"கசடற"

அறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன். முழுக்க முழுக்க இவை என் கருத்துகள் மட்டுமே! முருகனருள் முன்னிற்கும்!

Saturday, January 27, 2007

"லப்-டப்" 9 -- சாதி உட்பிரிவுகள்

"லப்-டப்" 9 -- சாதியில் உட்பிரிவுகள்!

நாலு வகை பிரிவுகள் ரத்தத்தில் இருக்கிறதென போன பதிவில் சொன்னேன்.

இதற்குள்ளும் உட்பிரிவுகள் இருக்கிறதென அதே "மனு", கார்ல் லேண்ட்ஸ்டைனெர் Carl Landsteiner] 1940-ல், அலெக்ஸாண்டர் வைனெர் [Alexander Weiner] என்பவருடன் சேர்ந்து, கண்டு பிடித்தார்!

இதைப் பற்றிச் சொல்லலாமென நினைத்த போது,

ஏற்கெனவே நம்ம டாக்டர் ராமநாதனும், திருமதி கீதா சாம்பசிவமும் விளக்கமாக சொல்லியிருப்பதை,

"பின்னூட்ட நாயகன்", "பின்னூட்ட ஜாம்பவான்" ,"பின்னூட்ட முன்னோடி", இலவசக் கொத்தனார் என் கவனத்திற்குக் கொண்டு வந்தார்!

இதைவிடச் சிறப்பாகவோ, புதிதாகவோ சொல்ல என்னால் முடியாது என்பதால், அதை உங்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன்

சுட்டி-1

சுட்டி-2

சுட்டி-3

அதைப் படிக்க நேரம் இல்லாதவர்களுக்காக ஒரு சிறு விளக்கம், சுருக்கமாக!

45 தனித்தனி ஆண்டிஜென்களால் நிர்ணயிக்கப்பட்டு, குரோமோசோம் எண் ஒன்றின்[Chromosome #1] ஜீன்களில் நிலை பெற்றுள்ள ஒரு கணிப்பால், நம் அனைவரின் ரத்த குரூப்புகளும், பாசிடிவ் அல்லது நெகடிவ் [posiyive or negative] என மேலும் உட்பிரிவுகளாய்ப் பிரிக்கப் படுகிறது!

எனவே, நாலு சாதிகளும்[A, B, AB, O] ஏ பாசிடிவ், ஏ நெகடிவ், பி பாசிடிவ், பி நெகடிவ், ஏபி பாசிடிவ், ஏபி நெகடிவ், ஓ பாசிடிவ், ஓ நெகடிவ் என எட்டாகப் பிரிகின்றன!!

இதனை ஆர்ஹெச் பாசிடிவ், நெகடிவ் [Rh positive, Rh Negative] எனச் சொல்வர்.

ஆர்ஹெச் தந்தையும், ஆர்ஹெச் தாயும் ஒரு ஆர்ஹெச் பாசிடிவ் குழந்தையையோ, அல்லது ஆர்ஹெச் நெகடிவ் குழந்தையையோ 50/50 என்ற கணக்கில் உருவாக்க முடியும்.

அப்போது, தாயின் நெகடிவ் செல்கள், இந்த பாசிடிவ் குழந்தையின் [பாசிடிவ்] செல்களை அழிக்கும் அபாயம் நிகழ்கிறது.

பொதுவாக, முதல் குழந்தை இதிலிருந்து தப்பித்து விடுகிறது!

ஆனால், இதனால் ஏற்படும் ஆர்ஹெச் ஆண்டிபாடிகள் அடுத்து வரும் பிறப்புகளுக்கு பெரும் ஆபத்தைக் கொடுக்கின்றன!

இது அறிந்தவுடன், ஏழாம் மாதத்திலும், குழந்தை பிறந்த 72 மணி நேரத்துக்குள்ளும் ஒரு தடுப்பு ஊசி போடுவதின் மூலம், தடுக்க முடியும் என்பது இன்றைய மருத்துவ உலகின் சாதனை!

திருமணத்திற்கு முன்னோ, அல்லது கருத்தரிக்கும் முன்னரோ இதைச் சோதனை செய்து கொள்வது மிகவும் முக்கியம்!

அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம்!

14 Comments:

At 7:20 PM, Blogger மங்கை said...

திரு SK

நீங்க கேக்கறதுக்கு முன்னாடியே நான் சொல்லீறேன்..தொடர்ந்து இந்த தொடர பதிச்சுட்டு தான் வரேன்..ஆனா வெளியூர்ல இருந்ததால பின்னூட்ட முடியலை...

Congenital heart disease க்கும் இது போல தடுப்பு ஊசிகள் இருக்கிறதா..
அதைப்பற்றியும் கொஞ்சம் சொல்லலாமே...இதற்கான காரணங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பது உண்மையா...

 
At 7:31 PM, Blogger VSK said...

நான் கேட்க நினைத்த கேஏள்விக்கு, கேட்காமலே பதிலிறுத்ததற்கு மிக்க நன்றி, "மங்கை"!

congenital heart diseases என எதைக் குறிப்பிட்டுகிறீர்கள் எனச் சற்று தெளிவாகச் சொல்கிறீர்களா?

இந்த ஆர்ஹெச் விஷயம் கூட ஒரு வகையில் பார்த்தால், இந்த congenital heart diseases வகையில் சேரக் கூடும்!

குறிப்பாகக் கேட்டால் பதில் சொல்ல எளிதாகும் என நினைக்கிறேன்!

நன்றி!

 
At 7:49 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

//"பின்னூட்ட நாயகன்", "பின்னூட்ட ஜாம்பவான்" ,"பின்னூட்ட முன்னோடி", இலவசக் கொத்தனார் //

இதெல்லாம் உமக்கே ஓவராத் தெரியலை!!

இதில் கேட்க இருந்த கேள்விகள் எல்லாத்தையும் அங்க கேட்டாச்சு. அதனால அடுத்த வாரம் வரை நானும் ஜூட்.

 
At 8:09 PM, Blogger சேதுக்கரசி said...

//இதனால் ஏற்படும் ஆர்ஹெச் ஆண்டிபாடிகள் அடுத்து வரும் பிறப்புகளுக்கு பெரும் ஆபத்தைக் கொடுக்கின்றன!//

நான் கேட்க நினைத்தேன்.. நீங்களே சொல்லிவிட்டீர்கள் :)

 
At 8:18 PM, Blogger VSK said...

அதனால்தான் இப்பதிவுக்கான முழுப் பெருமையையும்ம் உங்களுக்கு, மற்ற இருவர்க்கும் கொடுத்து நன் ஒதுங்கி நிற்கிறேனே!

இதையா ஓவர் எனச் சொல்லுகிறீர், கொத்ஸ்!

 
At 8:19 PM, Blogger VSK said...

நான் சொல்லியதைக் கவனித்துப் பாராட்டியும் விட்டீர்கள், 'சேதுக்கரசி'!

நன்றி.

 
At 6:46 AM, Blogger வெற்றி said...

SK ஐயா,
அடடா, லப்-டப் ஒன்பதாவது பகுதிக்கு வந்துவிட்டதா? ம்ம்ம், 2வது பகுதிக்குப் பின் ஒன்றும் படிக்கவில்லை.
இன்று படிப்போம் என்று அந்தப் பதிவுகளைக் கிளிக் பண்ணினால்,
"We're sorry, but we were unable to complete your request." என்று தகவல் வருகிறது. ஆக, மற்றைய பகுதிகளைப் பின்னர் படிக்க வேண்டும்.
நிற்க. ஐயா, மிகவும் உபயோகமுள்ள பதிவு. என் போல் மருத்துவ தகவல்கள் அறியாத பாமரர்களுக்கு வரப்பிரசாதம் உங்களின் பதிவு.

இந்த வார இறுதியில் தமிழ் முதியோர்களைப் பராமரிக்கும் இல்லத்திற்குப் போகும் போது உங்களின் இப் பதிவுகளைப் பிரதி எடுத்துச் சென்று அவர்களுக்குக் கொடுக்க எண்ணியுள்ளேன். காரணம், அங்குள்ள பலர் ஆங்கிலம் பேச மாட்டார்கள். அதே நேரம், தங்களுக்கு கன[பல] நோய்கள் இருப்பதாகச் சொல்லுவார்கள். அவர்களுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 
At 2:11 PM, Blogger VSK said...

மிக்க நன்றி, திரு. வெற்றி.

இப்போது நான் திறந்து பார்த்தேன்.
எல்லாப் பதிவுகளையும் படிக்க முடிந்தது.

உங்களுக்கு இன்னும் திறப்பதில் சிரமம் இருந்தால், சொல்லவும்.

தனிப் பிரதிகளாய் ஈ-மெயிலில் அனுப்பி வைக்கிறேன்.

நீங்கள் செய்து வரும் நல்ல காரியத்திற்கு என் வாழ்த்துகள்!

 
At 2:33 PM, Blogger மங்கை said...

தாய்க்கு இருக்கும் diabetes,Rubella போன்ற infections, CHD க்கு காரணிகளாக இருக்கலாம் அல்லவா.. இது குழந்தையை தாக்காமல் இருக்க தடுப்பி ஊசிகள் இருக்கின்றனவா..?

 
At 2:36 PM, Blogger மங்கை said...

//பதிவுகளைக் கிளிக் பண்ணினால்,
"We're sorry, but we were unable to complete your request//

நேற்று எனக்கும் இந்த பிரச்சனை இருந்தது.. இப்பொழுது சரியாக இருக்கிறது...

 
At 2:49 PM, Blogger Unknown said...

Good attempt.Should reach more people.But /திருமணத்திற்கு முன்னோ, அல்லது கருத்தரிக்கும் முன்னரோ இதைச் சோதனை செய்து கொள்வது மிகவும் முக்கியம்!/

Is this affordable to poor?If this test turns out to be negative, should the marriage be cancelled?

 
At 4:01 PM, Blogger வெற்றி said...

SK ஐயா,

/* உங்களுக்கு இன்னும் திறப்பதில் சிரமம் இருந்தால், சொல்லவும்.
தனிப் பிரதிகளாய் ஈ-மெயிலில் அனுப்பி வைக்கிறேன். */

இல்லை ஐயா. இப்போது வேலை செய்கிறது. இடைக்கிடை இந்தச் server இப்படி பிரச்சினை தருகிறது.


/* நீங்கள் செய்து வரும் நல்ல காரியத்திற்கு என் வாழ்த்துகள்! */

ஐயோ, நான் ஒன்றும் அங்கு செய்வதில்லை ஐயா. நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் இம் முதியவர்கள் ஆங்கிலம் பேச மாட்டார்கள். அவர்களின் பிள்ளைகளும் எப்போதாவது சென்று பார்ப்பார்கள். பார்த்தாலும் அவர்களுடன் மனம் விட்டுக் கதைப்பார்களோ[பேசுவார்களோ] தெரியாது. அதனால் இவர்கள் வாழ்வில் பெரிய தனிமை. நான் அங்கு செல்வதெல்லாம் அவர்களுடன் சில மணித்தியாலங்கள் பேசிக் கொண்டிருப்பதற்குத் தான்.அவர்களும் மனம்விட்டு தாயகத்தின் அரசியல் நிலவரம் முதல் தமது பழங்கால அனுபவங்கள் எல்லாம் சொல்வார்கள். அக் காலச் செய்திகள் அறிவதற்கு இவர்களை விட வேறு என்ன இருக்க முடியும். எத்த்னை அனுபவங்கள், வரலாறுகள் அவர்களின் வாழ்வில். ஆக அங்கு அவர்களுடன் பேசுவது தான் நான் செய்வது. நான் அங்கு வேறொன்றும் செய்வது இல்லை ஐயா.

 
At 4:09 PM, Blogger VSK said...

நீங்கள் சொன்னவுடன் முதலில் எனக்கும் அப்படீத்தான் வந்தது.
ஒரு 30 நொடி சென்று முயன்ற போது சரியாகி விட்டது!

.....
அந்த முதியவர்களுடன் அமர்ந்து அவர்களுடன் ஆறுதலாய்ப் பேசுவதே ஒரு பெரிய காரியம் திரு. வெற்றி.

இவற்றைத் தொகுத்து ஒரு தொடர் பதிவு எழுதலாமே நீங்கள்!
மிகவும் சுவையாய் இருக்குமென நினைக்கிறேன்!

 
At 7:25 PM, Blogger VSK said...

//தாய்க்கு இருக்கும் diabetes,Rubella போன்ற infections, CHD க்கு காரணிகளாக இருக்கலாம் அல்லவா.. இது குழந்தையை தாக்காமல் இருக்க தடுப்பி ஊசிகள் இருக்கின்றனவா..?//

ஓ, அதுவா!

இருக்கின்றன, 'மங்கை'

இன்னும் ஓரிரு பதிவுகளில் அது பற்றிச் சொல்கிறேன்!

நன்றி.

 

Post a Comment

<< Home