"லப்-டப்" [4] "இவருக்கே பாட்டா!"
"லப்-டப்" [4] "இதயத்திற்கே ரத்தமா"
"கரோனரி நாளங்கள்" [Caronary Arteries]
உடலின் பல பாகங்களைப் போலவே, இதயமும் திசுக்களால் ஆன ஒன்றே! அதற்கும் பிராணவாயுவும்,[Oxygen] மற்ற சத்துப் பொருள்களும் [Nutrients] வேண்டும்!
அட! இது என்னய்யா புதுக்கதை! "இவருக்கே பாட்டா" என்று நம் பாடகர் எஸ்.பி.பி.யைப் பார்த்து 'காதலன்' படத்தில் ஒரு வசனம் வருமே, அதைப் போல, ரத்தத்தையே அனுப்பும் இதயத்திற்கு இதெல்லாம் தேவையா என ஒரு கேள்வி எழலாம்!
ஆனால், "ஆறு முழுதும் நீர் ஓடினாலும், நாய் நக்கித்தான் குடிக்கணும்" என்பதைப் போல, இதயம் முழுதும் ரத்தம் நிரம்பிக் கிடந்தாலும், அதற்குத் தேவையான சத்துக்களை, அதுவும் சில ரத்தக் குழாய்கள் அனுப்பும் ரத்தத்தின் மூலமே பெற்றுக் கொள்ள முடியும்!
அவற்றைச் செய்வது "கரோனரி நாளங்கள்" [Caronary Arteries] என அழைக்கப்படும் ரத்தக் குழாய்கள்!
மஹாதமனி[Aorta]யிலிருந்து பிரியும் இரு கரோனரி நாளங்கள் இதயத்திற்கு ரத்தத்தின் மூலம், பிராணவாயுவையும், மற்ற சத்துப் பொருள்களையும் அளிக்கின்றன.
1. வலது கரோனரி நாளம் [Right Caronary Artery, RCA] வலது ஆரிக்கிளுக்கும், வலது வெண்ட்ரிக்கிளுக்கும் ரத்தத்தைக் கொடுக்கிறது. இது இன்னொரு பிரிவாகப் பிரிந்து இடது வெண்ட்ரிக்கிளின் கீழ்ப்பகுதிக்கும், இதயத்திற்குப் பாதுகாப்பாக மூடியிருக்கும் 'ஸெப்டம்" [Septum] என அழைக்கப்படும் ஜவ்வு சதைக்கும் ரத்தத்தை Posterior Descending Artery[PDA] மூலம் அனுப்புகிறது.
2. இன்னொரு பிரிவான இடது கரோனரி நாளம் [Left Main Caronary Artery] இரு பிரிவுகளாகப் பிரிகிறது.
[அ] இடது ஆரிக்கிளுக்கும், இடது வெண்டிக்கிளின் பக்கங்களுக்கும், பின் பகுதிக்கும் சர்க்கம்ஃப்ளெக்ஸ்[Circumflex artery] நாளமும்,
[ஆ] இடது வெண்ட்ரிக்கிளின் முன் பகுதிக்கும், கீழ்ப் பகுதிக்கும், 'ஸெப்டத்தின்' [Septum] முன் பகுதிக்கும் Left Descending Artery [LDA], எனும் நாளமும்
ரத்தத்தைக் கொடுக்கிறது.
இவை அனைத்தும், மேலும் பல சிறு சிறு நாளங்களாகப் பிரிந்து கிடக்கின்றன.... சும்மா!
ஆம்! இவை எல்லாம் சாதாரணமாக இதயம் இயங்கும் போது, முழுதுமாக மூடிக் கிடக்கும்!
இதயத்திற்குத் தேவையான ரத்தம் சரியான முறையில், பிராணவாயுவை அனுப்ப இயலாத நிலையில், இவைகளில் சில திறந்து, தேவையான ரத்தத்தை இதயத்திற்கு அனுப்பும் வேலையை மேற்கொள்ளும்.
அதாவது, இதயத்தின் முக்கிய நாளங்களில் ஏதேனும் அடைப்பு [block] ஏற்படும்போது, இந்த துணை நாளங்கள்[collaterals] திறந்து, அடைப்பைத் தாண்டி [bypass] இதயத்திற்குத் தேவையான ரத்தத்தைத் தடையின்றி அனுப்பும் வேலையை மேற்கொள்ளுகின்றன.
இதயம் பழுதுபடாமல் ஒழுங்காக இயங்க இந்த ஏற்பாடு உதவுகிறது!
அவ்வளவுதாங்க! இன்னும் ஒரே ஒரு பதிவு, ரத்தம் என்றால் என்ன என்பதைப் பார்த்தபின்,
இவற்றில் ஏற்படக்கூடிய கோளாறுகளைப் பார்க்கலாம்!
படங்கள் பதிவதில் சில காப்பிரைட்[copyright] ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறேன்!
அவை வந்ததும், பதிகிறேன்!
16 Comments:
//அதாவது, இதயத்தின் முக்கிய நாளங்களில் ஏதேனும் அடைப்பு [block] ஏற்படும்போது, இந்த துணை நாளங்கள்[collaterals] திறந்து, அடைப்பைத் தாண்டி [bypass] இதயத்திற்குத் தேவையான ரத்தத்தைத் தடையின்றி அனுப்பும் வேலையை மேற்கொள்ளுகின்றன.
இதயம் பழுதுபடாமல் ஒழுங்காக இயங்க இந்த ஏற்பாடு உதவுகிறது!
//
இதயம் பழுதும் படும்போது இந்த மாற்று ஏற்பாடு ஆச்சரியமாக இருக்கிறது.
கட்டுரையின் மூலம் நல்ல தகவல் கொடுத்த எஸ்கே ஐயாவுக்கு பாராட்டுக்கள்
//இதயத்திற்கே ரத்தமா//
:-)
வாங்க கோவியாரே!
அதுக்காக ரொம்ப ஆடவேணாம்!
:)-:
நன்றி.
இந்தப் புன்னகை என்ன விலை?
நன்றி, சேதுக்கரசி அவர்களே!
வெறும் புன்னகையோடு நிறுத்தி விட்டீர்களே!
படிச்சிட்டேன்,அடுத்த விபரத்திற்காக காத்திருக்கிறேன்.
நன்றி
நன்றி, வடுவூர் குமார்!
துணை நாளங்கள் பற்றிய செய்தி புதிது எஸ்.கே.
பல முறை அதன் தேவை பரிணாமத்தின் போது ஏற்பட்டிருக்கும் போலிருக்கிறதே. அதனால் தானே அந்த மாற்று ஏற்பாடு இதயத்திற்கு இருக்கிறது. வியப்பான செய்தி தான்.
இது பரிணாமத்தினால் ஏற்பட்டதாகக் கருதவில்லை, குமரன்.
முதலில் இருந்தே இந்த ஏற்பாடு இருந்திருக்கிறது.
//வெறும் புன்னகையோடு நிறுத்தி விட்டீர்களே!//
ஃபிஸியாலஜி மற்றும் மருத்துவத் துறையில் சில விசயங்கள் தான் எனக்குத் தெரியும் (நக்கீரன் பதிவில் நீங்கள் பார்த்திருக்கலாம்) இருதயம் சம்பந்தப்பட்டதில் உருப்படியான மறுமொழியிடும் அளவுக்கெல்லாம் எனக்குத் தெரியாது (ஹிஹி) அதான் தொடருக்கு நன்றி, உள்ளேன் ஐயா என்ற வகையில் புன்னகை மட்டும் :-)
நான் சும்மா விளையாட்டாகக் கேட்டேன், சேதுக்கரசி அவர்களே!
தவறாக எண்ண வேண்டாம்.
************
பதிவுக்கு சம்பந்தமில்லா ஒரு கேள்வி!
உங்கள் பெயரின் சிறப்பை நீங்கள் அறிவீர்களா?
மற்ற எல்லாப் பெயர்களுக்கும், உங்கள் பெயருக்கும் இடையே ஒரு தனிச் சிறப்பு இருப்பதாக நான் உணர்கிறேன்.
முடிந்தால் பதிலிறுக்கவும்!
:))
சோதனைப் பின்னூட்டம் (நேற்று மறுமொழியிட்டேனா என்று நினைவில்லை)
துணை நாளங்கள், ஒரு சிறுநீரகம் பழுதானாலும் இயங்க மற்றொன்று. இது போல் இன்னும் எத்தனையோ. இதையும் மீறி தன் உடம்பை கெடுத்துக் கொள்ளும் மனிதனை என்ன சொல்வது? :(
எஸ்.கே. அவர்களே, என் பெயரின் தனிச் சிறப்பு நானே! (அப்படின்னு சொல்லிக்க ஆசை தான்!) இது ஒரு தமிழ்ப் பெயர் என்பதே இதன் சிறப்பாகக் கருதுகிறேன். சரி, நீங்கள் சொல்லுங்கள்! (முன்பே மறுமொழியிட்டேனா என்று நினைவில்லை, எனவே காலதாமதமாக...)
//இதையும் மீறி தன் உடம்பை கெடுத்துக் கொள்ளும் மனிதனை என்ன சொல்வது? :(//
முட்டாள் என்றுதான்!
:))
பெரிதாக ஒன்றுமில்லை. என் மனதுக்குப் பட்டது இதுதான்!
உங்கள் பெயரும், மங்கையர்க்கரசி என அரசியில் முடியும் இன்னொரு பெயரும் மட்டுமே 'சேதுக்கு, மங்கையர்க்கு' அரசி என வருவதை உணர்ந்தேன்.
மற்றப் பெயர்கள் எல்லாம் இதுபோல் வினைஉருபுடன் வருகிறதா எனத் தெரியவில்லை.
மற்றபடி, உங்கள் பெயரின் சிறப்பு நீங்களே என்பதை அப்படியே ஒப்புக் கொள்கிறேன்!
:)
புத்தாண்டு வாழ்த்துகள்!
புத்தாண்டுக்கு ஊர் சுத்த போனதால் லேட் ஆயிடுச்சு..
புத்தாண்டு வாழ்த்துகள். அடுத்த பதிவும் வந்துடுச்சு படிக்க போறேன்...
Post a Comment
<< Home