"கசடற"

அறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன். முழுக்க முழுக்க இவை என் கருத்துகள் மட்டுமே! முருகனருள் முன்னிற்கும்!

Thursday, October 12, 2006

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" 13

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" 13


"சட்டி சுட்டதடா! கை விட்டதடா!!"

சென்ற பதிவில் சொல்ல விட்டுப் போன ஒரு முக்கியமான நிகழ்வைப் பற்றி சொல்லியபின் மேலே செல்லலாம்.

9, 10 பதிவுகளில் "பாலியல் வன்புணர்வுக் கொடுமை"யைப் பற்றி எழுதியிருந்தேன்.
அதற்கு மிகவும் பலியாகுபவர்கள் இந்த 13 முதல் 17 வயது பிள்ளைகளே!

ஹார்மோன்களின் சுருதி இன்னும் சரியாக சேராத, உடல் என்னும் ஹார்மோனியத்தில் எழுகின்ற அபஸ்வரங்களால் உந்தப்பட்டோ,[ஹரிஹரனுக்கு நன்றி!] செய்வதின் தீவிரம் புரியாமலோ, அல்லது, அதிகாரம், ஆளுமைக்கு உட்படுத்தப் பட்டோ, இவ்வயதுப் பிள்ளைகள் இந்த வன்புணர்வுக்கு கட்டாயப்படுத்த்ப் படுகிறார்கள்.
எனவே, பெற்றோர் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டிய காலம் இது. அவர்கள் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்து வந்து, அந்த பதிவுகளில் சொல்லிய சில ஆலோசனைகளை மனதில் கொள்ளவும்.

மற்றொரு விஷயம்!

நண்பர் மா.சிவக்குமார் தனது இன்றையப் பதிவில் நான் பாலியல் பற்றி விவரித்துச் சொல்லாமல் "மிக அடக்கியே வாசிக்கிறேன்" என்ற ஒரு கருத்தினை வைத்திருக்கிறார்.
இந்தப் பதிவு ஒரு விழிப்புணர்வையும், ஆலோசனைகளையும் சொல்லும் நோக்கில் ஆரம்பிக்கப் பட்ட ஒன்று.
சொல்வதென்றால் ஒரு நூறு கதைகள் இருக்கின்றன.
இது போன்ற கதைகள் ஊடகமெங்கும் விரவிக் கிடக்கின்றன.
சராசரி தகப்பன் தாய் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களைப் பற்றி சொல்லவே எண்ணம்.

விழிப்புணர்வைத் தருகிறேன் என்று தொலைக்காட்சி தொடர்கள் போல அடுத்தவரை எப்படியெல்லாம் கெடுக்கலாம் என்பதை புதுப்புது வழிகளால் சொல்லித் தந்து இது பற்றி ஒரு தவறான கண்ணோட்டத்தை, எண்ணத்தை விதைக்கக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
முன்னரே சொல்லியவண்ணம், பதிவின் இறுதியில் ஒரு சில உபயோகமான சுட்டிகள் தர நினைத்திருக்கிறேன்.
உங்கள் கருத்தை எனக்குத் தெரியப்படுத்தினால் நன்றியுடையவனாக இருப்பேன்.

போதும் முன்னுரை! பதிவைத் தொடர்வோம்! [நன்றி கோவி.கண்ணன் மற்றும் சிறில்]

ஒவ்வொரு நாட்களும் குழந்தை வளர்ப்பில் ஒரு சவால்தான்!
புதுப்புது வண்ணங்களில் அவை நம்மை எதிர் கொள்ளும்!

அப்பாடா! இந்தக் கட்டத்தைத் தாண்டிவிட்டோம், இனிக் கவலையில்லை என ஓய்வெடுக்க முடியாத, ஆனால் ஒவ்வொரு கணமும் இன்பமும், துன்பமும் கலந்து வரும் ஒரு உணர்வுதான் குழந்தை வளர்ப்பென்பது!

இதுவரை நாம் பார்த்த 17 வயதுப் பிள்ளைகளை சமாளித்தது ஒரு வகையில் என்றால், இனி வருவதுதான் மிகவும் கடினமான ஒன்று.
ஏன் சொல்லுகிறேன் என்றால்,
இதுவரை அது உங்கள் பிள்ளை.
ஒவ்வொரு வகுப்பாய் நீங்கள்{!!} வெற்றியடைந்து வந்த போது இருந்த மகிழ்வு, இப்போது வராது.

பாஸோ, ஃபெயிலோ, இத்துடன் அது உங்களை விட்டு விலகப் போகிறது.
தானும் இந்த பூவுலகில் ஒரு அங்கம், தனக்கென ஒரு நிலை இனி எனப் பிரியும் நேரம்!

இதற்குத்தான் இவ்வளவு பாடுபட்டோம்?, வளர்த்து ஒரு ஆளாக வேண்டும் நம் பிள்ளையும் என்று நீங்கள் உழைத்த உழைப்பெல்லாம் ,
"இதற்கா இவ்வளவு உழைத்தோம்? நம்மை விட்டுப் போவதற்கா?" என நீங்களே எண்ணப் போகும் நேரம்!
அந்த அளவிற்கு உங்களை தள்ளுவார்கள் [push] அவர்கள்!

இது பலவேறு முனைகளில் உங்களைத் தாக்குமென்றாலும்,
பாலியல் வழியாக நீங்கள் என்னவெல்லாம் சந்திக்க நேரிடும்;
அதற்கு நீங்கள் எந்த அளவிற்குத் தயாராக இருக்க முயலலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.

இதற்குள், உங்கள் மூலமாகவோ, நண்பர்கள் மூலமோ, வகுப்பறையிலோ பாலியல் பற்றி இதற்குள் அவர்கள் அறிந்திருப்பார்கள்.
ஆனால், எல்லாமும் முழுதுமாகத் தெரிந்து கொண்டிருக்க மட்டார்கள்.
வடிகட்டிய,அல்லது பொறுக்கிய அறிவு [filtered or selective knowledge] என்ற வகையில் தேவைக்கு குறைவாகவோ, அல்லது, மீறியோ பல தகவல்கள் அவர்களுக்குச் சொல்லப் பட்டிருக்கும் இப்போது!

அதனை எல்லாம் சரிபடுத்தி, வகைப்படுத்திச் சொல்லிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு உங்களுடையது!

உடலுறவு ஒண்ணும் தப்பில்லடீ!

'கை அடிச்சா' 60 சொட்டு ரத்தம் வீணாகும்.

அப்பா அம்மால்லாம் பாய் ஃப்ரென்ட்ஸ் வெச்சுக்க எதிரிகள்.

காதல்னா நான் கேட்டதெல்லாம் அவ குடுக்கணும் எனக்கு. அப்பத்தான் அது உண்மையான காதல்.

இந்த வயசுல அந்த சுகம் அனுபவிச்சுப் பாக்கறதுல ஒண்ணும் தவறில்லை.

இது போல பல.

சரி, இதையெல்லாம் எப்படி நிவர்த்திப்பது நீங்கள்?

ஒரு நல்ல தருணம் வரட்டும்; அப்போது பேசிக்கலாம் என ஒத்திப் போட்டால்.... அந்தத் தருணம் வராமலேயே போயிடும்.
இதை ரொம்ப இயல்பா, நடைமுறை நிகழ்வுகள் மூலமாவே அவங்களுக்கு சொல்ல நாம முற்படணும்.
ஒரு விவாதத்திற்குரிய திரைப்படம்,[ உயிர், காதல், எம்[டன்] மகன் போன்ற திரைப்படங்கள்] ஒரு நல்ல ஆரம்பமாயிருக்கும். [அடிக்க வராதீங்க!]வரிசையா இது மாதிரிப் படங்களாவே பாருங்கன்னு சொல்ல வரலை.
ஆனால், இந்த விஷயம் பத்திப் பேச இது உதவும்னு சொல்றேன்.
இது எல்லாத்துலேயும் ஒரு கருத்து இருக்கு.

இதைப் பத்தி இதுக்குள்ளே கல்லூரியில் பேசியிருப்பாங்க இவங்க!
ஒரு சில ஆசீர்வதிக்கப்பட்ட வீடுகளில்,[Blessed homes] இது ஒரு இயல்பாக நிகழும்.
அப்படி நடந்துதான் நம்ம 'மதுரா' இப்படி ஒரு துணிச்சலான, வெளிப்படையான பொண்ணா வெளில வராங்கன்னு நினைக்கிறேன்! [நன்றி மதுரா!]
ஒரு திறந்த மனத்துடன் அணுக வேண்டிய நிகழ்வு [matter] இது.

இப்படி இல்லாத வீட்டில்.....,
இதைப்பத்தி பேசறதை கொஞ்சம் 'அடக்கியே வாசிங்க!' [மா. சிவகுமாருக்கு நன்றி!:)
வலிய இதைப் பத்தி பேச ஆரம்பிக்காதீங்க.

ஏதாவது ஒரு கேள்வி, ஒரு [கமெண்ட்]கருத்து, வந்ததுன்னா மட்டும் பேசுங்க.
இல்லை, ஒரு பொதுவான கருத்தைச் சொல்லி, அதற்கு ஏதாவது பாதிப்பு அல்லது எதிர்வினை [Reaction] இருக்கான்னு பாருங்க.

அப்படி ஏதாவது வந்தா, தனியா அது கிட்ட இதைப் பத்தி பேச்லாம்.
முதலில், அவர்கள் கருத்து என்னவெனப் புரிந்து கொண்டு, அதை ஒட்டி மட்டும் பேசுங்கள்.

காரில் போகும் போதோ, இரவில் சமையல் அறையைச் சுத்தம் செய்ய உதவ வரும் போதோ, இல்லை வாசப்படில ரெண்டு பேரும் தனியா உக்காந்து பேசும் போதோ, இது தொடங்கப் படலாம்.

அப்படிப் பேசறது ஒரு விவாதமா மாறிடாமப் பாத்துக்கோங்க!
அவங்க இதுல தீவிரமா உங்களை உசுப்பேத்துவாங்க!
நீங்கதான் நிதானமா இருக்கணும்!

[அடுத்த பதிவு வரைக்கும் !!]

இன்னும் இருக்கு!

14 Comments:

At 11:33 PM, Blogger கோவி.கண்ணன் [GK] said...

எஸ்கே ஐயா...!

அந்த 17-18 வயதில் பெரியவர்கள் ஆகிவிட்டோம் என்ற நினைப்பு பெரும்பாலோர்க்கும் வந்திருக்கும்.

நான் +12 படிக்கும் போது சில மாணவ நண்பர்கள் தங்கள் காமலீலைகளில் ஈடுபட்ட கதைகளை பெருமையாக சொல்லிக் கொண்டதை கேட்டு இருக்கிறேன்.

அதாவது அந்த வயதில் பெற்றோருக்கு தெரியாமல் / மறைத்து எப்படி பாலுறவில் ஈடுபட முடியும் என்று நன்கு தெரிந்தே இருக்கிறார்கள். அந்த வயதில் செய்வது சரி/தவறு என்பதை தாண்டி உந்துதல் என்ற உணர்வுக்கு சென்று விடுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

 
At 11:50 PM, Blogger இராம்/Raam said...

இப்போதைக்கு உள்ளேன் ஐயா!!!!! மாலையில் வந்து முழுகருத்து சொல்கிறேன்....!!!

 
At 12:17 AM, Blogger G.Ragavan said...

நம்ம பொறுமையா இருந்தாலே பாதிப் பிரச்சனை தீந்து போகும். அது இங்கயும் சரிதான் போல.

இப்பொழுது இருக்கும் முறையிலேயே தொடர் தொடரட்டும்.

 
At 6:23 AM, Blogger மா சிவகுமார் said...

எஸ்கே ஐயா,

முதலில் மன்னிப்பு. நான் நீங்கள் அடக்கி வாசிக்கிறீர்கள் என்று எழுதியது முதல் நான்கு பதிவுகளை மட்டும் படித்து விட்டுத்தான். நீங்கள் பெற்றோருக்கு என்று ஆரம்பித்த உடனேயே சின்ன ஏமாற்றம் வந்து விட்டிருந்தது. இளைஞர்களும், இளைஞிகளும் தாமே புரிந்து கொள்ளும் வகையில் உடற்கூறுகளை எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்திருந்ததால் வந்த ஏமாற்றம்.

படிப்பவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார் என்ற தயக்கம் இருப்பதும் இயல்புதான்.

இன்றைக்கு எல்லா பதிவுகளையும் ஒரே மூச்சில் படித்துப் பார்த்தேன். கொஞ்சம் சுற்றி வளைத்து மனவியல் பார்வையில் எழுதுகிறீர்கள். இது விழிப்புணர்வு உருவாக்க கண்டிப்பாக உதவும். நீங்கள் எல்லா விதமான பிரச்சனைகளையும் நேர்த்தியாக கையாண்டு போகும் பாணியையும், வந்திருக்கும் பின்னூட்டங்களையும் பார்க்கும் போது இது தமிழ் உலகுக்கு ஒரு பெருங்கொடையாக அமையும் என்பதில் ஐயமில்லை.

பிரச்சனைகளை அடியிலிருந்து கையாள வேண்டுமானால் விடலைப் பருவத்துள் நுழைந்துள்ள இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டியதை நீங்கள் எழுதினால் சிறப்பாக இருக்கும் என்று படுகிறது. நான் சின்ன வயதில் பெரிதும் குழம்பியிருந்த போது (+2 படிக்கும் போது) A Marriage Manual என்ற அமெரிக்கப் புத்தகம் கிடைத்தது. அதில் படம் போட்டு எல்லா கேள்விகளுக்கும் விடை கொடுத்து விட்டிருந்தார்கள். அது போல தமிழிலும் ஒன்று உருவாக வேண்டும், அதை தமிழர் பண்பாடு புரிந்த மருத்துவர் எழுதிக் கிடைக்க வேண்டும் என்று விருப்பம்.

அன்புடன்,

மா சிவகுமார்

 
At 10:01 AM, Blogger VSK said...

'காம லீலை' என்று சரியகச் சொல்லியிருக்கிறீர்கல்..... அவர்கள் கண்ணோட்டத்தில்!!

தான் செய்வது இன்னதென்று அறியாத வயதில் ஒரு சாதாரண "முயன்று தோற்றுப்போன",[Tried and failed] அந்தப் பெண்ணால் ஏளனம் செய்யப்பட்ட [ridiculed]ஒரு உடலுறவு அனுபவத்தைக் கூட ஏகப்பட்ட பில்டப் கொடுத்து, பெரிதாகப் பீற்றிக் கொள்வார்கள் இந்த வயதில்.!

கேட்பவர்களும் இதே மனநிலையில் இருப்பாதால் 'ஆ'வென்று வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள்!!

'நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள்' என்று சொல்லியிருக்கிறீர்கள்.

பூனை கண்ணை மூடிக்கொண்டு பூலோகம் இருண்டு போனதாய்ச் சொன்ன கதைதான் இதுவும்!
:))

 
At 10:03 AM, Blogger VSK said...

சொன்னபடி வரணும், ராம்!
:))

முந்தைய பதிவுகளில் இருந்து தப்பித்தபடி இதில் முடியாது!
இன்னும் கலியாணம் ஆகலைன்னா, இந்த வயதை மிக சமீபத்தில் தான் கடந்திருக்கணும்!

உங்க நினைப்பு என்னன்னு வந்து மாலையில் சொல்லணும்!!

 
At 10:06 AM, Blogger VSK said...

பொறுமையென்னும் நகை அணிந்து
பெருமை கொள்ள வேண்டும் பெற்றோர்!

மன்னிக்கணும்.
உங்க கே.பி. சுந்தராம்பாள் பதிவைப் படித்த நினைவில் இருந்து இன்னும் மீளவில்லை
அதனால் அப்படி வந்து விட்டது உடனே!

:))

நன்றி, ஜி.ரா.!

 
At 10:07 AM, Blogger VSK said...

இப்படியே ஒவ்வொரு பதிவா நழுவிக்கிட்டு இருக்கீங்க, வைசா!

நானும் காத்திருக்கிறேன்!

மிக்க நன்றி!

 
At 10:18 AM, Blogger VSK said...

என்னங்க மா.சி. நீங்க !
மன்னிப்பு அது இதுன்னு பெரிய வார்த்தையெல்லாம் போடறீங்க?
[கூடவே, எனக்கும் தமிழ்ல பிடிக்காத வர்த்தை அதுதான்!:))]
[என்ன செல்வன், படிச்சிட்டு மறுபடியும் அலுவலகத்தில் களுக் என்று சிரித்தீர்களா?:))]

என் கருத்தைச் சொல்ல எனக்கு வாய்ப்பளித்தமைக்கு உங்களுக்கு நான் நன்றிதான் சொல்லணும்.

நீங்கள் சொன்னபடி ஒரு தொடரை அடுத்து எழுதலாம் இளைஞர்களுக்காக [இளஞி என்று தனியே சொல்லணுமா?] என்று எண்ணியிருந்தேன்.
முதலில் இதை நேரடியாக அவர்களுக்கே எழுதத்தான் நினைத்தேன்.
ஆனால், என்னை எழுதத் தூண்டிய சிவபாலன், மற்றும் சிலரின் பதிவுகள் நம் பெற்றோர்கள் எந்த அளவிற்குப் புரிதல் இல்லாமல் நடந்து கொள்ளுகிறார்கள் எனக் காட்டியதால், முதலில் அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வைத் தந்து விட்டு பிறகு அதை எழுதலாம் என ஒத்திப் போட்டேன்.

நீங்களே சொல்லுங்கள், அது போன்ற ஒரு பதிவு எழுதி, அது இவர்கள் கையில் இருக்கக் கண்டு பெற்றோர்கள் இவர்களை இன்னும் எப்பெடியெல்லாம் வருத்தி இருப்பார்களோ என?

அதுதான் என் அச்சம்.

இப்போது, பொறுத்துக் களைத்து, நீங்களே சொல்ல ஆரம்பித்திருக்கிறீர்கள் என்பதைப் பார்த்தேன்!
வாழ்த்துகள்.

முருகனருள் முன்னிற்கின், ஒரு நாள் நானும் முயலுவேன்!

உங்கள் பாராட்டுகளுக்கு என் நன்றி.

 
At 10:18 AM, Blogger VSK said...

என்னங்க மா.சி. நீங்க !
மன்னிப்பு அது இதுன்னு பெரிய வார்த்தையெல்லாம் போடறீங்க?
[கூடவே, எனக்கும் தமிழ்ல பிடிக்காத வர்த்தை அதுதான்!:))]
[என்ன செல்வன், படிச்சிட்டு மறுபடியும் அலுவலகத்தில் களுக் என்று சிரித்தீர்களா?:))]

என் கருத்தைச் சொல்ல எனக்கு வாய்ப்பளித்தமைக்கு உங்களுக்கு நான் நன்றிதான் சொல்லணும்.

நீங்கள் சொன்னபடி ஒரு தொடரை அடுத்து எழுதலாம் இளைஞர்களுக்காக [இளஞி என்று தனியே சொல்லணுமா?] என்று எண்ணியிருந்தேன்.
முதலில் இதை நேரடியாக அவர்களுக்கே எழுதத்தான் நினைத்தேன்.
ஆனால், என்னை எழுதத் தூண்டிய சிவபாலன், மற்றும் சிலரின் பதிவுகள் நம் பெற்றோர்கள் எந்த அளவிற்குப் புரிதல் இல்லாமல் நடந்து கொள்ளுகிறார்கள் எனக் காட்டியதால், முதலில் அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வைத் தந்து விட்டு பிறகு அதை எழுதலாம் என ஒத்திப் போட்டேன்.

நீங்களே சொல்லுங்கள், அது போன்ற ஒரு பதிவு எழுதி, அது இவர்கள் கையில் இருக்கக் கண்டு பெற்றோர்கள் இவர்களை இன்னும் எப்பெடியெல்லாம் வருத்தி இருப்பார்களோ என?

அதுதான் என் அச்சம்.

இப்போது, பொறுத்துக் களைத்து, நீங்களே சொல்ல ஆரம்பித்திருக்கிறீர்கள் என்பதைப் பார்த்தேன்!
வாழ்த்துகள்.

முருகனருள் முன்னிற்கின், ஒரு நாள் நானும் முயலுவேன்!

உங்கள் பாராட்டுகளுக்கு என் நன்றி.

 
At 1:57 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

//ஒரு நல்ல தருணம் வரட்டும்; அப்போது பேசிக்கலாம் என ஒத்திப் போட்டால்.... அந்தத் தருணம் வராமலேயே போயிடும்.//

இப்போதான் குமரன் பதிவுல இலவு காத்த கிளியை படிச்சிட்டு வரேன். இங்க நீங்களும் அதையே சொல்லி இருக்கீங்க ஆனா வேற ஒரு விஷயத்திற்கு.

கொஞ்சம் நேரா சொல்ல வேண்டிய விஷயத்துக்கு எதோ ஒரு காரணத்துனால ரொம்ப சுத்தி வளைக்கறீங்களோன்னு தோணுது. என்ன விஷயம்?

 
At 4:29 PM, Blogger VSK said...

என்ன கொத்தனாரே! என்னன்னமோ சொல்றீங்க!
அதான் பதிவோட அரம்பத்திலியே சொல்லிட்டேனே,
18 வயசுக்கு அப்புறம் அவங்க உங்க கட்டுப்பாட்டுக்குள்ளே இருக்காம வெளியே போகத் துடிப்பாங்கன்னு!.
அதனால, வெயிட் பண்ணாம இப்பவே சொல்லிடுங்கன்னு நேராத்தானே சொல்லியிருக்கேன்.
இதப் போயி சுத்தி வளைக்கிறேன்னு சொல்றீங்க?

சில விஷயங்களை அப்புறமா , அப்புறமான்னு ஒத்திப் போடக் கூடாதுன்னு தெளிவாத் தான் சொல்லியிருக்கேன்.

நன்றி.

 
At 6:11 PM, Blogger Sivabalan said...

SK அய்யா,

//முதலில், அவர்கள் கருத்து என்னவெனப் புரிந்து கொண்டு, அதை ஒட்டி மட்டும் பேசுங்கள் //

சரியாக சொன்னீர்கள்..


சரியான பாதையில் தொடரை கொண்டு செல்கிறீர்கள்..

உண்மையில் மிக அருமையாக செல்கிறது தொடர்.

மிக்க நன்றி

 
At 10:34 PM, Blogger VSK said...

தொடர்ந்து படித்து பாராட்டி வருவது குறித்து மகிழ்ச்சி, சிபா.

 

Post a Comment

<< Home