"பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்!"
"பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்!"
என் இனிய நண்பர் கோவி. கண்ணன் பாலியல் பற்றிய கேள்விகளுக்கு நான் பதில் அளிக்க வேண்டுமெனக் கேட்டிருக்கிறார். அவரது வேண்டுகோளை ஏற்று, என்னால் முடிந்த அளவில் இங்கு பதிலிறுக்க முயற்சிக்கிறேன். அவருக்கு எனது நன்றி.
இங்கு சொல்லப்படுபவை எல்லாமும், மருத்துவக் குறிப்புகளும், ஆய்வுகளும் சொல்வதை வைத்தே நான் இடுகிறேன் என்பதையும், உங்கள் மருத்துவரைக் கலந்து ஆலோசிப்பது மிகவும் முக்கியம் என்பதையும் மனதில் கொள்ளவும். இவையெல்லாம் ஒரு தகவலுக்கு மட்டுமே! முடிந்தவரையில், உண்மைக்கு மாறாக எதையும் சொல்லவில்லை என்பதையும் வலியுறுத்துகிறேன்.
கேள்வி -1
டிபிசிடி கேட்ட, விஎஸ்கே ஐயாவிற்கு கேள்வி :
குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்தப் பிறகு தேவைப்பட்டால் பின்னாளில் மீள்பெற வழியுண்டா..(இருபாலர்க்கும்)...?
கசடற: இது ஒரு சிக்கலான கேள்வி!
ஏனென்றால் ஆண்களுக்கு செய்யப்படும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கும், பெண்களுக்கு செய்யப்படுவதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.
ஆண்களுக்குச் செய்யப்படும் அறுவை சிகிச்சை,[vasectomy] விந்தணு [sperm] வரும் குழாயை மட்டும் துண்டிப்பதால் நிகழ்கிறது. இதை அநேகமாக திருத்தி அமைக்க முடியும். ஏனென்றல், இது விரைப்பைக்குள்[scrotum] இருப்பதாலும், இந்தாக் குழாய் நீளம் அதிகம் இல்லாமல் இருப்பதாலும். நூற்றுக்கு தொண்ணூறு பேருக்கு இதை வெற்றிகரமாக திருத்தக் கூடிய முறைகள் இருக்கின்றன.
பெண்கள் விஷயத்தில் இது சற்று சிக்கலானது. கருமுட்டை[ovum] சினையிலையில்[ovaries] உருவாகி, ஒரு குழாய்[fallopian tubes] மூலம் சினைப்பைக்கு[uterus] வருகிறது. இந்தக் குழாய் இருபுறமிருந்தும் [வலது, இடது] வருகிறது. இவை சற்று நீளமான குழாய்கள் என்பதால், அறுவை சிகிச்சை முடிந்தபின், இவை சுருங்கி விடுவதால், மீண்டும் சேர்ப்பது கடினமாகிப் போகிறது. இங்கு 100க்கு 40 சதவிகிதமே பலனளிக்கிறது. அதுவும் உடனே செய்யப்படுபவர்க்கே!
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்!
அறுத்துக் கொள்வதைவிட, மீண்டும் இணைப்பதற்கு அதிகச் செலவாகும்..... இரு முறைகளிலும்!
கேள்வி-2
குடும்பக் கட்டுப்பாடு செய்வதன் மூலம் உடலுறவில் ஏதேனும் வித்தியாசம் வர வாய்புள்ளதா..?
கசடற: இங்கு ஆண்களைப் பற்றியே கேட்பதாக நினைக்கிறேன்.
இருந்தாலும், இருபாலர்க்கும் பொதுவாகவே சொல்லுகிறேன்.
குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதால், எந்த விதத்திலும்...... ஆமாம்..... எந்த விதத்திலும் உடலுறவு கொள்வதில் வேறுபாடே இருக்க வாய்ப்பில்லை.
ஆனாலும், இதைச் செய்து கொண்டவரின் மனநிலையைப் பொறுத்து இதில் சில வேறுபாடுகள் நிகழ்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இனி தன்னால், ஒரு பெண்ணைக் கருவாக்க முடியாது என்பதால், சிலரது மனநிலை தளர்ந்துபோய், குறி விரைப்பிலிருந்து [erection], முழு உறவு கொள்வது வரைக்கும், பல ஆண்கள் ஒரு தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாகி, உடலுறவில் ஒரு உற்சாகமின்மையைக் கொள்ளுகிறார்களாம்!
பெண்கள் இந்த விஷயத்தில் இன்னமும் அதிகமாகப் பாதிக்கப் படுகிறார்கள் என ஆய்வு சொல்லுகிறது!
தன்னிடமிருந்து ஒரு பெரிய துருப்புச் சீட்டு.... கருத்தரிப்பு என்ற ஒன்று.... பறிபோனதாகக் குமைந்து அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகி, உடலுறவில் ஈடுபாடில்லாமல் போகிறார்கள் என்பது மிகவும் வருந்தத் தக்கது.
இருபாலரும் ஒன்றை நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும்.
இனிக் கருத்தரிக்க உதவமுடியாது என்ற ஒன்றைத் தவிர, வேறு எந்த விதத்திலும் இதனால் குறையே இல்லை.
விரும்பிச் செய்து கொண்ட பின்னர், இப்படி மன வருத்தம் கொள்ளாமல், உடலுறவை மகிழ்வோடு, பயமில்லாமல் அனுபவிக்க இருவரும் புரிந்து கொள்ள வேண்டும்!
கேள்வி - 3
கிரி :
கோவி.கண்ணன் கூறியபடி பார்த்தால், அவரருடைய நண்பர் விலைமாதிடம் சென்றதால் தான் ஆண்மை குறைவு ஏற்பட்டதா?
கசடற: முழுக்க முழுக்க தவறான கருத்து இது! விலைமாதிடம் செல்வதால், ஆண்மைக்குறைவு ஏற்பட வாய்ப்பே இல்லை. பாலியல்நோய் வரவே நிறைய வாய்ப்பிருக்கிறது!
கேள்வி -4
ஆமாம் என்றால். விலைமாதிடம் போவதற்கும் அவருக்கு ஆண்மை குறைவு ஏற்பட்டதிற்கும் என்ன சம்பந்தம்?
கசடற: ஒரு சம்பந்தமும் இல்லை!
கேள்வி -5
இல்லை அவருக்கு முன்பே ஆண்மை குறைவு இருந்ததா?
கசடற: எனக்குத் தெரியாது! அப்படி இருந்திருந்தால், எப்படி அடிக்கடி அவரால் அங்கு செல்ல முடிந்தது?!!
கேள்வி -6
அனானி : மருத்துவர் வீஎஸ்கே ஐயா,
கோவி.கண்ணன் பதிவில், யரோ ஒரு நண்பர் 'ஆண்கள் குடும்பக்கட்டுபாடு அறுவை சிகிச்சைக்கு பின் உறவில் ஈடுபடும் ஆண்களுக்கு காற்றுதான் வரும் என்று சொன்னதாகவும், அதைக் கேட்டு சிரித்ததாகவும் சொல்லி இருக்கிறார். அதற்கு பதிலை அவர் சொல்லவில்லை. தாங்கள் ஆண்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை பற்றி விளக்க முடியுமா ?
கசடற: சுருக்கமாகச் சொல்லுகிறேன் இங்கு. ஏனென்றால், இதைப் பற்றி விரிவாக எனது அடுத்த பதிவு வரும்.
ஆண்களுக்குச் செய்யப்படும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மூலம், கருத்தரிக்கச் செய்யும் விந்தணுக்கள்[sperms] உற்பத்தி ஆகும் குழாய்[vas deferans].... இது விரைப்பைக்குள் இருக்கும் விரைவிதைகளில்[testicles in the scrotum] இருந்து துவங்குகிகிறது....... மட்டும் துண்டிக்கப்பட்டு, உடலுறவின் இறுதியில் வெளியாகும் விந்துவுடன் கலக்காமல் இருக்கச் செய்யப் படுகிறது.
இதன் மூலம், விந்தணு கலக்காத விந்து நீர்[semen] மட்டுமே இறுதியில் பாய்கிறது.
எனவே, காற்று மட்டுமே வரும் என்பதெல்லாம் யாரோ விட்ட புருடா! நம்பாதீங்க!
ஆண்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை எப்படி செய்யப் படுகிறது என்பதை விரிவாக விளக்கி பதிவிடுகிறேன்.
Labels: kasadara, Q and A, Sex Education, VSK
27 Comments:
நல்ல காரியம். செய்யுங்கள். மருத்துவர் என்ற முறையில் உங்களால்தான் நிறைவாகச் செய்ய முடியும்!உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
தேவர் மகன் படத்தில் வெறும் காத்துதாங்க வருது என்ற வசனத்துக்குப் பின்னால் இவ்வளவு பெரிய அரசியலா?!! :)))
மனந்திறந்த ஆசிகளுக்கு மிக்க நன்றி ஆசானே!
அங்கே ரேவதி சொன்னது 'வாயில' என்னும் பொருளில் என நினைக்கிறேன், கொத்ஸ்!
இப்ப நீங்க என்ன அரசியல் பண்ணுறீங்க சாமி!:))
விளக்கங்கள் நன்றாக இருக்கு.
நன்றி, திரு.குமார்.
// விந்தணு [sperm] வரும் குழாயை மட்டும் துண்டிப்பதால் நிகழ்கிறது. இதை அநேகமாக திருத்தி அமைக்க முடியும். //
இதைத் துண்டிப்பதால் பயன்படுத்தல் இல்லாததால் தன்னாலேயே நாளடைவில் விந்தணு உற்பத்தி குறைந்துவிடும் என்கிறார்களே ?
கூற்று சரியா
ஒரு விழிப்புணர்வுப் பிரச்சாரம் போலுள்ளது.
சில திரைப் படங்களும் இதே போல் பரவலாக உள்ள சந்தேகங்களை ( ஆங்கில, ஹிந்தி,மற்றும் தமிழ் மொழி மாற்ற படங்கள்) விளக்குவது போல் வந்தன.ஆனால் வழ்க்கம் போல் விளம்பரங்கள் தான் ஒரு மாதிரி இருந்ததால் பெருவாரியான மக்களை அது சென்றடையவில்லை வழக்கம் போல.
//இதைத் துண்டிப்பதால் பயன்படுத்தல் இல்லாததால் தன்னாலேயே நாளடைவில் விந்தணு உற்பத்தி குறைந்துவிடும் என்கிறார்களே ?
கூற்று சரியா//
அடுத்த பதிவு இதனை விளக்கும் கோவியாரே!
//ஒரு விழிப்புணர்வுப் பிரச்சாரம் போலுள்ளது.
சில திரைப் படங்களும் இதே போல் பரவலாக உள்ள சந்தேகங்களை ( ஆங்கில, ஹிந்தி,மற்றும் தமிழ் மொழி மாற்ற படங்கள்) விளக்குவது போல் வந்தன.ஆனால் வழ்க்கம் போல் விளம்பரங்கள் தான் ஒரு மாதிரி இருந்ததால் பெருவாரியான மக்களை அது சென்றடையவில்லை வழக்கம் போல.//
நன்றி நண்பரே!
இது பற்றிய விழிப்புணர்வு இன்னமும் பரவலாக அனைவரையும் சென்றடையவில்லை என்பதே கசப்பான உண்மை!
அரசும் இதைப் பற்றிக் கவலைப்படாமல், கு.க.வில் மட்டிலுமேஅதிக கவனம் செலுத்துகிறது என்பது அதை விடக் கொடுமை!
please write about twins.
1.reason for twins.
2.type of twins.
3.persentage in world
4. multiple births with medicine
5.multiple births w/o that medicines
6.is it related to family history
7.why their behaviour differ from each other
8.even though they are brought up on the same back ground their status(econimical,cultural,behaviour)
is not matching, why
9.in some cases both are having more fighting nature than normal brothers.
10. the films are also showing twins, one as soft and other as cruel.( example: mgr's "neerum neruppum,kudiiruntha kovil,ajit's vaali)
ஐயா ,
நல்ல விளக்கம்......
/இலவசக்கொத்தனார் said...
தேவர் மகன் படத்தில் வெறும் காத்துதாங்க வருது என்ற வசனத்துக்குப் பின்னால் இவ்வளவு பெரிய அரசியலா?!! :)))//
கொத்ஸ்,
நகைச்சுவைக்கு நீங்க சொல்லியிருந்தாலும் சகிக்கலை... :(
அய்யா,
இரு பாலின தன்மைகளும் குழந்தையின் உடலில் ஏற்படுவதை குழந்தைப்பருவத்திலேயே கண்டுபிடிக்க இயலுமா?
கண்டறிந்து சரி செய்ய இயலுமா?
//விலைமாதிடம் போவதற்கும் அவருக்கு ஆண்மை குறைவு ஏற்பட்டதிற்கும் என்ன சம்பந்தம்?
கசடற: ஒரு சம்பந்தமும் இல்லை!//
விலைமாதிடம் சென்றவருக்கு தவறு செய்து விட்டதால் ஏற்பட்ட மனக்குழப்பம், பால்வினை நோய்கள் தாக்கியிருக்கக் கூடுமோ என்ற அச்சம் போன்ற காரணங்களால் ஆண்மைக்குறைவு நிகழ்ந்திருக்கலாம்தானே டாக்டர்.
//please write about twins.//
விரைவில் சொல்லுகிறேன் திரு. விஜய்! நன்றி.
//இரு பாலின தன்மைகளும் குழந்தையின் உடலில் ஏற்படுவதை குழந்தைப்பருவத்திலேயே கண்டுபிடிக்க இயலுமா?
கண்டறிந்து சரி செய்ய இயலுமா?//
இதை ஒரு கேள்வியாக எடுத்துக்கொண்டு, அடுத்துவரும் பதிவுகளில் சொல்லுகிறேன் நண்பரே
//ஐயா ,
நல்ல விளக்கம்...... //
நன்றி, திரு.இராம்!
கொத்ஸ்ஸை விடுங்க!:))
//விலைமாதிடம் சென்றவருக்கு தவறு செய்து விட்டதால் ஏற்பட்ட மனக்குழப்பம், பால்வினை நோய்கள் தாக்கியிருக்கக் கூடுமோ என்ற அச்சம் போன்ற காரணங்களால் ஆண்மைக்குறைவு நிகழ்ந்திருக்கலாம்தானே டாக்டர்.//
ஒரு வக்கீல் போலத் திறமையாகக் கேட்டிருக்கீங்க திரு. சுல்தான்!
நீங்கள் சொன்னதும் உண்மையே!!
நான் சொன்ன பதில் கேள்விக்கு மட்டுமே!
இதில், அந்த நண்பர் அடிக்கடி செல்பவர் எனக் குறிப்பிட்டிருந்தது.
ஆண்மைக்குறைவு வந்திருந்தால், அங்கும் சென்றிருக்க முடியாதே என்னும் கருத்தில்தான் நான் பதில் சொன்னேன்.
நீங்கள் சொல்வதெல்லாம், தெரியாத்தனமாக ஓரிரு முறை சென்றுவிட்டு, அதைத் தவறு ஏனக் குமைபவர்க்கு வர வாய்ப்பு இருக்கிறது!
நன்றி
//விலைமாதிடம் போவதற்கும் அவருக்கு ஆண்மை குறைவு ஏற்பட்டதிற்கும் என்ன சம்பந்தம்?//
இங்கே ஆண்மை குறைவு மனரீதியான தாழ்வு மனப்பான்மை!
மருத்துவர் அதை குறிப்பிடாமல் விட்டது ஏன் என்று தெரியவில்லை.
முதன் முறை விலைமாதுவிடம் செல்பவர்கள் பெரும்பாலும் ”பிரிமெச்சூர் இஜாகுலேசன்” குறையால் அதிர்ச்சிகுள்ளாவார்கள்.
அதே நேரம் அந்த விலைமாதுவும் அவ்வளவுதானா என்று கேட்டுவிட்டால் முடிந்தது. தன்னால் எதுவுமே செய்ய முடியாது என்று மனதளவில் தளர்ச்சி அடைந்து விடுவான்.
80% ஆண்மைகுறைவு மனதளவில் ஏற்படுவதே!
நானே திருமணத்திற்கு மறுத்த எனது நண்பர்களுக்கு கவுன்சிலிங் வழங்கி சம்மதம் சொல்ல வைத்திருக்கிறேன். இப்போதும் எந்த குறையுமில்லாமல் நன்றாக தான் இருக்கிறான்.
உளவியலில் எந்த அளவுக்கு நாட்டம் இருக்கிறதோ அதே அளவு ஆர்வம் உடலியலிலும் தேவை. அதே நேரம் உடலும் உள்ளமும் சேர்ந்தது தான் மனிதன்.
கசடற அய்யா உடலியல் ரீதியாக மட்டும் பதில் சொல்லாமல் கொஞ்சம் உளவியலையும் சேர்த்து பதில் சொன்னால் யாரும் குழப்பம் அடைய மாட்டார்கள் எனபது எனது கருத்து.
//அந்த நண்பர் அடிக்கடி செல்பவர் எனக் குறிப்பிட்டிருந்தது.//
பதிவில் எந்த இடத்திலும் அவ்வாறு இல்லையே!
கோவியார் கொடுத்த உதாரணத்தை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள், திரு. வால் பையன். அந்த குறிப்பிட்ட நபரைப் பற்றி திரு. கிரி எழுப்பிய வினாக்களுக்கு மட்டுமே நான் பதிலளித்தேன். அதனாலேயே என் பதில் அப்படி அமைந்தது, அந்த நிகழ்வுக்குச் சம்பந்தமாக மட்டுமே! பொதுவாக அல்ல.
மருத்துவத்தில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்று, பொதுப்படையாக எந்த ஒரு நபரின் நோயையும் சிகிச்சை அளிக்கத் தீர்மானிக்கக்கூடாது என்பதே!
ஒரே நோய் பல பேர்களைப் பலவிதமாகத் தாக்கி, பலவித விளைவுகளை உண்டாக்கும்.
அந்த வகையிலேயே, எனது பதில் இந்த குறிப்பிட்ட நிகழ்வுக்கு அமைந்தது எனச் சொல்லிக் கொள்ள விழைகிறேன்.
இதைப் பற்றி, திரு. சுல்தான் கெட்ட கேளிவிக்கும் இதே விடையை அளித்திருந்தேன் [உங்கள் பின்னூட்டத்துக்கு மேலேயே இது இருக்கிறது!]என்பதைக் கவனியுங்கள்!
உளவியலாக ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நேரத்தில் அதுவும் கட்டாயமாகச் செய்யப்படும்!
நன்றி!
////அந்த நண்பர் அடிக்கடி செல்பவர் எனக் குறிப்பிட்டிருந்தது.//
பதிவில் எந்த இடத்திலும் அவ்வாறு இல்லையே!//
இதற்கு முந்தைய பதிவில், கோவியார் இட்ட இடுகையின் தொடுப்பு இருக்கும். அதைப் படியுங்கள்! நன்றி.
ஆண்மைகுறைவை நோய் என்று குறிப்பிடுவது எனக்கு சரியாக படவில்லை!
அவருக்கு ஏற்பட்ட சிற்சில உபாதைகள் அவருக்கு ஆண்மைகுறைவை போன்ற தோற்றம் மனநிலையை உருவாக்கியிருக்கலாம்.
நீங்களே தெளிவாக சொல்லியிருந்தீர்கள் அதனால் பால்வினை நோய் தான் ஏற்படும் என்று.
எனது ஆசையெல்லாம் ஆண்மைகுறைவு, விந்து முந்துதல், சுய இன்பம், நாட்டமின்னை, குற்ற உணர்ச்சி போன்ற செக்ஸ் சம்பந்தபட்ட கேள்விகளுக்கு நீங்களாகவே பதில் சொல்லலாம் என்பதே!
நமக்கு வந்திருப்பது என்னவென்றே தெரியாத மக்கள் என்னவென்று கேள்வி கேட்பார்கள், நீங்கள் நேரிடியாக பேசினாலும் சரியாக புரிந்து கொள்ளமுடியும் என்பது என் கருத்து.
//ஆண்மைகுறைவை நோய் என்று குறிப்பிடுவது எனக்கு சரியாக படவில்லை!
அவருக்கு ஏற்பட்ட சிற்சில உபாதைகள் அவருக்கு ஆண்மைகுறைவை போன்ற தோற்றம் மனநிலையை உருவாக்கியிருக்கலாம்.
நீங்களே தெளிவாக சொல்லியிருந்தீர்கள் அதனால் பால்வினை நோய் தான் ஏற்படும் என்று.
எனது ஆசையெல்லாம் ஆண்மைகுறைவு, விந்து முந்துதல், சுய இன்பம், நாட்டமின்னை, குற்ற உணர்ச்சி போன்ற செக்ஸ் சம்பந்தபட்ட கேள்விகளுக்கு நீங்களாகவே பதில் சொல்லலாம் என்பதே!
நமக்கு வந்திருப்பது என்னவென்றே தெரியாத மக்கள் என்னவென்று கேள்வி கேட்பார்கள், நீங்கள் நேரிடியாக பேசினாலும் சரியாக புரிந்து கொள்ளமுடியும் என்பது என் கருத்து.//
உங்களுடன் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.
ஆனால், இங்கே நிலைமை வேறு.
தனக்கு இன்னதென ஒருவர் வரும்போது அவரிடம் பொதுவாகப் பேசுவது எரிச்சலையெ அவருக்கு உண்டுபண்ணும் என்பது என் அனுபவத்தில் கண்டது.
இதெல்லாம் எனக்குத் தெரியாதா என்னும் ஒரு கோபம் வருவது இயற்கை.
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செய்வதே ஒரு முறையான மருத்துவரின் பணி.
அவரது நம்பிக்கையை முதலில் பெற்ற பின்னரே உபதேசம்லாம் வைச்சுக்கணும்.
ஆண்மைக் குறைவு ஒரு நோய் [Condition என்னும் பொருளில்
] எனவே நான் பாடத்தில் படித்திருக்கிறேன். பல காரணங்களினால் இது வரக்கூடும்.
எய்ட்ஸ் மற்றும் பாலியல் கல்வி என்னும் தொடர்களில் இது பற்றிய உபதேசம் நிறையவே சொல்லியிருக்கிறேன்.
இது தனிப்பட்ட ஒருவரின் கேள்விக்கான பதில் என்கிற எல்லையை நான் மீற மாட்டேன்.
பெரியவங்க சொன்னா சரி!
தவறாகக் கொள்ள வேண்டாம்!
நிகழ்வுக்குத் தக்க மாதிரி செய்வது நல்லது என மட்டுமே சொன்னேன்.
மற்றபடி உங்களது அத்தனை கருத்துகளும் மிகச் சரியே!
நன்றி, திரு. 'வால் பையன்'!.
ஐயா
எனக்கு ஒரேஒரு விறைகொட்டை தான் இருக்கிறது, எனக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு இருக்கிறதா? என் ஆண் குறியின் விறைப்பு தண்மை சிறிது நிமிடங்கள் மட்டுமே நீடிக்கிறது. நான் சுய இன்பம் கொண்டால் குறைந்தது 10 முதல் 15 அசைவுகளில் எனக்கு விந்து வெளியேறிவிடுகிறது. எனக்கு திருமணம் செய்ய பயமாக இருக்கிறது, ஒரு வேளை என்னால் குழந்தை கொடுக்கும் சக்தி இல்லாமல் போய்விட்டால் என்னால் ஒரு பெண்ணின் வாழ்கை வினகிவிடுமோ என்ற அச்சம் தோண்டுகிறது. இதற்கு ஒரு நல்ல ஆலோசனை கூறுங்கள்
Post a Comment
<< Home