
:(

 
At 7:50 AM, Blogger இராம்/Raam said...

//இப்படி ஒரு வரி செய்தியாகவே இன்னும் எத்தனை முறை தொடர்வதாக எண்ணம், திரு. ராம்!//

ஐயா,

என்ன பண்ண.. எனக்கு இந்த மருந்துவத்தை பத்தி ஒன்னும் தெரியாது... 11'ம் வகுப்பிலிருந்தே கம்ப்யூட்டர் பிரிவை சேர்ந்தவன்.

டாக்டர் மருந்து கொடுந்தா வாங்கி சாப்பிடுவேன்.. இதெல்லாம் நோய்களுக்கு உண்டான அறிகுறிகள், இன்னும் என்னன்னா சொல்லுவாங்களா அதேயேல்லாம் கேட்டுக்கேவேன்....

அவ்வோளோதான் எனக்கு அறிவு...
:(

 
At 7:52 AM, Blogger VSK said...

நான் சும்மா தமாஷுக்குக் கேட்டேன், திரு. ராம்!

தவறாக எண்ண வேண்டாம்!!

:))

 
At 9:35 AM, Blogger SP.VR. SUBBIAH said...

எஸ்.கே சார்!

உங்கள் பதிவு நன்றாக உள்ளது. ஒவ்வொரு பதிவாளரும் படித்துப் பயனடைய வேண்டியது.

பாராட்டுக்கள்!

எனக்கு உங்கள் பதிவிலுள்ள அந்த இயங்கும் இதயத்தின் படம் மிகவும் பிடித்திருக்கிறது.

எனக்கு தெரிந்ததெல்லாம் கண்ணதாசன் பாடல்களில் எழுதுவாரே அந்த இதயம்தான்.(மனசு)!

SP.VR.SUBBIAH

 
At 10:08 AM, Blogger நாமக்கல் சிபி said...

தொடரில் ஒவ்வொரு பதிவின் முடிவிலும் அடுத்த பகுதிக்கான சுட்டியைக் கொடுங்கள்
பின்னர் படிப்பவர்களுக்கு தொடரின் ஆரம்பப் பகுதியின் சுட்டியைக் கொடுத்தால் போதுமானதாக இருக்கும் அல்லவா?

(அடுத்த பகுதியை எழுதி பதிவிட்டவுடன் முதல் பகுதியின் இறுதியில் இச்சுட்டியைக் கொடுக்கவும்)

 
At 10:43 AM, Blogger VSK said...

நீங்களெல்லாம் வந்து பாராட்டுவது மிகவும் மகிழ்வாய் இருக்கிறது.
நன்றி, ஆசானே!

 
At 10:44 AM, Blogger VSK said...

நல்ல யோசனை!

அப்படியே செய்கிறேன், சிபியாரே!

உங்கள் இதயத்தில் [பதிவில்!!] இதற்கு இணைப்பு கொடுத்ததற்கும் நன்றி!

 
At 8:51 PM, Blogger பொன்ஸ்~~Poorna said...

ஆகா.. போட்டோவோட இறங்கியாச்சா..
கலக்குங்க :)))

 
At 9:16 PM, Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

SK ஐயா, தாமதமாகத் தான் இந்தப் பதிவிற்கு வர முடிந்தது! மன்னிக்கவும்!
அருமையான தொடருக்குக் காத்துள்ளேன்; தாருங்கள்! படிக்கிறோம்; படித்து விட்டு தேவைப்படுபவருக்கும் சொல்கிறோம், உங்க பேரைச் சொல்லி!

 
At 9:29 PM, Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

////வலது பக்கம் கெட்ட ரத்தத்தை வாங்குகிறது.
இடது பக்கம் நல்ல ரத்தத்தை அனுப்புகிறது//

இது பதிவுக்கு அவ்வளவாகத் தொடர்பு இல்லாத பின்னூட்டம் எனில் மன்னிக்கவும்;
அண்மையில் சுப்ரபாதப் பதிவுகளில், உலக அன்னை, இறைவனின் மார்பில் ஏன் இருக்கிறாள் என்ற கருத்துப் பரிமாற்றம் நடந்தது! பின்னர் குமரனும் ஒரு தனிப்பதிவே இதற்காக இட்டார்!

நீங்கள் சொல்வதைப் பார்க்கும் போது இப்படியும் தோன்றுகிறது (ஒரு நயத்துக்காக)!
வடிவாய் நின் வல மார்பில் வாழ்கின்ற அன்னை, கெட்டவரையும் தம் பக்கம் அழைத்து, திருத்தி, நல்லதாய் மாற்றத் தான் வல மார்பு அமர்ந்தாளோ?
(எப்படி வலப்பக்கம் கெட்ட இரத்தத்தை வாங்கி, தூய்மையாக்குதோ, அதே போல)!

 
At 5:53 AM, Blogger VSK said...

ஃபோட்டோ மட்டும் இல்லீங்க, பொன்ஸ்!
சுட்டியும் கூடத்தான்!
கவனிச்சீங்கள்ல!

ஒரு குழந்தையின் உற்சாகத்துடன்!!
:))

 
At 5:54 AM, Blogger VSK said...

மிக்க நன்றி, ரவி!

['திரு'வை தக்க வைத்துக் கொண்டேன்!]

 
At 12:00 PM, Blogger G Gowtham said...

சொல்வதில் முழுமை!
சொல்லில் எளிமை!
நிறைய எழுதவும் ஐயா

 
At 7:44 PM, Blogger VSK said...

முதன் முறையக வந்து பாராட்டியதற்கு மிக்க நன்றி, திரு. கௌதம்ஜி!

 
At 7:50 PM, Blogger VSK said...

//நீங்கள் சொல்வதைப் பார்க்கும் போது இப்படியும் தோன்றுகிறது (ஒரு நயத்துக்காக)!
வடிவாய் நின் வல மார்பில் வாழ்கின்ற அன்னை, கெட்டவரையும் தம் பக்கம் அழைத்து, திருத்தி, நல்லதாய் மாற்றத் தான் வல மார்பு அமர்ந்தாளோ?
(எப்படி வலப்பக்கம் கெட்ட இரத்தத்தை வாங்கி, தூய்மையாக்குதோ, அதே போல)!//

அறிவியலில் ஆன்மீகம் கலந்து அழகுறப் பார்க்கும் கலை உங்களுக்கு மிக இயல்பாக வருகிறது, ரவி!

உங்களைக் குறித்துதான் இன்று மயிலை மன்னார் சொன்னான் போலிருக்கிறது!

மிக அற்புதமான கருத்து!

இப்படியே அடிக்கடி வாங்க!
:))

 
At 12:27 AM, Blogger பொன்ஸ்~~Poorna said...

//ஃபோட்டோ மட்டும் இல்லீங்க, பொன்ஸ்!
சுட்டியும் கூடத்தான்!
கவனிச்சீங்கள்ல!

ஒரு குழந்தையின் உற்சாகத்துடன்!!
:))
//
:))))) உற்சாகம் ஒரு தொற்று நோய் :)))

இதைப் படிச்சிட்டு நானும் உற்சாகமாய்ட்டேன் :)))

 
At 1:31 AM, Blogger ரவி said...

எஸ்கே அவர்களே...அருமையான முயற்சி..

எனக்கு நீண்ட நாளா ஒரு சந்தேகம்...

மருத்துவர்கள் நாடி பிடித்து பார்க்கும்போது ஜொரம் / உடம்புக்கு முடியல அப்படீன்னு எப்படி கண்டுபிடிப்பீங்க ?

வாட்சை பார்த்துக்கொண்டே நாடி துடிப்பதை பார்ப்பது எந்த வகையான சூட்சுமம் ?

கொஞ்சம் சொல்ல முடியுமா ?

நாங்களே வைத்தியம் பார்த்துக்கொள்ள அல்ல...ஏதாவது அவசரத்தில் உதவுமே !!!!

 
At 1:48 AM, Anonymous Anonymous said...

எஸ் கே ஐயா!
ஒரளவுக்குத் தானும் "இதய" முள்ளவர்கள் அறிந்து வைக்கவேண்டிய விபரங்கள் அடங்கிய பதிவு. இவ்வளவு தெளிவாகக் கூறுகிறீர்கள். படிக்கக் காத்திருக்கிறேன்.
யோகன் பாரிஸ்

 
At 4:20 AM, Blogger மங்கை said...

SK ஐயா...

அடுத்த மருத்துவ தொடருங்களா...

மகிழ்ச்சி..

அன்புடன் மங்கை

 
At 5:54 AM, Blogger VSK said...

வருகைக்கு நன்றி, மங்கை.

வழக்கம் போல உங்கள் முழுப் பங்களிப்பு இதிலும் இருக்கும் என நம்புகிறேன்.

பாலியல் தொடரில் நீங்கள் அளித்த சிறந்த கருத்துகளுக்கு இதன் மூலம் நன்றி சொல்லிக் கொள்கிறேன்!

 
At 2:53 PM, Blogger Unknown said...

SK Sir,
சில கேள்விகளை கேட்டு பின்னுட்டம் இட்டுஇருந்தேன். கிடைத்ததா?

 
At 3:30 PM, Blogger VSK said...

நீங்கள் இரண்டாம் பதிவில் கேட்ட கேள்விதானே, திரு. மணி ப்ரகாஷ்?

அதற்கு அந்தப் பதிவில் சொல்லியிருக்கிறேனே!

வேறு மடல் ஒன்றும் வரவில்லையே!

 
At 10:39 AM, Blogger தேசாந்திரி said...

மிகவும் தேவையான கட்டுரைகள். தமிழில் மருத்துவம் பற்றிய கட்டுரைகளைத் தொடர்ந்து தாருங்கள். மிக்க நன்றி.

 
At 12:22 PM, Blogger VSK said...

நீங்கள் அளிக்கும் ஊக்கத்திற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி, 'தேசாந்திரி' அவர்களே!

 
At 10:58 AM, Blogger சேதுக்கரசி said...

Hidden Epidemic: Heart Disease in America
http://www.pbs.org/wgbh/takeonestep

இந்த 2 மணிநேர நிகழ்ச்சியை நேற்று PBS தொலைக்காட்சியில் பார்த்தது மிகவும் உபயோகமாயிருந்தது. தொலைக்காட்சியிலோ வலைத்தளத்திலோ தகவல்களைப் பெற்று அனைவரும் பயன்பெறலாம் என்று இதை அனுப்புகிறேன். தொலைக்காட்சியில் மறு ஒளிபரப்பு நேரங்கள் மேற்கண்ட தளத்தில் உள்ளன.

 

Post a Comment

<< Home