"பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்" - 5
"பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்" - 5
"நான் ஒரு பெண். பிறப்புறுப்பில் சில நாட்களாக அரிப்பு இருந்து வந்தது. டாக்டரிடம் சென்று ஆலோசனை பெற்றதில் விரைவில் சரியாகிவிடும் என்று சொல்லி ஒரு க்ரீமை தடவச் சொன்னார். ஆனால் தற்போது அரிப்பும் வெள்ளையாக திரவம் போன்ற ஒன்று வடிகிறது வாடையுடன் கடந்த 3 நாட்களாக. இதுவரை உடலுறவு கொண்டதில்லை. அந்த இடத்தில் சிறு புள்ளியாய் கிள்ளியெடுத்தது போன்று இரு இடங்களில் இருக்கிறது. என்னவெண்று தெரியவில்லை. வலி ஏதும் இல்லை ஆனால் அரிப்பு உள்ளது. இதற்கு தீர்வு என்ன? ஆலோசனைகள் சொல்வீர்களா? மருந்துகள் ஏதேனும்??
இதனால் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளேன். வேலையிலும் ஈடுபாடின்றி இருக்கிறேன். கூடிய விரைவில் தங்களிடமிருந்து இதற்கான பதிலை பதிவின் மூலம் எதிர்நோக்கியுள்ளேன். நன்றிகள் பல"
அன்பு சகோதரி!
நீங்கள் கூறியுள்ள குறைந்த பட்சத் தகவல்களை வைத்துப் பார்க்கும் போது, இது ஒன்றும் பயப்படத்தக்க விஷயம் இல்லை எனவே கருதுகிறேன்.
உடலுறவு ஏதும் இல்லை எனச் சொல்வதால், இது ஒரு பால்வினை நோயாக இருக்க வாய்ப்பில்லை.
அரிப்பு, வாடை கலந்த வெள்ளை நிறத் திரவம் என்கையில் இது ஒரு நோய்தான் எனத் தெரிகிறது!
சாதாரணமாக, பெண்களுக்கு பிறப்புறுப்பில் ஒரு வெள்ளை நிறத் திரவம் வரும்
ஆனால், அதில் வாடை இருக்காது.
பாக்டீரியல் வஜைனோஸிஸ் [Bacterial vaginosis], அல்லது க்ளாமைடியா[Chlamydia] கிருமிகளின் தொந்தரவால் பால்வினை[sexullay transmitted diseases] அல்லாத இது போன்ற விளைவுகள் வரலாம்.
அப்போது வாடையுடன் கலந்த வெள்ளை [அ] பழுப்பு நிறத் திரவம் வரலாம்.
அரிப்பும் இருக்கக் கூடும்.
இதற்கு ஃப்லாஜைல்[Flagyl] என்கிற மெட்ரோநிடஸால்[Metronidazole] மாத்திரை மிகுந்த பயனளிக்கும்.
இது க்ரீம் [flagyl cream] வடிவிலும் கிடைக்கும் என்றாலும், ரத்தத்தில் கலந்த கிருமிகளை[bacteria] அழிக்க, மாத்திரை உட்கொள்வதே சிறந்தது.
500 [அ] 750 மில்லிகிராம் மாத்திரைகளை தினம் ஒன்றாக 7 நாட்களுக்கு எடுக்கவும்.
பலனளிக்கும் என நம்புகிறேன்.... நீங்கள் சொன்ன தகவல் அனைத்தும் உண்மையெனில்!
உபயோகித்தபின் தெரிவியுங்கள்!
Labels: kasadara, Q and A on sexology, VSK